”எந்த விதைக்குள் எந்த விருட்சம் என்றுதான் பார்க்கிறேன்” – வைரமுத்து

வைரமுத்து பங்கேற்ற “பனை’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா! ———————————————– ஏ.எம்.ஆர் கிரியேஷன்ஸ் சார்பில் எம்.ராஜேந்திரன் தயாரித்திருக்கும் படம் ‘பனை’. நலிந்து வரும் பனைமரத் தொழில் மற்றும் தொழிலாளர்களைப் பற்றி பேசும் இப்படத்தை தயாரித்திருப்பதோடு, படத்தின் கதையையும் எம்.ராஜேந்திரன் எழுதியிருக்கிறார். ஆதி பி.ஆறுமுகம் இயக்கியிருக்கும் இப்படத்தின் பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியிருக்கிறார். கீரவாணியிடம் பணியாற்றிய மீராலால் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார். சிவக்குமார் ரங்கசாமி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.   இப்படத்தில் ஹரிஷ் பிரபாகரன் நாயகனாக நடிக்க, மேக்னா நாயகியாக நடிக்க வடிவுக்கரசி, இமான் அண்ணாச்சி, கஞ்சா கருப்பு, டி.எஸ்.ஆர், ஜி.பி.முத்து, தயாரிப்பாளரும் கதாசிரியருமான எம்.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ‘பனை’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் அரங்கில் நடைபெற்றது. கவிப்பேரரசு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்கள் பேரரசு, அரவிந்தராஜ், கவிஞர்…

Read More

6 மொழிகளில் 100 மில்லியன் பார்வைகள் பெற்று சாதனை படைத்த புஷ்பா 2 பாடல்

இந்திய சினிமா ரசிகர்களின் அபிமான ஜோடி புஷ்பா & ஸ்ரீவள்ளி இருவரும் ’புஷ்பா2’ படத்தில் இருந்து ‘தி கப்புள் சாங்க்’ என்ற அழகான பெப்பி பாடலான ‘சூசேகி’யுடன் வந்துள்ளனர்! தேசிய விருது பெற்ற அல்லு அர்ஜூன் புஷ்பாராஜாகவும், சார்மிங் ராஷ்மிகா மந்தனா ஸ்ரீவள்ளியாகவும் நடித்திருக்கும் ‘புஷ்பா 2’ படத்தில் இருந்து ‘தி கப்புள் சாங்’ என்ற இரண்டாவது சிங்கிள் வெளியாகியுள்ளது. முதல் சிங்கிள் ‘புஷ்பா புஷ்பா’ பாடலும் படத்தின் டீசரும் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இரண்டாவது சிங்கிளும் ரசிகர்களைக் கவந்துள்ளது. இந்த வீடியோ பாடல் படத்தின் பிரம்மாண்ட செட்டில் இருந்து எப்படி உருவாகிறது என்ற காட்சிகளோடு வெளியாகியுள்ளது. இது நிச்சயம் பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான அனுபவத்தைக் கொடுக்கும். இந்த காட்சிகளில் படக்குழுவினரிடையே இருக்கும் நட்பும் தெளிவாக தெரிகிறது. மேஸ்ட்ரோ இயக்குநர் சுகுமார் இந்த பாடலை படமாக்குவதையும், மற்ற…

Read More

”கெட்டவன் சாகக்கூடாது; கெட்ட விஷயம் தான் சாக வேண்டும்” – இயக்குநர் மில்டன்

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது, “இந்தப் படத்திற்கு வேறு சில டைட்டிலும் யோசித்தோம். ஆனால், ‘மழை பிடிக்காத மனிதன்’ என கவித்துவமாக இதுவே தான் வேண்டும் என இயக்குநர் விஜய் மில்டன் பிடிவாதமாக சொன்னார். தமிழில் நல்ல தலைப்பு படங்களுக்கு வருவதில்லை என சிலர் ஆதங்கப்படும்போது, இந்த தலைப்பை எல்லோரும் வரவேற்க வேண்டும் என விரும்புகிறேன். இந்தப் படம் கேப்டன் விஜயகாந்துக்கு டிரிபியூட்டாக இருக்கும். இந்தப் படம் 2021ல் தொடங்கியபோது, இதில் விஜயகாந்த் சார் நடிக்க வேண்டும் என்று தொடர்ந்து முயற்சி செய்தோம். ஆனால், அவரது உடல்நலன் காரணமாக அது நடக்காமல் போனது. அவரது…

Read More

செப்டம்பர் 27ல் வெளியாகும் லக்கி பாஸ்கர்

துல்கர் சல்மான் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘லக்கி பாஸ்கர்’ செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது! துல்கர் சல்மான் இந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். அவரது வசீகரமான ஆளுமை மற்றும் ஈடுசெய்ய முடியாத நடிப்புத் திறனுக்காக மலையாளம், தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் மிகவும் விரும்பப்படும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இப்போது, அவர் ஒரு சாதாரண மனிதனின் அசாதாரண கதையான ‘லக்கி பாஸ்கர்’ படம் மூலம் வசீகரிக்க வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்து படக்குழுவினர் தொடர்ந்து அடுத்தடுத்து அப்டேட் கொடுத்து வருகின்றனர். மே 29 அன்று படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் செப்டம்பர் 27, 2024 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. ‘தோளி பிரேமா’,…

Read More

மஹேந்திரா கம்பெனி உருவாக்கிய பிரபாஸின் புஜ்ஜி வாகனம்

சென்னையில் பொதுமக்கள் முன்னிலையில், ‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து, பிரபாஸின் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’ அறிமுகப்படுத்தப்பட்டது!! இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சயின்ஸ் பிக்சன் திரைப்படமான ‘கல்கி 2898 கி.பி’ படம் வரும் ஜூன் 27, 2024 அன்று திரைக்கு வருகிறது. படம் திரைக்கு வருவதையொட்டி படக்குழுவினர், புரமோசன் பணிகளை மிகப்பிரம்மாண்டமாக துவங்கியுள்ளனர். சமீபத்தில் மே 22, 2024 அன்று, ஹைதராபாத்தில் பிரம்மாண்ட விழாவில், படத்திற்காக மஹேந்திரா கம்பெனி மூலம் பிரத்தியேகமாக உருவாக்கிய, படத்தில் பயன்படுத்தப்படும் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’யை அறிமுகப்படுத்தினர். பைரவா என்ற பிரபாஸின் சிறந்த நண்பனாக படம் முழுதும் அவருடன் ஒரு எதிர்கால வாகனம் வருகிறது. இந்த அற்புதமான படைப்பான, ‘புஜ்ஜி’ யை அறிமுகப்படுத்திய நடிகர் பிரபாஸ் அதனை ரசிகர்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து, தற்போது இந்த வாகனம் சென்னை மஹேந்திரா சிட்டிக்கு…

Read More

50 மில்லியன் பார்வையை கடந்த தலைமை செயலகம் வெஃப் சீரிஸ்

Zee5 இன் தலைமைச் செயலகம் சீரிஸ், 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை !! இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங் தளமாக, ரசிகர்களால் கொண்டாடப்படும் Zee5 தளத்தில், சமீபத்தில் வெளியான ‘தலைமைச் செயலகம்’ சீரிஸ், 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து, சாதனை படைத்துள்ளது. ~ தமிழக அரசியல் களப் பின்னணியில், இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், நடிகர் கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரில்லர் சீரிஸான “தலைமைச் செயலகம்” சீரிஸ் கடந்த மே 17ஆம் தேதி Zee5 தளத்தில் வெளியானது.~ தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், ராடான் மீடியாவொர்க்ஸின் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார் தயாரிப்பில் வெளிவந்த “தலைமைச் செயலகம்” சீரிஸ், தமிழக அரசியலில் இரக்கமற்ற அதிகார வேட்கையைக் கூறும் அழுத்தமான பொலிடிகல் திரில்லராக உருவாகியுள்ளது.…

Read More

கன்னடத் திரையுலகின் மற்றொரு பிரம்மாண்டம் KD: The Devil’s Warfield’

“KVN Production’s கேடி: தி டெவில்ஸ் வார்ஃபீல்ட் ( ‘KD: The Devil’s Warfield’ ) திரைப்படம், டிசம்பர் 2024 இல் வெளியாகிறது !! இப்படத்தின் ஆடியோ உரிமை ₹17.70 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது KVN Production நிறுவனத்தின் தயாரிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான, “கேடி: தி டெவில்ஸ் வார்ஃபீல்ட்” திரைப்படம், டிசம்பர் 2024 இல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த ஆக்சன் திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. 1970களில் பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் ஆடியோ ரைட்ஸ் மட்டுமே, ₹17.70 கோடிக்கு விற்கப்பட்டிருப்பது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.   இப்படத்தின் ரிலீஸுக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், படத்தின் முதல் பாடல் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்ற அறிவிப்பு, ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. துருவா சர்ஜா, ஷில்பா ஷெட்டி…

Read More

முடிவடைந்த “காதலிக்க நேரமில்லை” படப்பிடிப்பு

காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகும் திரைப்படம் “காதலிக்க நேரமில்லை” ஜெயம் ரவி, நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அவர்களுடன் யோகி பாபு, லால், வினய், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, TJ பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்திற்கு லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். இணை தயாரிப்பு M.செண்பகமூர்த்தி, R.அர்ஜுன் துரை ‘காதலிக்க நேரமில்லை’ முதல் பார்வை போஸ்டர் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் பாடல், டீசர் மற்றும் டிரைலர் வெளியீடு தேதிகள்…

Read More

கன்னட திரையுலகில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் “மார்ட்டின்”

பிரின்ஸ் துருவா சர்ஜாவின் “மார்ட்டின்” திரைப்படம் உலகமெங்கும் 11 அக்டோபர் 2024 வெளியாகிறது !! கன்னட திரையுலகின் இளம் நட்சத்திர நடிகர் பிரின்ஸ் துருவா சர்ஜா நடிப்பில், பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் உருவாகி வரும் “மார்ட்டின்” படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது. அவரது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் இந்தியாவின் மிகப்பெரிய ஆக்சன் அதிரடியாக உருவாகி வரும் “மார்ட்டின்” திரைப்படம் 11 அக்டோபர் 2024 அன்று உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இது குறித்து தயாரிப்பாளர் உதய் K மேத்தா கூறுகையில்.. ‘மார்ட்டின்’ ஒரு திரைப்படம் மட்டுமல்ல, இது எங்களின் கனவுப் படைப்பு. கன்னடத்திலிருந்து பான் இந்திய அளவில் மிகப்பெரிய ஆக்‌ஷன் வென்ச்சரை வழங்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளோம், அந்த இலக்கை அடைவதற்கான நேரம் நெருங்கிவிட்டது. ஆக்‌ஷன் பிரின்ஸ் துருவா சர்ஜாவின் 36வது பிறந்தநாளை முன்னிட்டு,…

Read More

சூப்பர் ஸ்டாரின் வாழ்த்துக்களைப் பெற்ற தடகள வீரர், வீராங்கனைகள்

இலங்கை, கொழும்புவில் இம்மாதம் (May) 25 மற்றும் 26ம் தேதிகளில் நடைபெற்ற 10வது Annual Master Athletic Championship – SriLanka 2024 போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற விரர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேரில் அழைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். வெற்றி பெற்ற வீரர்கள் விவரம் M Shenbagamoothy 100mts – 2nd place 200mts- 3rd place Mixed Relay – 1st Suresh Kasinathan 100- 3rd 200- 3rd Mixed Relay – 1st Jesu Esther Rani 100- 3rd 200- 3rd Long jump 3rd Mixed Relay 1st R Pramila 100- 2nd place Long jump – 2nd place Mixed Relay – 1st

Read More