இயக்குனர் ஷாமன் பி பரேலில் எழுதி இயக்கியிருக்கும் படம் வவ்வால். “வவ்வால் ” திரைப்படம் அனைத்து இந்திய மொழிகளிலிருந்தும் பிரபலமான நடிகர்களை ஒன்றிணைத்து, ‘ஆன்டிமாண்ட்ஸ்’ என்ற பதாகையின் கீழ் ஒரு காஸ்மிக் ஆக்ஷன் த்ரில்லராக தயாரிக்கப்படுகிறது. ஒரு திரில்லர் ஆக்ஷன் படமான இந்தப் படம் தமிழ் ,தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக தயாராக இருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இந்தபடத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்திருக்கிறது , வவ்வால் இரவில்தான் அதிகம் இரை தேடி தனது இருப்பிடம் விட்டு வெளியே வரும். அதுபோல இந்த படத்திலும் இரவில் உலவும் மனிதர்களின் மற்றுமொரு பக்கத்தை சுவாரஸ்யமாகவும் ஆக்சன் திரில்லராகவும் கலந்து எடுத்திருக்கிறார்கள். தமிழில் இருந்து நடிகர் முத்துக்குமார், இந்தியாவின் மிகப்பெரிய வில்லன் என்று அழைக்கப்படும் அபிமன்யு சிங், இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான மகரந்த் தேஷ்பாண்டே, மலையாளத்தில்…
Read MoreMonth: December 2025
யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படத்தில், ‘கங்கா’ வாக (Ganga) நடிக்கும் நயன்தாராவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!
யாஷ் நடிக்கும் மிகப்பிரம்மாண்ட படைப்பான ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, மார்ச் 19, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படக்குழு அதன் இருண்ட மர்மமான உலகத்தின் இன்னொரு முக்கிய அத்தியாயத்தை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளது. அதில் முக்கியமாக, நயன்தாரா நடித்துள்ள ‘கங்கா’ கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி பெரும் கவனம் பெற்றுள்ளது. அதிரடி, அழகு, ஆற்றல் என அனைத்தையும் ஒருங்கே தாங்கிய இந்த தோற்றம், யாஷின் கனவுப் படத்தில் நயன்தாரா ஒரு முக்கிய சக்தியாக இருப்பதை உறுதி செய்கிறது. தனித்துவமான நடிப்பு திறமை, உணர்வுப்பூர்வ வெளிப்பாடு மற்றும் வலுவான திரை ஆளுமை கொண்ட நடிகையாக நீண்ட காலமாக கோலோச்சி வரும் நயன்தாரா, டாக்ஸிக் படத்தில் இதுவரை தோன்றாத ஒரு புதிய பாத்திரத்தில் தோன்றுகிறார். இருள் நிறைந்த இந்த உலகத்தில், அவரது இருப்பே…
Read Moreஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் நடிகர் விக்ராந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘LBW- லவ் பியாண்ட் விக்கெட்’ இணையத்தொடர் ஜனவரி 1, 2026 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகிறது!
ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸாக உருவாகியுள்ள ‘LWB- லவ் பியாண்ட் விக்கெட்’ என்ற ஒரிஜினல் வெப் சீரிஸ் மூலமாக நடிகர் விக்ராந்த் ஓடிடியில் அறிமுகமாகிறார். இந்த இணையத்தொடர் ஜனவரி 1, 2026 முதல் பிரத்யேகமாக ஜியோஹாட்ஸ்டாரில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகிறது. இதன் புரோமோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றதுடன் நடிகர் விக்ராந்த் கரியரில் திருப்புமுனை ஏற்படுத்தும் கிரிக்கெட் பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் அவரைக் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். ‘கனா காணும் காலங்கள்’, ‘ஹார்ட்பீட்’ (சீசன் 1 & 2), ‘உப்பு புளி காரம்’, ‘ஆஃபிஸ்’ மற்றும் ‘போலீஸ் போலீஸ்’ ஆகிய நூற்றுக்கும் அதிகமான லாங் ரன் எபிசோட் கொண்ட இணையத்தொடர்கள் ஹாட்ஸ்டாரில் வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து அதே பாணியில் ஆழமான கதை சொல்லலுடன் ரசிகர்களை கட்டிப்போட…
Read More‘மூன்வாக்’ மூலம் நடிகராக அறிமுகமாகும் ஏ.ஆர். ரஹ்மான்!
பிரபல நிறுவனமான Behindwoods Productions தயாரிக்கும் ‘மூன்வாக்’ (Moonwalk) திரைப்படத்தின் 14 கேரக்டர் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. பிரபுதேவா மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம் பல்வேறு வகைகளில் புதுமைகளை கொண்டு வரவுள்ளது. “மூன்வாக்” படத்தின் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால், இசை உலகின் ஜாம்பவான் ஏ.ஆர். ரஹ்மான் முதன்முறையாக நடிகராக இந்தப் படத்தில் தோன்றுகிறார் என்பதுதான். மேலும், இந்த படத்தின் ஐந்து பாடல்களையும் அவரே பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் என்ற தன் வழக்கமான அடையாளத்தைத் தாண்டி, “ஒரு கோபமான இளம் திரைப்பட இயக்குநர்” என்ற கதாபாத்திரத்தில் அவர் தோன்றுவது ரசிகர்களுக்கு ஒரு பெரிய ஆச்சரியமாக இருக்கும். இதுகுறித்து இயக்குநர் மனோஜ் NS கூறியதாவது.., “‘மயிலே’ பாடலின் படப்பிடிப்பு பிரபுதேவா சார் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் சார் உடன்…
Read MoreRS இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் ‘மண்டாடி’ – 2026 கோடை விடுமுறைக் கொண்டாட்டமாக வெளியாகவிருக்கிறது!
RS இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘மண்டாடி’, பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள இப்படம் 2026 ஆம் ஆண்டு கோடை விடுமுறையைக் குறிவைத்து வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. நடிகர் சூரியின் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக ‘மண்டாடி’ படம் இருக்கும். இதுவரை அவர் நடித்த படங்களில் இதுவே பெரும் பொருட்செலவும், மிகுந்த சவால்களும் கொண்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கதைக்காக சூரி தனது உடல் தோற்றத்தாலும் மெனக்கெட்டு பல மாற்றங்களை செய்திருக்கிறார். நடிகர் சூரியை முற்றிலும் புதிய பரிமாணத்தில் இந்த படம் காட்டும். இந்த படத்தின் மிக முக்கியமான பலம் சூரியின் அபாரமான தோற்றம் தான். கதையாக கடல் சார்ந்த ஆக்ஷன் அதிரடி காட்சிகள், ஆபத்தான சண்டைக் காட்சிகள் நிறைந்த படம். குறிப்பாக, படத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் படகுப்பந்தய (sailboat racing) காட்சிகளுக்காக, பல மாதங்கள்…
Read More‘தி ராஜா சாப்’ – பிரம்மாண்ட முன்னோட்ட விழா !!
‘தி ராஜா சாப்’ – பிரம்மாண்ட முன்னோட்ட விழா !! “டார்லிங் ரசிகர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு வழங்கவே ‘தி ராஜா சாப்’ திரைப்படத்தை உருவாக்கினோம். இந்த படத்தின் கிளைமாக்ஸை பார்த்த பிறகு, மாருதியின் எழுத்துத் திறமையின் ரசிகனாக நான் மாறிவிட்டேன். இந்த சங்கராந்தியில் வெளியாகும் அனைத்து படங்களுடனும் சேர்ந்து, ‘தி ராஜா சாப்’வும் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும்.” – ரெபல் ஸ்டார் பிரபாஸ் ரெபல் ஸ்டார் பிரபாஸ் நடித்துள்ள மிகப் பிரம்மாண்ட படமான ‘தி ராஜா சாப்’ (The Raja Saab) படத்தின் பிரம்மாண்ட முன்னோட்ட விழா, நேற்று ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரும் படம் குறித்து தங்கள் அனுபவங்களையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டனர். ரெபல் ஸ்டார் பிரபாஸ் நடித்துள்ள பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம்…
Read Moreஅரசியல் காமெடி தர்பாரை நடத்த திட்டமிட்டிருக்கும் ராதா ரவி- ரவி மரியா கூட்டணி
ராம் தேவ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகும் திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் ஒப்பற்ற கலைஞர்களான ராதா ரவி – ரவி மரியா ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். இந்த திரைப்படம் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டில் நடைபெறும் தமிழக சட்ட பேரவை தேர்தலில் யார் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறார்கள்? என்ற எதிர்பார்ப்பை விட.. இந்த கூட்டணியின் அரசியல் காமெடி தர்பார் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும் என படக் குழுவினர் நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார்கள். ‘பழகிய நாட்கள்’, ‘மூன்றாம் மனிதன்’ ஆகிய திரைப்படங்களை தயாரித்து,இயக்கிய இயக்குநர் ராம்தேவ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் ராதா ரவி, ரவி மரியா, , கஞ்சா கருப்பு,இயக்குநர் பேரரசு ,நிழல்கள் ரவி , பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கார்த்திக் நாயர்…
Read Moreகவின் – ஆண்ட்ரியா ஜெரெமையா நடித்த ‘மாஸ்க்’ திரைப்படம், ஜனவரி 9 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங் ஆகிறது !!
முன்னணி ஓடிடி தளமான ZEE5, கவின் மற்றும் ஆண்ட்ரியா ஜெரெமையா நடிப்பில், சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற, ஆக்சன்-திரில்லர் திரைப்படமான ‘மாஸ்க்’-ஐ ஜனவரி 9, 2026 முதல் தளத்தில் ஸ்ட்ரீம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இப்படத்தை புதுமுக இயக்குநர் விகர்னன் அசோக் எழுதி இயக்கியுள்ளார். தி ஷோ மஸ்ட் கோ ஆன் மற்றும் பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி வழங்கியுள்ளது. மாஸ்க் ஒரு பரபரப்பான ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம். பணம் மற்றும் லாபமே வாழ்க்கை என நினைக்கும் தனியார் டிடெக்டிவான வேலு (கவின்) என்பவனை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. ஒரு குற்ற சம்பவத்தில் அவனது வாழ்க்கை, மர்மமான முகமூடி அணிந்த கும்பல், நற்பணிகளின் பெயரில் செயல்படும் சக்திவாய்ந்த அமைப்புகள் மற்றும் பல அரசியல்வாதிகளின் வாழ்க்கையை புரட்டிப்…
Read Moreவிஜயசாந்திக்கு பின் நான் தான் முழுநீள ஆக்ஷன் ஹீரோயினாக நடித்திருக்கிறேன் – சிந்தியா லூர்டே
சிந்தியா ப்ரொடக்ஷன் ஹவுஸ் தயாரிப்பில், சிந்தியா லூர்டே நடிக்க, அறிமுக இயக்குனர் தினேஷ் தீனா கதை, திரைக்கதை , வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் “அனலி”. இந்த படத்தின் ட்ரைலர் வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது நாயகி மற்றும் தயாரிப்பாளரான சிந்தியா லூர்டே பத்திரிக்கையாளர்களை சந்தித்து அனலி படத்தைப் பற்றியும், தனது சினிமா அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். இந்த சந்திப்பில் சிந்தியா லூர்டே பேசும்போது, “வர்ணாஷ்ரமம், தினசரி படங்களுக்கு பிறகு ‘அனலி’ என்னுடைய மூன்றாவது தயாரிப்பு. இந்த படத்தில் நானே நாயகியாகவும் நடித்திருக்கிறேன். ஆனால் இதில் வழக்கமான ஹீரோயின் கதாபாத்திரம் இல்லை. இது கொஞ்சம் தனித்துவமான இருக்கும். 90களில் தமிழ் சினிமாவில் விஜயசாந்தி மேடம் ஆக்ஷன் படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் இந்த படத்தில் முதன் முறையாக ஒரு முழுநீள ஆக்ஷன் ஹீரோயினாக நான்…
Read Moreஆஸ்கர்-கிராமி நாயகன் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், கிராமி விருது பெற்ற வயலின் கலைஞர் கணேஷ் ராஜகோபாலனால் கருத்தாக்கம் செய்யப்பட்ட ‘த்ரிபின்னா’ இந்திய சிம்பொனியை வெளியிட்டார்
இந்திய இசையை உலக அரங்கில் நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்காற்றிய ஆஸ்கர் மற்றும் கிராமி விருது வென்ற இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், கிராமி விருது பெற்ற வயலின் கலைஞர் கணேஷ் ராஜகோபாலனால் கருத்தாக்கம் செய்யப்பட்ட ‘த்ரிபின்னா’ என்ற இந்திய சிம்பொனி இசை ஆல்பத்தை டிசம்பர் 27 (சனிக்கிழமை) அன்று சென்னையில் உள்ள பிக்வயலின்ஷாப்பில் தொடங்கி வைத்தார். ஏ.ஆர். ரஹ்மான் ஆல்பத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து, ஸ்வரயோகா குழுவினருடன் இணைந்து அனிருத்தா பட் மிருதங்கம் வாசிக்க, ‘த்ரிபின்னா’ ஆல்பத்தில் உள்ள இசையமைப்புகளை கணேஷ் ராஜகோபாலன் நேரடியாக வாசித்துக் காட்டினார். இந்நிகழ்ச்சியில் பிரபல கர்நாடக இசைக்கலைஞர்களான கிருஷ்ண குமார் மற்றும் பின்னி கிருஷ்ண குமார், வயலின் கலைஞர் குமரேஷ் மற்றும் வீணை கலைஞர் ஜெயந்தி குமரேஷ் உள்ளிட்ட இசை மற்றும் திரைப்படத் துறையைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். ‘த்ரிபின்னா’ ஆல்பம், ஸ்வரங்களை…
Read More