காஞ்சி: அத்திவரதர் தரிசன வைபவம்- கோலாகல தொடக்கம்!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பின் அத்திவரதர் பக்தர்களுக்கு இன்று (ஜூலை 1) முதல் காட்சி தருகிறார். பெரும் எதிர்பார்ப்பில் இருந்த பக்தர்கள் இன்று முதல் வரதராஜ பெருமாள் கோவில் நோக்கி படையெடுக்க துவங்கி உள்ளனர். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்தி வரதர் வைபவம் இன்று துவங்குகிறது. அனந்தசரஸ் குளத்திலிருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை 2:00 மணியளவில் அத்தி வரதர் எழுந்தருளினார். வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அத்தி வரதர் சிலைக்கு கோவில் பட்டாச்சாரியார்கள் ஜல சம்ப்ரோக்ஷணம், புண்ணியாவதனம் ஹோமம் ஆகியவை நேற்று நடத்தினர். இதைத் தொடர்ந்து அத்தி வரதருக்கு தைல காப்பு அணிவிக்கப்பட்டன. ஆகம விதிப்படி பூஜைகள் நடத்தப்பட்டு வசந்த மண்டபத்தில் இன்று காலை 5:00 மணிக்கு அத்தி வரதர் காட்சிதருகிறார். பொதுமக்கள் காலை 5:00 மணிக்கு…

Read More

‘மாவீரன்’ நெப்போலியன் நடிப்பில் ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’!

கிரிஸ்டல் கிரீக் மீடியா, கைபா பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் டானியல் நட்சன் இயக்கத்தில், ‘மாவீரன்’ நெப்போலியன் நடிப்பில் ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’ . கிரிஸ்டல் கிரீக் மீடியா மற்றும் கைபா பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் டானியல் நட்சன் இயக்கத்தில், கோர்ட்னி மாத்யூஸ், ஆரன் நோபிள், ‘மாவீரன்’ நெப்போலியன், ஷீனா மோனின், ராபர்ட் லெனன் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ஒரு உணர்வுபூர்வமான திரைப்படம் ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’. தரமான குடும்ப மற்றும் நம்பிக்கை சார்ந்த திரைப்படங்களை .முன்னெடுத்துவரும் ‘கிறிஸ்டல் கிரீக்’ |நிறுவனமும், சர்வதேச தரத்தில் நல்ல கதைகளங்களைக் கொண்ட திரைப்படங்களை தயாரித்தும், ஆசியாவில் விநியோகித்தும் வரும் ‘கைபா பிலிம்ஸ்’ நிறுவனமும் இணைந்து, ஒரு யதார்த்தமான அழுத்தமான காதல் கதையை மிக நளினமானப் படைத்திருக்கின்றனர். முழு நேர வேலைப் பறிபோன நிலையில், முன்னாள் ஸ்கேட்டிங் சாம்பியனான கோர்ட்னி, தன்னுடைய நண்பரின் உறைந்த குளத்தில்,…

Read More

புதுமுகங்கள் நடிக்கும் “தோழர் வெங்கடேசன்”!

இயக்குனர் சுசீந்திரன் வழங்க, காலா பிலிம்ஸ் தயாரிப்பில், மகாசிவன் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் “தோழர் வெங்கடேசன்” .காலா பிலிம்ஸ் பி லிட் சார்பாக மாதவி அரிசங்கர் தயாரிக்க, அறிமுக இயக்குனர் மகாசிவன் இயக்கத்தில் அறிமுக நாயகன் அரிசங்கர், அறிமுக நாயகி மோனிகா சின்னகொட்லா நடித்திருக்கிறார்கள். எளிய, நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருடைய வாழ்வில், ஒரு விபத்து, அதோடு தொடர்புடைய சட்ட சிக்கல்கள் எந்த விதமான தாக்கங்களையும், வலிகளையும், வேதனைகளையும், பின்னடைவுகளையும் ஏற்படுத்துகிறது என்பதை தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது தோழர் வெங்கடேசன். இத்திரைப்படம் அரசு போக்குவரத்து துறையில் இருக்கும் அவலங்களை சுட்டி காட்டி அதிர்வை ஏற்படுத்தும் எனபெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்பட குழுவினர் காட்சி அமைப்புகள் இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, சமீபத்தில் நடைபெற்ற மயான கொள்ளை திருவிழாவில் நாயகனும், நாயகியும் பங்கேற்ற காட்சிகளை பல…

Read More