நடிகை சிருஷ்டிடாங்கே அறிவித்த கவிதைப் போட்டி!.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த கட்டில் திரைப்படக்குழுவின் கரோனா விழிப்புணர்வு கவிதைப்போட்டியின் விண்ணப்ப தேதி ஏப்ரல் 10வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. முதல் பரிசு : 25,000 இரண்டாம் பரிசு : 15,000 மூன்றாம் பரிசு : 10,000 ஆறுதல் பரிசு : 20 பேருக்கு கவிதை நூல்கள். மற்றும் சிறந்த 100 கவிதைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடும் திட்டம். நமது மத்திய,மாநில அரசுகள் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து, மக்களை மீட்க போர்க்கால நடவடிக்கை  எடுத்து வரும் நிலையில் , முழுக்க முழுக்க, மக்களிடம் அது சார்ந்த விழிப்புணர்வை மேலும் தூண்டும்  விதமாக  கட்டில் திரைப்படக்குழு, “கரோனா விழிப்புணர்வு கவிதைப் போட்டி”யை அறிவித்திருக்கிறது.12 வரிகளுக்கு மிகாமல் கவிதை எழுதி, kattiltamilfilm@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். தேர்வுக்குழு முடிவே இறுதியானது. உலகில் எந்த நாடுகளிலிருந்தும், அனைத்து வயதினரும், பங்கேற்கும் இப்போட்டியில் ஒருவர் ஒரு…

Read More

தாராளபிரபு- விமர்சனம்!

முதல் வரியிலே சொல்லிவிடலாம்..பக்கா எனர்ஜிடிக் படம் இது. ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை தேடும் இளைஞனான ஹீரோ ஹரிஷ் கல்யாண் ஸ்போம் (உயிரணு) டோனராக மாறுகிறார். அவரை டாக்டரான விவேக் அந்த வேலைக்குப் பயன்படுத்துகிறார். இடையில் ஹீரோவுக்கு ஒரு காதல் வர, அந்தக் காதலி மனைவியாக அந்த மனைவிக்கு உண்மை தெரிய அடுத்து என்னானது என்பதே தாராளபிரபு.. முன்பாதி முழுதும் தாராளமாக காமெடியில் கலக்கி இருக்கிறார்கள். குறிப்பாக விவேக் அத்தனை காட்சிகளையும் அல்டிமேட் காட்சிகளாக்கி இருக்கிறார். பின்பாதி படத்தை அப்படியே செண்டி மெண்ட் ஏரியாவிற்குள் கொண்டு நிறுத்தி நறுக்கென்று முடித்துள்ளார் இயக்குநர். படத்தின் வசனங்கள் எல்லாம் 2K கிட்ஸ் மட்டும் அல்லாமல் எல்லாராலும் கொண்டாடப்படும்.. ஹரிஷ் கல்யாணுக்கு இப்படம் ஒரு கமர்சியல் ஹிட் படமாக அமைய வாய்ப்பு நிறையவே உள்ளது. அவரும் ஒரு கமர்சியல் ஹீரோவிற்கான தரத்தோடு தயாராகி…

Read More