சீறிய சிங்காரவேலன் மிரட்டும் உஷா ராஜேந்தர் சிலம்பரசன் பஞ்சாயத்தில் உண்மை நிலவரம் என்ன?

தமிழ் சினிமா நடிகர்கள் நடிக்கும் படங்களின் தகவல்களை சர்வதேச கிரிக்கெட் போட்டி நடக்கும் வெளிநாட்டு மைதானங்களில் பேனர் வைத்து கேட்டு அசரடித்தார்கள் நடிகர் சிலம்பரசன் நடித்த படங்களின்தயாரிப்பாளர்கள், நடிப்பதற்காக முன்பணம் கொடுத்த தயாரிப்பாளர்கள், படவெளியீட்டுக்காக ராஜேந்தர்கை நீட்டி வாங்கிய கடன் இவற்றின் மொத்த மதிப்பு 10 கோடி ரூபாய் சிலம்பரசன் ஒரு படத்தில் நடிப்பதற்காக தற்போது வாங்கும் சம்பளம் எட்டு கோடி ரூபாய்  பாதிக்கப்பட்டவர்கள், கடனை திருப்பிக்கொடுக்க வேண்டியவர்களிடமும் தமிழ்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் உஷா ராஜேந்தர் அவர்களை அழைத்து பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் முடிவு எட்டப்படாமல் இடியாப்ப சிக்கலாக நீடிக்கிறது  இந்த சூழ்நிலையில் சிலம்பரசன் நடிக்கும் படங்களுக்கு இடையூறு செய்தால் இந்திய பிரதமரிடம் முறையிடுவேன் என கூறி தமிழ் சினிமா வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார் சிலம்பரசனின் தயார் உஷா ராஜேந்தர் தொழில்சார்ந்த சிக்கல்களை சம்பந்தபட்ட சங்கங்களில் பேசி…

Read More

கபாலி நாயகி ராதிகா ஆப்தேவுக்கு எதிராக டீவிட்டரில் போராட்டம்

தோனி, கபாலி தமிழ்படங்களில் நடித்த இந்தி நடிகை ராதிகா ஆப்தே கதாபாத்திரத்திற்காக நிர்வாணமாகவும் நடிக்க கூடிய நடிகை என்பதுடன் எதிர்மறையான விமர்சனங்கள்பற்றிகவலைப்படாதவர் இப்போதுநடிகை ராதிகா ஆப்தேவுக்கு எதிராக டிவிட்டரில் திடீரென்று போராட்டம் வெடித்துள்ளது. #BoycottRadhikaApte என்ற ஹேஸ்டேக் மூலமாக ராதிகா ஆப்தேவைக் கண்டித்து டிவீட்டரில் திடீர் எதிர்ப்புப் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. காரணம், சமீபத்தில் ஆபாசப் படங்களைத் தயாரித்து, வெளியிட்டதாக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டார். அது குறித்து இதுவரையிலும் எந்தவொரு பாலிவுட் நடிகரும் கருத்துத் தெரிவிக்கவில்லை. நாட்டு நடப்பு சம்பந்தமாகவும், பெட்ரோல் விலை சம்பந்தமாகவும், குடியுரிமைச் சட்டம் சம்பந்தமாகவும் பல்வேறு நடிகர், நடிகைகள் தங்களது கருத்துக்களை கடந்த காலங்களில் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தனர் ஆனால், இப்போது தேசத்திற்கு ஒரு அசிங்கமாகத் தெரியும் இந்த ஆபாசப் பட வழக்கில் ஒரு…

Read More

மாயன் படத்தில்கதையின் நாயகனாக சிவபெருமான்

தமிழ் சினிமாவில் பல வருடங்களுக்குப் பிறகு சிவபெருமானை கதையின் நாயகனாக கொண்ட படமாக ‘மாயன்’ திரைப்படம் உருவாகியிருக்கிறது. இந்த பிரம்மாண்டமான பேன்டஸி த்ரில்லர் படத்தை ஃபாக்ஸ் அண்ட் க்ரோ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஜே.ராஜேஷ் கண்ணன் தயாரித்துள்ளார். முதல் இந்திய கமர்சியல் ஆங்கில திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் ஆஸ்திரேலிய ஆங்கில படத்திலும், மலேசிய தமிழ் படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ள வினோத் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதையின் நாயகிகளாக பிரியங்கா மோகன், பிந்து மாதவி மற்றும் பியா பாஜ்பய் மூவரும் நடித்துள்ளனர். மேலும் ஜான் விஜய், தீனா, கஞ்சா கருப்பு, ‘ஆடுகளம்’ நரேன், கே.கே.மேனன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஆங்கில பதிப்பில் இவர்கள் அனைவருமே சொந்தக் குரலில் பேசியிருக்கிறார்கள். பின்னணி இசை – ஜோன்ஸ் ரூபர்ட், ஒளிப்பதிவு – அருண் பிரசாத், கலை இயக்கம் – வனராஜ், வி.எஃப்.எக்ஸ். – ரமேஷ்…

Read More

தோனி பிரதமர் விஜய் முதல்வர் மதுரையில் பரபரப்பு

நடிகர் விஜய்யை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் வீரருமான தோனி இன்று சந்தித்துப் பேசினார். நடிகர் விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் ‘கோகுலம் ஸ்டூடியோ’வில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஷூட்டிங்கில் விஜய்யுடன் யோகிபாபு மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இந்த நேரத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி, இன்று இந்த ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு விசிட் அடித்தார். அங்கே அவர் நடிகர் விஜய்யை சந்தித்துப் பேசியிருக்கிறார். சந்திப்பு முடிந்த பிறகு தோனியை விஜய் காரவன் வரையிலும் உடன் சென்று வழியனுப்பி வைத்திருக்கிறார். இந்தச் சந்திப்பு எதற்காக என்று தெரியவில்லை. மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றால் இப்போது எதற்கு என்ற கேள்வியும் எழுகிறது. விரைவில் இதன் காரணம் தெரிய வரலாம்..! ஆனால் இப்போது இதுவல்ல பிரச்சினை.. இந்தச் சந்திப்பு முடிந்ததும்…

Read More

கடற்படை ஆபரேஷனை கதைகளமாக கொண்ட ஆபரேஷன் அரபைமா

முன்னாள் கடற்படை வீரர் பிராஷ் இயக்கத்தில் துருவங்கள் பதினாறு படத்திற்குப் பின் கடற்படை அதிகாரியாக  ரகுமான் நடித்திருக்கும் படம் ஆபரேஷன் அரபைமா   இந்தியநாட்டை அந்நிய ஆபத்துகள் சூழும் நேரங்களிலும், தீயவர்கள் நம் நாட்டிற்குள் கொடுஞ்செயல்கள் செய்யும் நோக்கத்துடன் நுழையும் நேரங்களிலும், நமது இராணுவ வீரர்கள் எதிரிகளிடம் இருந்து நம்மைக் காக்கின்றனர். அதற்காக பல ஆபரேஷன்களை நம்நாட்டு வீரர்கள்  செய்திருக்கின்றனர். அப்படி நடுக்கடலில் நடந்த ஒரு உண்மையான இராணுவ ஆபரேஷனை தழுவி எடுக்கப்பட்ட படம் தான், “ஆபரேஷன் அரபைமா”.என்கிறார் இயக்குநர் பிராஷ்   தமிழ்நாடு, கேரளா, அந்தமான், கோவா, துபாய் உள்பட பல இடங்களில், பல கடல்களில் இப்பபடத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. படத்தின் இயக்குநர் பிராஷ் முன்னாள் கடற்படை வீரர் என்பதால், கடலில் நடைபெறும் ஆபரேஷன் உண்மையான ஆபரேஷன் போல இருக்க வேண்டும் என்பதற்காக நிறைய உழைத்ததாககூறுகிறார்…

Read More

சொடக்கு மேல சொடக்கு 100 மில்லியனை கடந்தது

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சூர்யா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்து 2018ம் ஆண்டில் வெளிவந்த படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. அப்படத்தில் மணியமுதவன், விக்னேஷ் சிவன் எழுதி, அந்தோணி தாசன் எழுதிய ‘சொடக்கு மேல சொடக்கு’ பாடல் அப்போதே சூப்பர் ஹிட்டானது. யு டியூபில் அந்த வீடியோ பாடல் 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. அப்பாடல் தற்போது 100 மில்லியனைக் கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், யு டியூப் தளத்தில் இன்னும் சில ஆயிரங்கள் பார்வை அதற்குக் குறைவாக உள்ளது. இப்பாடல் 100 மில்லியனைக் கடந்த 26வது தமிழ் சினிமா பாடல். நேற்றுதான் ‘விஸ்வாசம்’ படத்தின் அடிச்சி தூக்கு பாடல் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 25வது பாடலாக பட்டியலில் இடம் பிடித்தது. சூர்யாவின் இரண்டாவது 100 மில்லியன் பாடல்…

Read More

வதந்தியாகி போன வடிவேலுவின் நேசமணி

சமீபகாலமாக நடிகர் வடிவேலு புதிய படங்களில் நடிக்கவில்லை என்றபோதும் அவ்வப்போது படங்கள், வெப்சீரிஸ்களில் அவர் நடிப்பது போன்ற வதந்திகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கடந்த சில தினங்களாக டிடெக்டிவ் நேசமணி என்ற படத்தில் வடிவேலு நடிக்க போவதாகவும், அந்த படத்தை சி.வி.குமார் தயாரிப்பதாகவும் சமூகவலைதளத்தில் வடிவேலு போஸ்டருடன் ஒரு செய்தி வைரலானது. இதை தயாரிப்பாளர் சி.வி.குமார் தனது டுவிட்டரில் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், ‛‛பொய் செய்தியாக இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமாப்பா… ஆனா தலைவர் டிசைன்ல சூப்பர்ப்பா. என்று பதிவிட்டுள்ளார். ஆக, வடிவேலுவின் புதிய படம் குறித்த இந்த செய்தியும் வதந்தியாகி விட்டது.

Read More

திருடர்கள் கதையை படமாக்கும் தெலுங்கு திரையுலகம்

தமிழில் மலையூர் மம்பட்டியான், கும்பக்கரை தங்கய்யா, சந்தன கடத்தல் வீரப்பன் போன்று நெகட்டிவ் ஹீரோக்களின் கதை சினிமா ஆகியிருக்கிறது. தெலுங்கில் அதுபோன்ற புதிய போக்குதற்போது உருவாகி உள்ளது. தெலுங்கு சினிமாவில் வளர்ந்து இளம் ஹீரோ பெல்லம் கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் தற்போது நடிக்க இருக்கும் புதிய படத்தின் பெயர் ஸ்டூவர்புரம் டோங்கா. இந்த படம் 1970 களில் ஸ்டூவர்புரத்தின் பிரபல திருடனான டைகர் நாகேஸ்வர ராவின் வாழ்க்கை கதை. எத்தனை முறை, எந்த மாதிரியான சிறையில் அடைத்தாலும் அதிலிருந்து தப்பித்து விடுவது நாகேஸ்வரராவின் ஸ்டைல். ஜெயிலில் இருந்து தப்பித்த வழிமுறைகளை வைத்தே சிறையின் பாதுகாப்பை டிசைன் செய்ததாக கூறுவார்கள். அடிக்கடி சிறையில் இருந்து தப்பித்ததால் அவரது பெயருக்கு முன்னால் டைகர் என்ற பட்டமும் சேர்ந்து கொண்டது. 1987ல் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். படத்தை பெல்லம்கொண்டா, ஸ்ரீ லக்ஷ்மி…

Read More

கங்கணா ரணாவத் வெளியிட்ட கவர்ச்சிப் புகைப்படங்கள்

ஹிந்தித் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கங்கனா ரணவத். அடிக்கடி சர்ச்சைக் கருத்துக்களைப் பதிவிட்டு செய்திகளில் பரபரப்பாக அடிபடுபவரும் கூட. தமிழில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் கங்கனா. அடிக்கடி அவரது இன்ஸ்டாகிராம் தளத்தில் விதவிதமான புகைப்படங்களைப் பகிர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். ஆனால், இதுவரையில் இல்லாத அளவிற்கு இரண்டு கவர்ச்சிகரமான புகைப்படங்களைப் பதிவிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார். மெல்லிய மேலாடை அணிந்து அவர் பதிவிட்டுள்ள போட்டோக்கள் எட்டு லட்சம் லைக்குகளைக் கடந்து கொண்டிருக்கின்றன. அந்த புகைப்படங்களைப் பகிர்ந்து, “வாழ்வதற்கும் இறப்பதற்கும் இடையில் காதலில் எந்த வித்தியாசமும் இல்லை, நம்பிக்கையில்லாமல் இறக்கும் ஒருவரை மட்டுமே பார்த்து நாம் வாழ்கிறோம் – காலிப்,” என்றும் பதிவிட்டுள்ளார்.

Read More

திரையரங்குகள் வரி ஏய்ப்பு தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன் குற்றசாட்டு

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர்சுப்பிரமணி வலைத்தள சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த போதுதமிழ்த்திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கு தற்போதைய சினிமா நிலவரம்பற்றி தெரியவில்லை  நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள் தற்போது படங்கள் தயாரிக்காததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என கூறியிருந்தார் தேர்தல் மூலம் வெற்றிபெற்று பொறுப்புக்கு வந்தவர்கள் பற்றி தொடர்ந்து திருப்பூர் சுப்பிரமணி அவதூறாக பேசி வருவது பற்றி விவாதிக்க தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கஉறுப்பினர்கள் கூட்டம்கடந்தவெள்ளிக்கிழமை மாலை(30.07.2021)சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள், எடுக்கப்பட்ட முடிவுகள் சம்பந்தமாக அதிகாரபூர்வமாக செய்திகுறிப்பை சங்கத்தின் சார்பில் இன்றுவரை வெளியிடப்படவில்லை இதுசம்பந்தமாக தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் இராதாகிருஷ்ணனிடம் பேசியபோது திரையரங்குகள் சம்பந்தமாக ஐந்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது  என்றவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் தற்போதைய நிலைமை…… சினிமா தயாரிப்பு தொழில் கடந்த பத்தாண்டுகளாகவே கடுமையான…

Read More