இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது உலக ஐந்துநாள் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் கடந்த 18 ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் 4 நாட்களில் 2 நாள் ஆட்டம் மழையால் முழுமையாக இரத்து செய்யப்பட்டது. இதற்கு மத்தியில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 217 ரன்களும், நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 249 ரன்களும் எடுத்தன. 32 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2 ஆவது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 5 ஆவது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 64 ரன்கள் எடுத்திருந்தது. அணித்தலைவர் விராட் கோலி (8 ரன்), புஜாரா (12 ரன்) களத்தில் இருந்தனர். மழை மற்றும் மோசமான வானிலையால் ஏறக்குறைய 2½ நாள் ஆட்டம் பாதிப்புக்குள்ளானதால் மாற்று நாளாக அறிவிக்கப்பட்டிருந்த 6 ஆவது நாளுக்குப்…
Read MoreCategory: உலக செய்திகள்
18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா
18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா. திரைப்பட ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா 18.2.2021 முதல் 25.2.2021 வரை நடைபெறவுள்ளது. இந்திய திரைப்படத் திறனாய்வுக் கழகம் பிவிஆர் உடன் இணைந்து இவ்விழாவை நடத்துகிறது. உலகெங்கிலும் உள்ள 53 நாடுகளில் இருந்து 37 மொழிகளில் (10 இந்திய மொழிகள் உட்பட) 92 திரைப்படங்கள் பங்குபெறவுள்ளன. 18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சி 18.2.2021 அன்று பிவிஆர் மல்டிபிளெக்ஸின் சத்யம் திரையில் நடைபெறும். 25.2.2021 அன்று பிவிஆர் மல்டிபிளெக்ஸின் சத்யம் திரையில் நிறைவு விழா நடைபெறும். பிவிஆர் மல்டிபிளெக்ஸ் (முன்பு சத்யம் சினிமாஸ் – சாந்தம், சீசன்ஸ், சிக்ஸ் டிகிரீஸ், செரீன் திரைகள்) மற்றும் காசினோ சினிமாஸ் ஆகிய திரையரங்குகளில் 18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பங்குபெறும் திரைப்படங்கள்…
Read More