யூடியூபர் மதனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்

தலைமறைவாக இருந்த யூடியூபர் டாக்சிக் மதனை தர்மபுரியில் வைத்து தனிப்படை போலீசார் இன்று(ஜூன் 18) கைது செய்தனர்.   சேலத்தைச் சேர்ந்த மதன் என்பவர் TOXIC MADAN 18+ என்ற யூடியூப் சேனல் மூலம் 8 லட்சம் வாடிக்கையாளர்களை தன் வசப்படுத்தி, பப்ஜி விளையாட்டு குறித்து லைவ் ஸ்ட்ரீமிங் செய்து பணத்தை அள்ளி வந்துள்ளார். அவருடன் ஆன்லைனில் விளையாடும் சிறுவர்கள் மற்றும் பெண்களை இழிவாகவும், ஆபாசமாகவும் பேசி வந்துள்ளார். இதுதொடர்பாக மதன் மீது அளிக்கப்பட்ட 167 புகார்களின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மதன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.   இதைத் தொடர்ந்து துணை ஆணையர் ராஜேஷ் கண்ணா தலைமையிலான தனிப்படை போலீசார் தலைமறைவான மதனை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.   இதற்கிடையில் மதன்…

Read More

மகேஷ்பாபுவை இயக்கபோகும் லோகேஷ் கனகராஜ்

விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தை டைரக்டு செய்தவர், லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்து கமல்ஹாசனை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். அந்த படத்தை இயக்கி முடித்த பின், மீண்டும் அவர் விஜய் நடிக்கும் படத்தை டைரக்டு செய்யப்போவதாக பேசப்படுகிறது. இதற்கிடையில், தெலுங்கில் பிரமாண்டமான படங்களை தயாரித்து வரும் மைத்ரி மூவீஸ் என்ற பட நிறுவனம் லோகேஷ் கனகராஜை சந்தித்து தங்கள் நிறுவனத்துக்காக ஒரு தெலுங்கு படத்தை டைரக்டு செய்து தரும்படி, கேட்டுக் கொண்டிருக்கிறதாம். இதற்காக லோகேஷ் கனகராஜிடம் ஒரு பெரிய தொகையை அட்வான்ஸ் ஆக கொடுத்து இருக்கிறதாம். மேலும் பிரபாஸ், ராம் சரண் ஆகிய இருவரும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க தயாராக இருக்கிறார்கள். இப்போது விஜய் நடிக்கும் 66-வது படத்தை முடித்த பின், மகேஷ்பாபுவை வைத்து ஒரு தெலுங்கு படத்தை இயக்க இருப்பதாக கூறப்…

Read More