திருநங்கை இயக்குனர் சம்யுக்தா விஜயனின் ‘நீல நிறச் சூரியன்’ அக்டோபர் 4ல் திரையரங்குகளில்

தமிழ் சினிமாவின் முதல் திருநங்கை இயக்குனராக சம்யுக்தா விஜயன் இயக்கி நடித்துள்ள ‘நீல நிறச் சூரியன்’ ; அக்-4ல் தமிழகமெங்கும் வெளியீடு திருநங்கை சம்யுக்தா விஜயன் இயக்கி நடித்து வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் ‘நீல நிறச் சூரியன்’ (Blue Sunshine). வரும் அக்டோபர் 4 ஆம் தேதி தமிழகமெங்கும் xforia Igene நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது.. இப்படத்தின் சிறப்பம்சமே தமிழ் சினிமாவில் முதன்முறையாக சம்யுக்தா விஜயன் என்கிற ஒரு திருநங்கை இயக்கி நடித்துள்ள முதல் திரைப்படம் என்பது தான். அது மட்டுமில்லாமல், IFFI -23, மற்றும் பல உலக திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று, உலக சினிமா ரசிகர்கள் மட்டுமில்லாமல் நல்ல சினிமாக்களை விரும்பும் அனைவரும் பாராட்டிய படமாக இது உருவாகி இருக்கிறது.. இப்படத்தின் சிறப்பு காட்சிகளில் கலந்து கொண்ட திரைப்பிரபலங்களின் ஏகோபித்த பாராட்டுகளையும்…

Read More

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் மாண்புமிகு உதயநிதி துணை முதல்வருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் – நாசர்,தலைவர்

பேரன்பிற்கும் மரியாதைக்குரிய தமிழக துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம், தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினருமான தாங்கள் தமிழக அமைச்சரவையில் துணை முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள தங்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக உள்ளார்ந்த மகிழ்ச்சியையும், மனமார்ந்த பாராட்டுகளையும் மிகுந்த பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், இளைய சமுதாயத்திற்கு ஒரு விடிவெள்ளியாக ஒளிரவும் நம் தமிழகத்தை உலகமே உற்று நோக்கும் வகையில் சீரிய முறையில் தங்களின் பணி சிறக்க வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். நன்றி, தங்கள் உண்மையுடனும், பேரன்புடனும் (M.நாசர்) தலைவர்

Read More

துணை முதல்வர் மாண்புமிகு உதயநிதி அவர்களுக்கு நடிகர் உதயாவின் வாழ்த்து

தமிழ்நாட்டின் துணை முதல்வராக மாண்புமிகு அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களை நியமித்த மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தயாரிப்பாளராகவும், நடிகராகவும், விநியோகஸ்தராகவும் திரையுலகில் பிரகாசித்து நடிகர் சங்கத்திலும் தயாரிப்பாளர் சங்கத்திலும் உறுப்பினராக இருக்கும் உதயநிதி அவர்கள் தமிழகத்தின் துணை முதல்வர் ஆவது ஒட்டுமொத்த திரையுலகிற்கே பெருமை. தமிழ் திரையுலகத்திலிருந்து முதல் துணை முதல்வர் ஆகி வரலாறு படைத்திருப்பது உதயநிதி அவர்கள் என்பது பெருமகிழ்ச்சி. இந்த உற்சாக தருணத்தில், கலைஞரின் மதி நுட்பத்தோடும், தளபதியாரின் உழைப்போடும் செயலாற்றி வரும் உதயநிதி அவர்கள் இன்னும் பல சாதனைகளை புரிந்து பல்வேறு உயரங்களை எட்ட வேண்டும் என்று ஒரு சகோதரனாகவும் சக கலைஞனாகவும் வாழ்த்தி, வணங்கி, மகிழ்கிறேன். நன்றி, அன்புடன் நடிகர் உதயா.

Read More

ஹாரர் திரில்லர் “டிமான்ட்டி காலனி 2” திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது!

ரசிகர்களின் காத்திருப்பு இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது ! தமிழின் முன்னணி நட்சத்திரம் அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிமான்ட்டி காலனி படத்தின் இரண்டாம் பாகமான ‘டிமான்ட்டி காலனி 2’ ZEE5 இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. இந்தத் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். 10 வருடங்களுக்கு முன் வெளியான டிமான்ட்டி காலனி படத்தின் திரில், திகில் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் இந்த திரைப்படம், ரசிகர்களைத் திகிலின் உச்சத்திற்குக் கூட்டிச் செல்கிறது. இப்போது உங்கள் வீட்டுத் திரைகளில், பரவசத்துடன் ZEE5 இல் டிமான்ட்டி காலனி திரைப்படத்தைக் கண்டுகளியுங்கள். மிகச்சிறந்த படைப்பாளி அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள ‘டிமான்ட்டி காலனி 2’ முதல் படம் விட்ட இடத்திலேயே தொடங்குகிறது. முதல் பாகத்தின் கதைக்களம், ஸ்ரீனிவாசன், விமல், ராகவன் மற்றும் சஜித்…

Read More

பிரபல இயக்குனர் ராஜேஷ் எம் உதவியாளர் இயக்கும் சீரன் திரைப்படம்..

ஜேம்ஸ் கார்த்திக், M.நியாஸ் தயாரிப்பில், இயக்குநர் திரு. ராஜேஷ் எம் உதவியாளர் துரை K முருகன் இயக்கத்தில், ஜேம்ஸ் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “சீரன்”. சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளையும், மனிதனுக்கான சம உரிமைகளை உரக்கப்பேசும் ஒரு அழகான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் அக்டோபர் 4 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.   இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி படப்புகழ் இயக்குநர் ராஜேஷ் எம், இவ்விழாவில் கலந்துகொண்டு, படக்குழுவினரை வாழ்த்தியதோடு, படத்தின் இசை மற்றும் டிரெய்லரை வெளியிட்டனர். இந்நிகழ்வினில்… தயாரிப்பாளர், நடிகர் ஜேம்ஸ் கார்த்திக் பேசியதாவது… இந்த சீரன் திரைப்படம், உண்மைச்…

Read More

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி !!

கிராமத்து மண் வாசனையை, நகரத்து மக்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், நம் பாரம்பரியத்தை, நம் விளையாட்டுக்கள், கலைகள், உணவுகள் என அனைத்தையும் கொண்டாடும் விதத்தில், செம்பொழில் குழு சென்னை YMCA மைதானத்தில் பிரம்மாண்டமாக, கிராமத்துத் திருவிழாவை நடத்தி வருகிறது. இவ்விழாவினில் சிறப்பு விருந்தினராக நடிகர் கார்த்தி இன்று கலந்துகொண்டார். தமிழகத்தின் பல கிராமங்களிலிருந்து தாங்கள் விளைவித்த பொருட்களை விவசாயிகள் இங்குக் கடை விரித்துள்ளனர். இந்த திருவிழாவில் கிராமத்து உணவுகள், சிறு தானிய உணவுகள், மாட்டு வண்டி, ஒயிலாட்டம், மயிலாட்டம் என ஒரு திருவிழாவில் காணக்கிடைக்கும் அனைத்தும் உள்ளது. இத்திருவிழா சனி, ஞாயிறு என அடுத்த இரண்டு நாட்களும் நடைபெறவுள்ளது. இன்றைய விழாவில் கலந்துகொண்ட நடிகர் கார்த்தி பேசியதாவது… கோடை விடுமுறைக்கு ஊருக்கு போவது அவ்வளவு பிடிக்கும், ஊரை விட்டு வர மனசே வராது. அந்த மாதிரி கதை என்பதால்…

Read More

சசிகுமார் – சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்

நடிகர் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘புரொடக்ஷன் நம்பர் 5’ என பெயரிடப்பட்டிருக்கிறது. அண்மையில் இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது. இன்று நடிகர் சசிகுமாரின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந் இயக்கத்தில் உருவாகும் ‘புரொடக்ஷன் நம்பர் 5’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்கிறார். பாடலாசிரியர் மோகன் ராஜன் பாடல்களை எழுத,…

Read More

தலை வெட்டியான் பாளையம் பட நாயகனும், குக்ட் (Cookd) குழுவினரும் இணைந்து சுவைபட தயாரித்த முருங்கைக்காய் பிரியாணி

தலை வெட்டியான் பாளையம் எனும் அசல் நகைச்சுவை இணைய தொடரின் நாயகனான அபிஷேக் குமார் இணையதள பிரபலமான குக்ட் சமையல் கலைஞர்களுடன் இணைந்து முருங்கைக்காய் பிரியாணி எனும் சாகச சமையலை சுவைபட தயாரித்த காணொளி பிரபலமாகி இருக்கிறது. யூட்யூபில் 2.7 மில்லியன் சந்தாதாரர்களுடன் சென்னையை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் டிஜிட்டல் சமையல் தொடர்பான ஸ்டார்ட் அப் நிறுவனம் குக்ட் . இந்த யூட்யூப்பில் பிரபலங்கள் கலந்து கொள்ளும் பொழுது போக்கு நிகழ்ச்சிகள், சமையல் நிகழ்ச்சிகள், சமையல் வகைகள், சமையல் தயாரிப்புகள் மற்றும் பார்வையாளர்களை ஈர்க்கும் ஏராளமான அம்சங்களை கலவையாக தயாரித்து வழங்கி வருகிறது. தலை வெட்டியான் பாளையம் – ப்ரைம் வீடியோவில் இடம்பெற்றுள்ள அசல் தமிழ் நகைச்சுவை இணைய தொடர். பார்வையாளர்களின் மனதை கவரும் இந்த இணைய தொடருக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனை கண்டு…

Read More

 தேவரா விமர்சனம்.. கடல் கொள்ளை

கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், சையப் அலி கான், பிரகாஷ்ராஜ், ஜான்வி கபூர் மற்றும் பலர் நடித்திருக்கும் ’தேவரா’ படம் பான் இந்தியா வெளியீடு.. கதை… நம் நாட்டிற்கு சட்ட விரோதமாக வரும் ஆயுதங்களை தொழில் அதிபர் கட்டளைக்காக செங்கடலுக்கே சென்று கொள்ளையடித்து கொடுப்பது ஜூனியர் என்டிஆர் இன் தொழில்.. இவருக்கு உடந்தையாக சைப் அலிகான் கலையரசன் உள்ளிட்ட நண்பர்கள் உண்டு. ஒரு கட்டத்தில் இவர்கள் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வரும் கடற்படை அதிகாரி நரேன்.. நீங்கள் நாட்டிற்கு துரோகம் செய்கிறீர்கள் என சொல்கிறார். இதனையடுத்து என்டிஆர் திருந்துகிறார்.. ஆனால் இவரது நண்பர்களோ எங்களது தொழில் இதுதான்.. நாங்கள் விட முடியாது என பிரச்சனை செய்யவே மோதல் வெடிக்கிறது. அதன் பிறகு என்ன நடந்தது? நாட்டிற்கு துரோகம் செய்த நண்பர்களை இவர் தீர்த்து…

Read More

செஸ் ஒலிம்பியாட் தங்கவீரர்களை கெளரவிக்கும் வேலம்மாள் நெக்ஸஸ்

வேலம்மாள்நெக்ஸஸ் செஸ் ஒலிம்பியாட் தங்கப் பதக்கம் வென்றவர்களைக் கொண்டாடுகிறது மற்றும் எதிர்காலதிறமைகளை வளர்க்கிறது 45வது FIDE செஸ் ஒலிம்பியாட் 2024ல் தங்கப் பதக்கம் வென்ற ஐந்துசதுரங்க வீரர்களான கிராண்ட் மாஸ்டர் D குகேஷ், கிராண்ட் மாஸ்டர் ர வைஷாலி, கிராண்ட் மாஸ்டர் R பிரக்ஞானந்தா,  கிராண்ட் மாஸ்டர் ஸ்ரீநாத் நாராயணன், கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் கல்யாண் ஆகியோரை வேலம்மாள் நெக்ஸஸ் பெருமையுடன்கெளரவித்தது. சமீபத்தில் நடைபெற்ற இந்த மாபெரும் நிகழ்வு, நாட்டிற்கும் நிறுவனத்திற்கும்பெருமை சேர்த்த இந்த சாம்பியன்களின் சிறப்பான சாதனைகளை எடுத்துரைத்தது. ஒவ்வொரு செஸ்மேஸ்ட்ரோவிற்கும் ஈர்க்கக்கூடிய தொகையாக ரூ.40 லட்சம் அவர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கானபாராட்டும் வண்ணம் அளிக்கப்படுகிறது.. அவர்களின் மணிமுடியில்  மற்றொரு மாணிக்கம் சேர்த்து, ஹங்கேரியில் மதிப்புமிக்க “சிறந்தபள்ளி விருது” வேலம்மாள் நெக்ஸஸுக்கு வழங்கப்பட்டது, இது துணை நிருபர் திரு. ஸ்ரீராம்வேல்மோகன் அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மகத்தான…

Read More