”தேன்கூட்டை தொடுவது போன்ற கவனத்துடன் ‘சல்லியர்கள்’ படத்தை எடுத்துள்ளனர்” ; சீமான் பாராட்டு

ICW நிறுவனம் சார்பில் கலைமாமணி சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சல்லியர்கள்’. மேதகு படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டுவின் டைரக்சனில் உருவாகியுள்ள இரண்டாவது படம் இது. சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அவரது தந்தையாக கருணாஸும், ஆர்மி வில்லனாக களவாணி புகழ் திருமுருகனும் மற்றும் டாக்டர் செம்பியனாக மகேந்திரனும் நடித்துள்ளனர். இன்னும் பல புதுமுகங்களும் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ள இந்த படத்திற்கு கருணாஸ் மகன் நடிகர் கென் மற்றும் அவரது நண்பர் ஈஸ்வர் இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். இந்தப்படத்தின் சிறப்பு நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, பி.எல்.தேனப்பன், சிவா கிலாரி, இயக்குநர்கள் வ.கவுதமன், பொன்ராம் மற்றும் நாம்…

Read More

24 மணி நேரத்தில், 18 மில்லியன் பார்வைகள் பெற்ற “ஹனுமான்” டிரைலர்

கற்பனைத் திறன் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா கதாநாயகனாக நடித்திருக்கும் முதல் இந்திய அசல் சூப்பர் ஹீரோ திரைப்படம் ‘ஹனுமான்’. இந்தத் திரைப்படத்தை ப்ரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கே. நிரஞ்சன் ரெட்டி தயாரித்திருக்கிறார். இந்த பிரம்மாண்டமான படைப்பின் திரையரங்க டிரைலர் கடந்த செவ்வாய்க்கிழமையன்று வெளியானது.‌ இந்த முன்னோட்டத்திற்கு அனைத்து தரப்பிலிருந்தும் ஒருமித்த அளவில் நேர்மறையான வரவேற்பு கிடைத்து வருகிறது. தெலுங்கு பதிப்பு மட்டுமல்லாமல் இந்தி மற்றும் ஏனைய மொழிகளிலும் வெளியான இந்த ஹனுமான் படத்தின் டிரைலருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்திருக்கிறது. ‘ஹனுமான்’ படத்தின் டிரைலர் வெளியான 24 மணி நேரத்தில் 850 K லைக்குகளுடன்… 18 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்று தற்போதும் யூட்யூபில் ட்ரெண்டிங்கில் உள்ளது. பிரசாந்த் வர்மா தனது அற்புதமான கதை சொல்லும் பாணியாலும் மற்றும் சர்வதேச…

Read More