மாநில முதல்வருக்கும் மாவட்ட கலெக்டருக்கும் இடையே ‘நீயா… நானா’ போட்டி வந்தால் அதுதான் இந்த கேம் சேஞ்சர். ஆந்திர முதல்வர் ஸ்ரீ காந்த்துக்கு ஜெயராம், எஸ் ஜே சூர்யா என இரு மகன்கள். மகன்கள் இருவருக்குமே அப்பாவின் முதல்வர் நாற்காலி மீது ஒரு கண். இதற்கிடையே விசாகப்பட்டினம் மாவட்ட கலெக்டராக பதவி ஏற்கும் ராம் சரண் தனது அதிரடி நடவடிக்கைகள் மூலம் முதலமைச்சர் கனவில் இருக்கும் எஸ்.ஜே. சூர்யாவுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறார்.இதில் உச்சக்கட்டமாக முதல்வர் பங்கேற்கும் விழா ஒன்றின் பாதுகாப்பு பணிக்கு ராம்சரண் மீது கை நீட்டி விடுகிறார் எஸ். ஜே.சூர்யா. பதிலுக்கு ராம் சரணும் கை நீட்ட, தொடர்ந்து முதல்வர் உத்தரவின் பேரில் கலெக்டர் சஸ்பெண்ட் ஆகிறார்.எஸ்.ஜே. சூர்யாவுக்கு மந்திரி பதவி பறி போகிறது. தந்தையே தன்னை பதவி நீக்கம் செய்ததை தாங்க முடியாத எஸ்…
Read MoreCategory: விமர்சனம்
வணங்கான் – திரை விமர்சனம்
பேசும் திறனும் கேட்கும் திறனுமற்ற கோட்டிக்கு தனது தங்கை தான் உலகம். கன்னியாகுமரியில் கிடைத்த வேலையை செய்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வரும் கோட்டி தன் பார்வையில் முறைகேடாக எது நடந்தாலும் அதை தட்டிக் கேட்பவன். கை கால்களை உடைக்கவும் தயங்க மாட்டான். அவனது இந்த முரட்டுத்தனம் மாற நிரந்தரமாக ஒரு வேலை இருந்தால் நல்லது என்று முடிவு செய்யும் அவனது நலம் விரும்பிகள் மாற்றுத்திறனாளி பெண்கள் காப்பகத்தில் செக்யூரிட்டி வேலை வாங்கி கொடுக்கிறார்கள். அங்கே நடக்கும் ஒரு விபரீத சம்பவம் அவன் காதுக்கு வரும்போது அவன் எடுக்கும் விஸ்வரூபமே மீதிக்கதை. கோட்டியாக அருண் விஜய் அந்த கதாபாத்திரத்தில் வருத்தி தன்னை நிறுத்தி இருக்கிறார். தனது ஒவ்வொரு அசைவின் மூலமும் அந்தக் கோட்டி கேரக்டரை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார். செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு போலீஸ் நிலையத்தில் இருக்கும் அண்ணனிடம் என்ன…
Read More