750-வது நாளை கடந்த கார்த்தி உணவகம் – இதுவரை ஒரு இலட்சம் பேருக்கும் மேலாக உணவு வழங்கப்பட்டுள்ளது!”

கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பாக வளசரவாக்கம் தலைமை அலுவலக வாசலில் உணவகம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ரூ.50 மதிப்புள்ள சுவையான பிரிஞ்சி (வெஜிடபிள் பிரியாணி) ரூ.10க்கு வழங்கப்பட்டு வருகிறது. தினமும் 120 முதல் 150 பேர் வரை இங்கு மதிய உணவு சாப்பிட்டு வருகிறார்கள். திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை வாரத்தில் ஆறு நாட்கள் மதியம் 12.30 மணி முதல் 1:30 மணி வரை இந்த உணவகம் செயல்பட்டு வருகிறது. லாப நோக்கம் இல்லாமல் மக்களின் வயிறு பசியைப் போக்குவதற்காக மட்டுமே இந்த உணவகம் தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறது. வேலை தேடும் இளைஞர்கள், ஸ்விக்கி, சோமட்டோ ஊழியர்கள், மாநகராட்சி ஊழியர்கள், சினிமா உதவி இயக்குனர்கள் போன்ற பல்வேறு தரப்பினர் இந்த உணவகத்தில் தினசரி பசியாறி வருகிறார்கள். இந்த உணவகம் தொடங்கி இதுவரை ஒரு லட்சம் பேருக்கு…

Read More

சரத்குமார் வெளியிட்ட ‘தி வெர்டிக்ட்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

இன்று சரத்குமார் ‘தி வெர்டிக்ட்’ என்கிற தமிழ் திரைப்படத்தின் முதல் பார்வை எனப்படும் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். கொலையும் கொலை சார்ந்த புலனாய்வுக் கதையுமாக உருவாகி உள்ள திரைப்படம் தான் ‘தி வெர்டிக்ட்’. இப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடத் தயாராக உள்ளது . இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுகாசினி, வித்யுலேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன்தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ‘தி வெர்டிக்ட்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் கிருஷ்ணா சங்கர். அக்னி என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் மோகன் தாஸ் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார். அவர் படம் பற்றிக் கூறும்போது, ” மர்மங்களும் எதிர்பாராத முடிச்சுகளும் யூகிக்க முடியாத திருப்பங்களும் நிறைந்த திரில்லர் படமாக இந்த ‘தி வெர்டிக்ட்’ திரைப்படம் உருவாகி இருக்கிறது.இது நிச்சயமாக சிலிர்க்கும் உணர்வோடு பார்வையாளர்களை இருக்கை…

Read More