விருந்து – விமர்சனம் 3.75/5.. ஆக்சன் விருந்து

கதை… படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே தொழில் அதிபர் மலையாள நடிகர் முகேஷ் கொல்லப்படுகிறார்.. கொலைக்கான காரணம் என போலீஸ் விசாரித்துக் கொண்டிருக்கையில் சில தினங்களில் அவரது மனைவியும் கொல்லப்படுகிறார். இதனால் இவர்களது மகள் நிக்கி கல்ராணி மிகுந்த சோகத்தில் இருக்கிறார்.. தன் பெற்றோரின் கொலைக்கு என்ன காரணம் கொலை செய்தவர்கள் யார் என விசாரணையில் இறங்குகிறார் மகள். அப்போது இவரது சந்தேகம் அர்ஜுன் மீது விழுகிறது.. இதனையடுத்து அர்ஜுனை கொல்ல திட்டமிடுகிறார்.. அர்ஜுனுக்கும் இவர்கள் குடும்பத்திற்கு என்ன சம்பந்தம்..? நிஜமாகவே நிக்கி பெற்றோர்களை அர்ஜுன்தான் கொலை செய்தாரா? இவர்களது பின்னணி என்ன என்பதுதான் படத்தின் மீதிக்கதை.. நடிகர்கள்… நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆக்ஷனில் அதகளம் செய்திருக்கிறார் அர்ஜுன்.. தனக்கு படத்தில் ரொமான்ஸ் இல்லை ஜோடி இல்லை என்பதை உணர்ந்து ஆக்ஷனில் மட்டுமே ஸ்கோர்ஸ் செய்ய முடியும்…

Read More

பொயட்டுகள் லிரிக் என்ஜினியர்களுக்கு நடுவே ஒரு தேனெடுக்கும் தொழிலாளி!

பொயட்டுகள் பெருகிவிட்ட காலம் இது! இசை என்பது இரைச்சல். பாடல் வரிகளோ வெறும் கரைச்சல் என்றாகிவிட்ட காலத்தில் யாரோ ஒரு சிலர்தான் சினிமா பாடல்களையும் இலக்கியம் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் சாஃட்வேர்களில் தமிழ் தேடும் லிரிக் என்ஜினியர்களை கவுரவிக்கும் சினிமா, இத்தகைய நல்ல கவிஞர்களுக்கும் ஒரு சூடத்தை கொளுத்தி வைத்து ஆராதிப்பதுதான் தமிழ்சினிமாவின் தனிச்சிறப்பு. அப்படி சமீபத்திய ஆராதனைக்கு தன்னை தகுதியாக்கிக் கொண்டு, தமிழ் சினிமாவில் பாடல் எழுதிக் கொண்டிருக்கும் இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின், பாட்டு ரசிகர்களை கவனிக்க வைக்கிறார். தமிழ்சினிமாவில் பாடல் எழுதிக்கொண்டிருக்கும் கவிஞர்களில் சமூக வலைத்தளத்தள பக்கங்களில் உலகெங்கும் இலட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் பின்தொடரும் விரல்விட்டு எண்ணக்கூடிய கவிஞர்களில் அஸ்மினும் ஒருவர். “இளம் வயதில் மொழியை ஆளத்தெரிந்தவராக திகழ்கிறார் ஈழத்து இளங்கவிஞர் பொத்துவில் அஸ்மின். இவர் யாத்துள்ள கவிதைகளில் ஒரு தேர்ந்த…

Read More