மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் பான் இந்திய படத்தில் இணையும் ‘சாண்டல்வுட் டைனமோ’ விஜய் குமார்

இயக்குநர் பூரி ஜெகன்னாத்- ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் புதிய பான் இந்திய திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவின் கவனத்தை கவர தயாராகி வருகிறார். பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் பூரி ஜெகன்னாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோர் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகை தபு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தற்போது இந்தத் திரைப்படத்தில் ‘சாண்டல்வுட் டைனமோ’ விஜய்குமார் இணைந்திருக்கிறார். ‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்திற்கு பின்னர் விஜயகுமார் நடிக்கும் படம் இது.‌ இவர் திரை தோற்றத்திலும் .. தரமான நடிப்பிலும் பெயர் பெற்றவர். விஜய் சேதுபதி அவருடைய திரையுலக பயணத்தில் புதிய தளத்தை உருவாக்கும் வகையில் துணிச்சலான வேடத்தில் நடிக்கிறார். ஒரு சக்தி வாய்ந்த கதாபாத்திரத்தின் மூலம் நடிகை தபு மீண்டும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் நடிக்கிறார்.…

Read More

சசிகுமார் – சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் முன்  வெளியீட்டு நிகழ்வு !!

நடிகர் சசிகுமார் – சிம்ரன் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில், வரும் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ள ‘ டூரிஸ்ட் ஃபேமிலி ‘ எனும் திரைப்படத்தின் ப்ரீ ரிலிஸ் ஈவண்ட், படக்குழுவினருடன், திரையுலக முன்னணி பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ டூரிஸ்ட் ஃபேமிலி ‘எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத் தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ராஜ் கமல்…

Read More

Sun TVயின் YouTube சேனல் 30 மில்லியன் ஃபாலோயர்ஸை பெற்று சாதனை படைத்துள்ளது!!

இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி சேனலாகவும், உலகின் மிக அதிகமாக பார்வையிடப்படும் தமிழ் தொலைக்காட்சி சேனலாகவும் திகழும் Sun TV, தனது பெருமைக்கு மேலும் ஒரு மகுடம் சூட்டிக்கொண்டுள்ளது. உலகளவில் மிகவும் பிரபலமான இந்த தொலைக்காட்சி நெட்வொர்கின் YouTube சேனல், Sun TV, தற்போது 30 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை பெற்றுள்ளது. இந்த சாதனையில் ஆச்சரியம் ஏதுமில்லை ஏனெனில் Sun TVயின் YouTube சேனலில் தினமும் 100க்கும் மேற்பட்ட வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன! இதில் Sun TVயில் ஒளிபரப்பப்படும் பல பிரபலமான நிகழ்ச்சிகளின் வீடியோக்கள் அடங்கியுள்ளன, உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களை, இந்த நிகழ்ச்சிகள் ஈர்த்து வருகின்றன. இதற்கு மேலாக, Sun Pictures தயாரிக்கும் திரைப்படங்களின் பாடல்கள், டிரெய்லர்கள் மற்றும் டீசர்களும் இந்த பிரபலமான நெட்வொர்கின் YouTube சேனலில் பிரத்யேகமாக வெளியிடப்படுகின்றன. Sun TV YouTube சேனலில் பல…

Read More

வேம்பு’ திரைப்படம் அகமதாபாத் சர்வதேசத் திரைப்பட விழாவில் இரண்டு விருதுகளை வென்றது

மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’. அறிமுக இயக்குநர் V.ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் மெட்ராஸ் (ஜானி), தங்கலான், கபாலி படங்களில் நடித்த ஹரிகிருஷ்ணன் நாயகனாக நடிக்க, டூலெட், மண்டேலா படங்களில் நடித்த ஷீலா கதாநாயகியாக நடித்திருக்கிறார். மாரிமுத்து, ஜெயராவ், பரியேறும் பெருமாள், கர்ணன், வாழை படங்களில் நடித்த ஜானகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தனுஷ் நடித்த தங்கமகன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த A. குமரன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார், அதோ முகம், GV.பிரகாஷ் நடித்த ரபேல் படத்திற்கு இசை அமைத்த மணிகண்டன் முரளி இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார், மிருதன் படத்திற்கு படத்தொகுப்பு செய்த KJ . வெங்கட்ரமணன் இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார், துணிவு, வலிமை போன்ற முன்னணி படங்களில் பணிபுரிந்த ராம்ஜி சோமா இப்படத்திற்கு…

Read More

எல்லா துறைகளும் ஒற்றுமையாக இணையும் இடம் சினிமா மட்டும் தான் : இயக்குநர் பேரரசு பேச்சு!

ஸ்ரீசாய் சைந்தவி கிரியேஷன்ஸ் சார்பில் பாண்டுரங்கன் தயாரிப்பில், கஜேந்திரா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘குற்றம் தவிர்’.இப்படத்தில் ரிஷி ரித்விக் நாயகனாகவும் ஆராதியா நாயகியாகவும் நடிக்க,சித்தப்பு சரவணன், வினோதினி, ஆனந்த் பாபு,செண்ட்ராயன், ஜார்ஜ் விஜய்,சாய்தீனா , மீசை ராஜேந்திரன் ,ராணுவ வீரர் காமராஜ்,குழந்தை சாய் சைந்தவி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ரோவின் பாஸ்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.எடிட்டிங் ரஞ்சித். பாடல்கள் கு.கார்த்திக். இந்த ‘குற்றம் தவிர் ‘படத்தின் முன்னோட்டம், பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. ‘குற்றம் தவிர் ‘ படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்களை கங்கை அமரன் வெளியிட்டார். விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அதிமுக கட்சியை சேர்ந்த ஈ. . புகழேந்தி, ஆன்மீகவாதி ஜெய்பிரகாஷ் குருஜி,தொழிலதிபர் பிரகாஷ் பழனி ,இயக்குநர்கள் ஆர்.அரவிந்தராஜ், பேரரசு,பவித்ரன், ராஜகுமாரன், நடிகர் சித்தப்பு…

Read More

தமிழனுக்குத் தமிழில் டைட்டில் வைக்கத் தெரியவில்லை- அகமொழி விழிகள் பட விழாவில் தயாரிப்பாளர் கே ராஜன் !!

சச்சுஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பவுலோஸ் ஜார்ஜ் தயாரிப்பில், சசீந்திரா கே. சங்கர் இயக்கத்தில் மாறுபட்ட கதைக்களத்தில், அட்டகாசமான திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “அகமொழி விழிகள்”. வரும் மே மாதம் 9 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடை பெற்றது. இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் பவுலோஸ் ஜார்ஜ் பேசியதாவது… சச்சு கிரியேஷன்ஸ் சார்பில் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த திரைப்படம் மே மாதம் 9 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. நீங்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும், இப்படத்தைத் திரையரங்குகளில் வந்து பாருங்கள், அனைவருக்கும் நன்றி. சிறு முதலீட்டு தயாரிப்பாளர் ஆர் கே அன்பழகன் பேசியதாவது… உண்மையில் அழகாகத் தெளிவான தமிழில், ஒரு டைட்டில் வைத்ததற்கே இந்த குழுவினரை பாராட்ட வேண்டும்.…

Read More

கலைப்புலி ஜி. சேகரன் அவர்களின் நினைவஞ்சலி கூட்டம்!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பாக சங்க செயலாளர் கலைப்புலி ஜி. சேகரன் அவர்களின் மறைவை முன்னிட்டு நினைவு அஞ்சலி கூட்டம் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சங்க நிர்வாகிகள் கே. ராஜன், பி. அந்தோணி தாஸ், எஸ். நந்தகோபால், யு. தருண்குமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் & சங்க உறுப்பினர்கள் சிறப்புரையாற்றினர். கலைப்புலி எஸ். தாணு பேசியதாவது, ”என் உடன் பிறவா சகோதரர் கலைப்புலி ஜி. சேகரன். 1973 காலக்கட்டத்தில் இருந்தே கலைப்புலி சேகரன் எனக்கு பழக்கம். அவருடன் பல நல்ல நினைவுகள் சம்பவங்கள் இருக்கிறது. பல நேரங்களில் என் அலுவலகத்தில் மதிய உணவு சேர்ந்து சாப்பிடுவோம். அவரது கதைகளை கேட்டு மெய்சிலிர்த்து இருக்கிறோம். கலைப்புலி சேகரன் கதை சொன்னால் யாரும் மறுக்க முடியாது. அந்த…

Read More

“கன்னி” குறும்பட அறிமுக விழா !!

Red Bird Production சார்பில் அனன்யா அம்சவர்தன் தயாரிப்பில், கரீஷ்மா இயக்கத்தில் ராம் நிஷாந்த், மிருதுளா நடிப்பில், 90 களின் பின்னணியில் ஒரு பெண்ணின் கதையைச் சொல்லும் அழகான படைப்பாக உருவாகியுள்ள குறும்படம் “கன்னி”. இக்குறும்படத்தின் அறிமுக விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. தயாரிப்பாளர் அனன்யா அம்சவர்தன் பேசியதாவது… எங்கள் கன்னி குறும்படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது, பெரும் மகிழ்ச்சி. உங்களது பாராட்டுக்கள் தான் இந்த வெற்றிக்குக் காரணம். கன்னி குறும்படம், கல்லூரியில் வெகு சாதாரணமாகப் பேச ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாக ஆனது. இந்த குறும்படத்திற்காக ராம் நிஷாந்த், மிருதுளா இருவரையும் நடிக்க அழைத்தோம். அவர்களது பங்களிப்புக்கு நன்றி. எடிட்டர் அருண், இசை தேஜஷ், ஒளிப்பதிவாளர் கிச்சா ஆகியோருக்கு நன்றி. அனைவரது உழைப்பினால் தான் இந்த கனவு…

Read More

சுமோ – திரை விமர்சனம

சிவா அலைச்சறுக்கு விளையாட்டில் ஆர்வம் கொண்டவர் அந்த விளையாட்டில் தன்னை மேம்படுத்திக் கொள்ள விரும்புபவர் சென்னை கடற்கரையோரம் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை பார்த்துக் கொண்டே அலைச்சறுக்கு விளையாட்டையும் தொடர்கிறார். இப்படி ஒரு நாள் அலைச்சறுக்கு விளையாட்டுக்காக கடற்கரை வருபவர் அங்கே கரையோரம் ஓங்குதாங்கான ஒருவர் மயக்க நிலையில் இருப்பதை காண்கிறார். அவரைக் கண் விழிக்க வைத்து தன் வீட்டுக்கு அழைத்து வருகிறார். பழசு எல்லாம் மறந்து போன அந்த நபரும் தற்போது குழந்தையின் மனநிலையில் இருக்கிறார். இந்நிலையில் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டவர் ஜப்பானில் உள்ள பிரபல சுமோ மல்யுத்த வீரர் என்பது தெரிய வர, சிவா அவரை அழைத்துக் கொண்டு ஜப்பான் போகிறார். அங்கே போன பிறகுதான் அந்த சுமோ மல்யுத்த வீரர் அவரது எதிரிகளால் நாடு கடத்தப்பட்டவர் என்பது தெரிய வர… இதற்கிடையே மருத்துவ சிகிச்சை…

Read More

மறு வெளியீட்டிலும் வெற்றியடைந்த ‘சச்சின்’ திரைப்படக்குழுவின் சக்ஸஸ் மீட்!

சமீப ஆண்டுகளில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப் பட்டு வெற்றியடைந்த தமிழ் படங்களை மறு வெளியீடு செய்வது சமீபத்திய ட்ரென்டாக உள்ளது. இதனால் ரசிகர்கள் பெரிய திரையில் தங்களுக்குப் பிடித்த காட்சிகளை மீண்டும் பார்த்து கொண்டாடுவதை காண முடிகிறது. விஜய்யின் ‘கில்லி’ மறு வெளியீடாகி மாபெரும் வெற்றி பெற்றது, இதற்கு ஒரு உதாரணமாக அமைந்துள்ள நிலையில், பழைய ‘பிளாக்பஸ்டர்’ படங்கள் திரையரங்குகளில் மீண்டும் வெளியாவது ரசிகர்களிடையே உற்சாகத்தை மேலும் அதிகரித்துள்ளது. ‘தளபதி’ விஜய்யின் நடிப்பில் 2005-ஆம் ஆண்டு வெளியான காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படமான ‘சச்சின்’ 20-ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி உலகமெங்கும் 350-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மறுவெளியீடாகி மாபெரும் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக படக்குழுவினரின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. *ஷோபி* படத்தில் இடம்பெற்ற் ‘வாடி வாடி’ உள்ளிட்ட பாடல்களுக்கு நடனம் அமைத்த…

Read More