தென் சென்னையை மையமாக கொண்ட விறுவிறுப்பான கதையம்சத்தில்ரிலீசுக்கு தயாராகும் புதிய திரில்லர் திரைப்படம் “தென் சென்னை”

தென் சென்னையை மையமாக கொண்ட விறுவிறுப்பான கதையம்சத்தில் புது முகங்கள் ரங்கா, ரியா நடிப்பில் உருவாகிவரும் புதிய ஆக்ஷ்ன்-திரில்லர் திரைப்படம் “தென் சென்னை” இப்போது இறுதிக்கட்ட பணிகளை எட்டியுள்ளது.. சென்னையை மையமாக கொண்டு பல திரைப்படங்கள் வந்துள்ளன, இவற்றில் இருந்து மாறுபட்டு தென் சென்னை பகுதியினை வேறு கோணத்தில் காட்டும், புதுமையான ஆக்சன் திரில்லராக அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் இப்படத்தை உருவாக்கி வருகிறார் அறிமுக இயக்குநர் ரங்கா. இதில்முன்னாள் ரானுவ அதிகாரியாக இருந்து நடிகரான நிதின் மெஹ்தாவும், ‘பொன்னியின் செல்வன்’ நாடக புகழ் இளங்கோ குமனனும் பிறதான பாத்திரங்கள் ஏற்றுள்ளனர். மேலும் வத்சன் நடராஜன், சுமா, ஆறு பாலா, திலீபன், தாரனி மற்றும் பலர் இதில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் ரங்கா இப்படத்தை தயாரித்து இயக்குவதுடன், கதையின் நாயகன், பாடல் ஆசிரியர் என…

Read More

ஃபேண்டஸி லவ் ஸ்டோரி பாணியில் உருவாகி இருக்கும் மெஸன்ஜர்

பி.வி.கே ஃபிலிம் ஃபேக்டரி (PVK FILM FACTORY) சார்பில் பா.விஜயன் தயாரித்திருக்கும் படம் மெஸன்ஜர். இதில் ஸ்ரீராம் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவர் கன்னிமாடம், யுத்தகாண்டம் பாத்திரகாட் (மலையாளம்) போன்ற படங்களில் கதாநாயகனாகவும் தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சார் படத்தில் சிறப்புத் தோற்றத்திலும் நடித்து இருக்கிறார். கதாநாயகிகளாக மனீஷா ஜஸ்னானி, ஃபாத்திமா நஹீம், வைசாலி ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் லிவிங்ஸ்டன், பிரியதர்ஷினி ராஜ்குமார் , ஜீவா ரவி, யமுனா, கோதண்டன், இட்இஸ் பிரசாந்த், கூல்சுரேஷ், ராஜேஷ்வரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் ரமேஷ் இலங்காமணி. இவர் இயக்குனர் A.R. காந்தி கிருஷ்ணா மற்றும் இயக்குனர் பத்ரி அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். ஐடி கம்பெனியில் வேலை செய்யும் ஶ்ரீராம் கார்த்திக் காதல் தோல்வியால் தற்கொலைக்கு…

Read More

தீபாவளி விழாவில் மூத்த செய்தியாளர்களை கவுரவித்த அமைச்சர்!

தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தீபாவளி திருவிழா(2024) நேற்று மாலை ,மிகப் பிரம்மாண்டமாகவும் கோலாகலமாகவும் நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மாண்புமிகு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர் திரு.மதிவேந்தன் அவர்கள் மற்றும் இந்த வருடத்தின் மிக பெரிய வெற்றி பெற்ற லப்பர் பந்து பட ஹீரோ ஹரிஷ் கல்யாண் இருவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்த நிகழ்வில், மூத்த பத்திகையாளர்கள் , கங்காதரன், தேவி மணி, திரை நீதி செல்வம் ஆகியோருக்கு பாராட்டும் பரிசும் வழங்க பட்டது . நிகழ்ச்சியின் துவக்கமாக தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டு முதன்மையாக வரவேற்பு உரை செயலாளர் கோடங்கி ஆபிரகாம் மற்றும் தலைவர் கவிதா உரையுடன் விழா இனிதே துவங்கப்பட்டது. பத்திரிகை துறையின் மூத்த நிருபரான திரு கங்காதரன் அவர்களுக்கு சங்கம் சார்பில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நினைவு…

Read More

‘பிரதர்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் எம் . ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ திரைப்படம் தீபாவளி திருநாளான அக்டோபர் 31ம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பிரதர்’ திரைப்படத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா அருள் மோகன், பூமிகா சாவ்லா, விடிவி கணேஷ், நட்டி என்கிற நட்ராஜ் சுப்பிரமணியன், ராவ் ரமேஷ், அச்யுத் குமார் , சரண்யா பொன்வண்ணன், சீதா, சதீஷ் கிருஷ்ணன், எம்.எஸ் . பாஸ்கர், சுரேஷ் சக்கரவர்த்தி,  விருத்தி விஷால், மாஸ்டர் அஸ்வின் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விவேகானந்த் சந்தோஷம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை ஆசிஷ் ஜோசப் கையாள , கலை இயக்கத்தை ஆர் .கிஷோர்…

Read More

“கப்பேலா” படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் முஹம்மது முஸ்தபா இயக்கத்தில், அதிரடி ஆக்சன் திரில்லர் டிராமாவாக உருவாகியிருக்கும் “முரா” படத்தின் அசத்தலான டிரெய்லர் வெளியாகியுள்ளது.

ரகசியமாக பாதுகாக்கப்படும் கருப்பு பணத்தை கொள்ளையடிக்க திட்டமிடும் இளைஞர் குழு, கேங்ஸ்டர், போலீஸ் என பரபரக்கும் சம்பவங்களை சொல்லும் இப்படம், திருவனந்தபுரத்தில் நடந்த உண்மைச்சம்பவத்தின் அடிப்படையாக வைத்து, திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஹிருது ஹாரூன், சுராஜ் வெஞ்சரமூடு, கனி குஸ்ருதி மற்றும் மாலா பார்வதி உள்ளிட்ட புதிய இளம் நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். படத்தின் மையத்தையும் கதாப்பாத்திரங்களையும் அறிமுகப்படுத்தும் இந்த டிரெய்லர், கேங்ஸ்டர் ஜானரில் ஒரு புதுமையான திரை அனுபவத்தை தரும் என்பதை உறுதி செய்கிறது. கேன்ஸ் விருது பெற்ற “ஆல் வி இமேஜின் அஸ் லைட்”, அமேசான் வெப் சீரிஸ் “க்ராஷ் கோர்ஸ்”, ஹிந்தி திரைப்படம் “மும்பைகார்” மற்றும் தமிழ் திரைப்படமான தக்ஸ் திரைப்படங்களில் நடித்த ஆகியவற்றில் நடித்ததற்காக அறியப்பட்ட ஹிருது ஹாரூன் இப்படம் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமாகிறார். “ஜன கண மன” மற்றும்…

Read More

கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழாத் துளிகள்!

ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில். சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டப் பலர் நடிப்பில் நவம்பர் 14 ஆம் தேதி பான் இந்தியா வெளியீடாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘கங்குவா’. இதன் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. பாடலாசிரியர் விவேகா பேசியிருப்பதாவது, “’கங்குவா’ படம் நிச்சயம் இந்திய சினிமாவின் பெருமையாக இருக்கும். புதிய உலகம் ஒன்றை உருவாக்குவதில் சிவா மிகப்பெரிய வெற்றியை இந்தப் படத்தில் பெற்றுள்ளார். அவரது இன்னொரு முகத்தை பார்த்தேன். சூர்யா சார் தனது நடிப்பின் உச்சத்தை இந்தப் படத்தில் கொடுத்துள்ளார். காலத்திற்கு ஏற்ப புதிய மனிதனாக இந்தப் படத்தில் தன்னை மாற்றியுள்ளார். தேவிஸ்ரீபிரசாத் இசையில் படம் நெருப்பாக வந்திருக்கிறது. தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர். படம் மிகப்பெரிய வெற்றியடையும்” என்றார்.   பாடலாசிரியர்…

Read More

இயக்குநர் ராம்கோபால் வர்மா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சாரி’ திரைப்படம் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

இந்திய சினிமாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவரான ராம்கோபால் வர்மா தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். பயமுறுத்தும் திகில் கதைகள், யதார்த்தமான கதைகள் மற்றும் பல உண்மை மாஃபியா கதைகளை திரையில் கொண்டு வந்து பலரது பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார் ராம்கோபால் வர்மா. அவரது பெருமையை எடுத்துக்காட்டும் விதமாக அவர் இயக்கிய ‘பூத்’ திரைப்படம் பல நகரங்களில் ஹாலோவீன் விழாவிற்காக மீண்டும் வெளியிடப்பட்டு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. பல இளம் திறமையாளர்களை தொடர்ந்து ஊக்குவித்து வரும் ராம்கோபால் வர்மாவின் தயாரிப்பில் வெளியாகும் ‘சாரி’ திரைப்படத்தை கிரி கிருஷ்ணா இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் டிசம்பர் 20, 2024 அன்று வெளியாகும் என்பதை படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. படத்தின் அடிப்படை கரு அதிகப்படியான காதல் பயமுறுத்தும் என்பதுதான். சமூக ஊடகங்களில் ஏற்படும் சில எதிர்பாராத விஷயங்கள் சமூகத்திலும்…

Read More

சேவகர் – திரை விமர்சனம்

‘சேவகர்’படத்தில் பிரஜின், ஷகானா , போஸ் வெங்கட், ஆடுகளம் நரேன்,மதுரை சரவணன், உடுமலை ராஜேஷ், ஹீமா சங்கரி, ரூபா, சுனில், பாலு, ஷாஜி கிருஷ்ணா, சாய் சங்கர், ஜிஷ்னு ஜித் ,மனோ,ஜமீன்குமார்,ஷர்புதீன்,சந்துரு,ராஜ்குமார் நடித்துள்ளனர். இப்படத்தை சந்தோஷ் கோபிநாத் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். இசை ஆர் டி மோகன். ஒளிப்பதிவு பிரதீப் நாயர், படத்தொகுப்பு ரஞ்சித், கலை இயக்கம் ஸ்ரீகுமார் ,நடனம் ரேவதி ராவ், பாடல்கள் ராஜேஷ் முருகன், வேலன் ராஜ், அன்பழகன் .,சவுண்ட் இன்ஜினியர் கதிர்.தயாரிப்பு மேற்பார்வை சதீஷ் பாலக்காடு. சில்வர் மூவிஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ராஜன் ஜோசப் தாமஸ்,தயாரித்துள்ளார். அவருடன் சுனில் குமார் பி ஜி ,இயக்குநர் சந்தோஷ் கோபிநாத் இணைந்துள்ளனர். நாட்டில் எங்கு அநியாயம் அக்கிரமம் நடந்தாலும் துணிந்து நின்று தட்டிக் கேட்கும் ஒருவராக கதாநாயகன் பிரஜின். அவருக்கு உடன் நின்று கைகொடுக்க…

Read More

“‘என்அன்பே’ – மீராகதிரவன் இயக்கத்தில் வரவிருக்கும் ‘ஹபீபி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!”

அவள் பெயர் தமிழரசி ,விழித்திரு ஆகிய படங்களின் மூலம் பரவலான கவனத்தை ஈர்த்த இயக்குநர் மீராகதிரவன் இயக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் படம் ஹபீபி.அரபுச் சொல்லான ஹபீபிக்கு தமிழில் ‘என்அன்பே’ என்று அர்த்தம். இதன் firstlook poster நேற்று வெளியாகி சமூகவளைத்தளங்களில் பெரும்வரவேற்பை பெற்றுள்ளது. படம் குறித்து இயக்குநர் மீரா கதிரவன் கூறும்போது, “இப்படி ஒரு படம் பண்ண வேண்டும் என்பதற்காகத்தான் நான் சினிமாவிற்கு வந்தேன். இருபத்திரண்டுகளுக்கு பிறகு சாத்தியமாகியிருக்கிறது. நமது ஆரவாரமான பேச்சுக்களை ஓதுக்கிவைத்துவிட்டு சகமனிதனின் தோளில் கைகளை போட்டவாறு மனங்களைப்பற்றி பேசவேண்டிய நேரமிது. மனிதத்தையும் அன்பையும் சக மனிதன் மீதான சகிப்புத்தன்மையையும் பேசவேண்டிய தேவையுள்ளது.   இந்த படம் தமிழகத்தின் தென்பகுதியில் இருக்கும் தமிழ் பேசக்கூடிய இஸ்லாமியர்களின் வாழ்வியலை பற்றிய படமாக இருந்தாலும் எல்லா மக்களையும் ஈர்க்கக்கூடிய படமாக இருக்கும். இதன் பின்னணியில் ஒரு அழகான காதல்…

Read More

இதை செய்வாரா தளபதி விஜய்… ஹிட் லிஸ்ட் படத்தின் கதாசிரியர் தேவராஜ் கடிதம்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் தமிழ்நாடு அரசியலில் களமிறங்குவதாக அறிவித்து “தமிழக வெற்றிக் கழகம்” என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். இதற்கான அறிவிப்புகள் வெளியான நிலையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சின்னம் மற்றும் கட்சி பாடல் உள்ளிட்டவை வெளியிடப்பட்டன. இந்த வரிசையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு, “வெற்றிக் கொள்கைத் திருவிழா” என்ற பெயரில் விக்கிரவாண்டியை அடுத்த வி சாலையில் நடைபெற இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பலர் த.வெ.க. தலைவர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பலர் மாநாடு சிறப்பாக நடைபெற…

Read More