‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் ஒவ்வொரு புதிய அப்டேட்டும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இருமடங்கு அதிகமாக்கி வருகிறது. பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உஸ்தாத் ராம் பொதினேனி கதாநாயாகனாக நடித்திருக்க, நடிகர் சஞ்சய் தத் எதிர்கதாநாயகனாக நடித்துள்ளது படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது. இப்போது, ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்திற்கான தியேட்டர் டிரெய்லர் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். டிரெய்லர் போஸ்டரில் ராம் பொதினேனி முரட்டுத்தனமான மாஸ் லுக்கில் உள்ளார். கழுத்தில் கட்டியுள்ள கர்சீஃப் அவரது ஸ்டைலிஷ் லுக்கை இன்னும் வசீகரமாக்கியுள்ளது. பூரி கனெக்ட்ஸ் பேனரின் கீழ் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட இந்த பான் இந்தியா திரைப்படத்தில் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளார். சாம் கே நாயுடு மற்றும் கியானி கியானெலி ஆகியோர் படத்திற்கு அற்புதமான ஒளிப்பதிவு செய்துள்ளனர். ‘டபுள் ஐஸ்மார்ட்’…
Read MoreMonth: July 2024
‘அப்பு VI STD’ படத்தில் கதாநாயகனான அறிமுகமாகும் ‘கல்லூரி’ வினோத்!
RK CRETIVE MAKERS சார்பில் திரு. வீரா அவர்கள் தயாரிக்கும் படம் அப்பு VI-STD. இப்படத்தில் கல்லூரி, மாரி, ஸ்கெட்ச், அயோத்தி, ஆகிய படங்களில் நடித்த வினோத் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். பிரியா கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் வீரா,ஜீவன் பிரபாகர், P.L. தேனப்பன், வேலுபிரபாகரன், டார்லிங் மதன், விஜய் சத்யா, பிரியங்கா ரோபோ ஷங்கர், சுப்பிரமணி மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் திரு. வசீகரன் பாலாஜி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குக்கிறார். இசை ஆலன் விஜய், ஒளிப்பதிவு தீபக், படத்தொகுப்பு K.K. விக்னேஷ், சண்டைப்பயிற்சி S.R. ஹரிமுருகன், பாடல்கள் மணி அமுதவன், கலை V.K. நடராஜ். இப்படத்தின் கதை, சென்னை ஹௌசிங் போர்டை மையமாக கொண்ட கதைகளமாக உருவாகி உள்ளது. அப்பாவின் கனவை நிறைவேற்ற படிக்க நினைக்கும் பத்து வயது சிறுவன் அப்பு.…
Read Moreஜமா விமர்சனம் – தெருக்கூத்து
‘ஜமா’ என்பது தெருக்கூத்து நாடகக் கலைஞர்களின் குழுவைக் குறிக்கும் சொல்லாகும்.. நாடகத்தில் பெண் வேடம் அணியும் நபரின் வாழ்க்கையையும் நாடக கலைஞர்களை பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது. கதை… கதையின் நாயகனாக நடித்து படத்தை இயக்கியிருக்கிறார் பாரி இளவழகன்.. இவரது உறவினர்கள் பலரும் தெருக்கூத்து கலைஞர்கள் என்பதால் படத்தை எதார்த்தமாக இயக்கி நல்லதொரு படைப்பாக கொடுத்திருக்கிறார்.. பாரி இழவழகன் இவரது தந்தை தயா.. தெருக்கூத்து பார்க்க சென்ற தயா ஒரு கட்டத்தில் அதில் ஆர்வமாகி அவரே தெருக்கூத்து கலைஞராகி விடுகிறார்.. ஜமா என்ற பெயரில் நாடகக் கலைக் குழுவை நடத்தி வருகிறார். ஒரு கட்டத்தில் தனது நண்பரின் பொறாமையால் இவரது கலைக்குழு கைவிட்டு போகிறது.. ஒரு கட்டத்தில் மரணமும் அடைகிறார்.. தன் தந்தையை கைவிட்ட ஜமா குழுவை மீண்டும் கைப்பற்ற மகன் பாரி இளவழகன் போராடும் போராட்டமே…
Read Moreரயில் – வடமாநிலத் தொழிலாளர் வாழ்வும் வலியும்.. ஆஹா ஓடிடி யில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல்
வடக்கன் பெயர், சென்சார் தடையால் மாற்றப்பட்டு, சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, பரவலான கவனம் பெற்ற, திரைப்படம் ரயில். பெரு முதலாளிகள் சாதி, மதங்களைக் கடந்து, சுயநலத்துக்காக எப்போதும் கைக்கோர்த்துக்கொண்டு செயல்படுகிறார்கள். ஆனால். உழைக்கும் மக்கள் எப்போதும் தங்களுக்குள் பகைமை பாராட்டி, அடிப்படைவாதிகளால் அடித்துக்கொள்ளத் தூண்டப்படுகிறார்கள் என்ற கருத்தை மிகவும் அழுத்தமான திரைக்கதையில் ரயில் திரைப்படம் வெளியாகி இருந்தது. உழைக்கும் தமிழர்கள் குடிநோய்க்கு அடிமையான நிலையில், அவர்களின் வேலை வாய்ப்புகள் பரிக்கப்பட்டு, அந்த இடத்தில் வடநாட்டு கூலிகளை அனுமதிக்கும் தமிழ்நாட்டுச் சூழல் ஒருபக்கம் என்றால், அடையாள அரசியல்வாதிகளின் காட்டமான எதிர்வினை இன்னொரு பக்கம் என அனைத்தையும் கடந்து, ரயில் திரைப்படம், பொதுமக்களாலும் ஊடகங்களாலும் பெரிதும் வரவேற்கப்பட்டது. மேலும், சென்னையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையம் ரயில் திரைப்படக் குழுவிற்கு பாராட்டு விழா நடத்தி வரவேற்றது குறிப்பிடத் தக்கது. இந்நிலையில்,…
Read Moreடெட்பூல் & வால்வரின்’ திரைப்படத்தின் உலகளாவிய பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் – ரூ. 3650 கோடி பெற்று சாதனை
‘டெட்பூல் & வால்வரின்’ திரைப்படத்தின் உலகளாவிய பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் ரூ. 3650 கோடி பெற்று சாதனை படைத்துள்ளது! உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் ‘டெட்பூல் & வால்வரின்’ படத்தை திரையரங்குகளில் கொண்டாடி அதிரடி காட்டி வருகின்றனர். இதற்கு சான்று இந்தப் படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல்தான். இந்த படம், அதன் தொடக்க வார இறுதியில் உலகெங்கிலும் ரூ. 3650 கோடிகள் வசூலித்து, 2024 ஆம் ஆண்டின் நம்பர் 1 ஓப்பனிங் திரைப்படமாக வரலாறு படைத்துள்ளது. இந்தியாவில் ‘டெட்பூல் 1’ (40.79 கோடி ஜிபிஓசி) மற்றும் ‘டெட்பூல் 2’ (69.94 கிஆர் ஜிபிஓசி) ஆகிய இரண்டின் வாழ்நாள் வசூலை, ‘டெட்பூல் & வால்வரின்’ திரைப்படத்தின் முதல் வார இறுதி வசூல் முறியடித்துள்ளது. அதாவது, ரூ. 83.28 கோடி வசூலித்துள்ளது. இது வரவிருக்கும் நாட்களில் இன்னும் அதிகமாகும் என்பதை எதிர்பார்க்கலாம்.…
Read Moreநடிகரான இன்னொரு இயக்குனர் -ரெமோ ஷிவா
காலம் காலமாக இயக்குனர்கள் நடிகர்களாக மாறுவது தமிழ்சினிமாவில் புதுமையில்லை! தொற்று தொட்டு நடைபெறும் நடைமுறைதான். அந்த வகையில் “கல்லூரி காலங்கள்” என்ற படத்தை இயக்கிய ரெமோ ஷிவா தற்போது நடிகராக மாறியிருக்கிறார். சமீபத்தில் வெளியான மாஸ்டர் தினேஷ், யோகிபாபு நடிப்பில் வெளியான “லோக்கல் சரக்கு” படத்தில் மெயின் வில்லனாக அறிமுகமாகி மிரட்டியிருக்கிறார் ரெமோ ஷிவா இந்த திரைப்படத்தை எஸ்.பி.ராஜ்குமார் இயக்கியிருந்தார். இதில் வில்லன் கதாபாத்திரம் தனியாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது ரெமோ ஷிவா இதற்கு முன் விமல் நடிப்பில் உருவான “தெய்வமச்சான்” படத்தில் விமலுக்கு அண்ணனாக குணச்சித்திர நடிப்பில் அசத்தியிருந்தார். இந்த திரைப்படத்தை மார்டின் நிர்மல்குமார் இயக்கியிருந்தார். ரெமோ ஷிவா தற்போது ரேணிகுண்டா, கருப்பன் திரைப்பட இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் மிகப்பெரிய பொருட் செலவில் உருவாகிவரும் திரைப்படத்தில் மிக முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது மிகவும்…
Read Moreபிக் பேங் மூவீஸ் சார்பாக காமராஜ் வேல் தயாரித்து இயக்கியுள்ள படம் அதர்மக் கதைகள்!!
பிக் பேங் மூவீஸ் சார்பாக காமராஜ் வேல் தயாரித்து இயக்கியுள்ள படம் அதர்மக் கதைகள்…. இப்படம் பழிவாங்குவதை மையமாக கொண்ட ஆந்தாலஜி (anthology) வகை படமாக உருவாகியுள்ளது, இதில் வெற்றி, சாக்ஷி அகர்வால், அம்மு அபிராமி, திவ்யா துரைசாமி, பூ ராமு, சுனில் ரெட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் காமராஜ் வேல் இயக்கிய இத்திரைப்படத்திற்கு Ar. ரெஹானா, Sn.அருணகிரி, ஹரிஷ் அர்ஜுன், சரண் குமார் என 4 இசையமைப்பாளர்களும், கே. கே, M.S.பரணி, ராஜிவ் ராஜேந்திரன், ஜெபின் ரெஜினால்ட் என 4 ஒளிப்பதிவாளர்களும் , நாகூரான் ராமச்சந்திரன், சதிஷ் குரசோவா, மகேந்திரன் கணேசன், E. கோபாலகிருஷ்ணன் என 4 எடிட்டர்களும் பணியாற்றியுள்ளனர் . Win வீரா, fire கார்த்திக் இருவரும் சண்டை பயிற்சி அமைத்துள்ளனர். இதன் படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளான பெசன்ட் நகர்,…
Read Moreபான் இந்திய பிரம்மாண்ட திரைப்படமான “தி ராஜா சாப்” படத்தின் க்ளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது !
பாக்ஸ் ஆபிஸில் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, ரிபெல் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியப் படமான ‘தி ராஜா சாப்’ படத்திலிருந்து, ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக, தயாரிப்பாளர்கள் ஒரு அருமையான க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த க்ளிம்ப்ஸ்ல் அசத்தலான விண்டேஜ் லுக்கில் இளமை துள்ளலுடன் ஜொலிக்கிறார் பிரபாஸ். ‘தி ராஜா சாப்’ திரைப்படம் 10 ஏப்ரல் 2025 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தந்துள்ள, க்ளிம்ப்ஸ் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. விண்டேஜ் காரில் காட்சியளிக்கும் பிரபாஸ், ரொமாண்டிக் ஹாரர் காமெடி மூலம் அனைவரையும் வசீகரிக்க தயாராக இருக்கிறார். மாருதி பிரபாஸை ஸ்டைலான தோற்றத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார். இது திரைப்பட ஆர்வலர்களுக்கும், ரசிகர்களுக்கும் விருந்தாக அமைந்துள்ளது. தற்போது, படத்தின் 40% படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் மற்றொரு…
Read Moreராம் பொதினேனி’டபுள் ஐஸ்மார்ட்’ படத்தில் இருந்து, க்யா லஃப்டா என்ற ரொமாண்டிக் மெலடி வெளியாகியுள்ளது!
உஸ்தாத் ராம் பொதினேனி, காவ்யா தாப்பர், பூரி ஜெகன்நாத், சஞ்சய் தத், சார்மி கவுர், ஆகியோரின் ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தில் இருந்து, க்யா லஃப்டா என்ற ரொமாண்டிக் மெலடி வெளியாகியுள்ளது! ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தில் இருந்து வெளியான முதல் இரண்டு சிங்கிள்கள் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றது. இப்போது ராம் பொதினேனி மற்றும் காவ்யா தாப்பரின் ரொமாண்டிக் மெலடி, க்யா லஃப்டா இந்த காலநிலையை மேலும் இதமாக்க வெளியாகியுள்ளது. க்யா லஃப்டா பாடலை கேட்டவுடன் உற்சாகம் தொற்றிக்கொள்ளும்படியாக துள்ளல் இசை மற்றும் பாடகர்களுடன் இந்தப் பாடலுக்கு இசையமைத்துள்ளார் மணி ஷர்மா. கேட்கும்போதே தங்களின் உற்சாகம் பல மடங்கு உயர்ந்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்தப் பாடலில் சரியாக சேர்க்கப்பட்டுள்ள ஹூக் லைன் பாடலின் உற்சாகத்தை மேலும் கூட்டுகிறது. இது க்யா லஃப்டா பாடலைக் கேட்பவர்களுக்கு மறக்கமுடியாத அனுபவமாக…
Read More“’மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் மர்மமும் உணர்ச்சிகளும் இணைந்திருக்கும்” – ஒளிப்பதிவாளர், இயக்குநர் விஜய் மில்டன்!
ஒரு ஒளிப்பதிவாளர் தனது பார்வையை காட்சிகளாக மாற்றும் போது அந்த படைப்பின் காட்சிகள் யதார்த்தத்தை அடைகிறது. படத்தை இயக்கும் இயக்குநரே அதற்கு ஒளிப்பதிவு செய்யும்போது அது நிச்சயம் பார்வையாளர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. நடிகர் விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தினை விஜய் மில்டன் இயக்கி, ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 2, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் படத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி கேட்டபோது விஜய் மில்டன் பகிர்ந்து கொண்டதாவது, “தலைப்பு கதைக்கு வலுவான தொடர்பைக் கொண்டுள்ளது. படம் இன்னும் வெளியாகாததால் நிறைய விஷயங்களை என்னால் இப்போது பகிர்ந்து கொள்ள முடியாது. ஆனால், ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் மர்மமும் உணர்ச்சிகளும் இருக்கும் என்று என்னால் நிச்சயம் சொல்ல முடியும்.…
Read More