நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவருமான மன்சூர் அலிகான், வருகின்றன நாடாளுமன்ற தேர்தலில் ஆரணி தொகுதியில் நிற்கிறார்! இது குறித்து தனது அறிக்கையில்… “மயிலம் மக்கள் மனம், மகிழம்பூவாய் மகிழ! செஞ்சி கோட்டையின் செம்மாந்தர்கள் கொடி பறக்க, செய்யாறு மக்களின் சோற்றில் நெய்யாறு ஓட, நான் சுசுவாசி அல்ல, பந்தா வாசி அல்ல, மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த வந்த-வாசி! அரசியல் பொதுநல, சந்நியாசி! போளூர் மக்களின் புகழூர் தாய்மார்கள் வயிற்றில் பால் வார்த்திடும், பாலூர், ஆரணியே, அன்ண பட்சினியே, நினை, என் ,மனதின் ஆழ்நிலை சக்தியாய், தாயார், மகளாய் துதித்து, பணி செய்ய, ஆணையிடுவாய், தாழ்திறவாய், தரணி போற்றும், ஆரணியே! —நடிகர் மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயக புலிகள் – தலைவர்!
Read MoreMonth: February 2024
சந்தானம் படத்தின் போஸ்டர் மற்றும் முதல் பார்வை வெளியிட்ட கமல்ஹாசன்
கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் பிரம்மாண்ட தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படமான ‘இங்க நான் தான் கிங்கு’ முதல் பார்வையை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டார் G.N. அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம், ‘வெள்ளைக்கார துரை’, ‘தங்கமகன்’ ‘மருது’, ‘ஆண்டவன் கட்டளை’, உள்ளிட்ட வெற்றி படங்களை தொடர்ந்து சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது. ‘இங்க நான் தான் கிங்கு’ என்ற இப்படத்தின் தலைப்பையும் முதல் பார்வை போஸ்டரையும் உலகநாயகன் கமல் ஹாசன் இன்று வெளியிட்டார். அனைத்து இளைஞர்களும் ரசித்து கொண்டாடும் விதமாக சந்தானத்தின் கதாபாத்திரம் உருவாகியுள்ளது. மேலும், சந்தானத்தின் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் படம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. சந்தானத்தின் ஜோடியாக பிரியாலயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் தம்பி ராமையாவும், சுவாரஸ்யமான வேடத்தில் மனோபாலாவும்…
Read Moreஸ்ரீகாந்திற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன் – இயக்குநர் ராஜ்தேவ்.
செலிபிரைட் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் கார்த்திகேயன்.S தயாரிப்பில், ஸ்ரீகாந்த் – பிரியங்கா திம்மேஷ் நடிப்பில், இயக்குநர் ராஜ் தேவ் இயக்கியுள்ள சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம் ” சத்தம் இன்றி முத்தம் தா “. மார்ச் 1 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்.. நாயகி பிரியங்கா திம்மேஷ் பேசுகையில்…, இந்தப் பட்த்தில் நடிப்பதற்கு எனக்குக் கிடைத்த வாய்ப்பு என்பது எதிர்பாராமல் நடந்த விஷயம். படம் துவங்குவதற்கு முதல் நாள் எனக்குப் போன் வந்தது. படத்தைப் பற்றி விளக்கினார்கள். எனக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. இந்தப் பட்த்திற்கு தேவையான முழு உழைப்பை நான் கொடுப்பேன் என்று இயக்குநரிடம் உறுதியாகக் கூறினேன். அடுத்த நாள் நான் சென்னை வந்து இப்பட்த்தின் படப்பிடிப்பில் கலந்து…
Read Moreதிரிஷாவுக்கு ஆதரவாக களமிறங்கும் மன்சூர் அலிகான்!
“எனது திரைத்துறையில் உள்ள பெண்களை யாரேனும் போகிறபோக்கில் கேவலமாகவும், மலிவாகவும் விளம்பரத்திற்காக, சுயலாபத்திற்காக அவமானப்படுத்தும் செயலை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன். திரைத்துறையில் உள்ள சகோதரிகள் எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போன்றதனால் அதில் ஆண்வர்க்கத்திற்கும் சரிசமமாக பங்கு இருக்கிறது. அவர்களை (நடிகைகளை) எந்த குறை சொன்னாலும் அது எங்களையும் சாரும் என்பதை நான் முன்பே பலவேளைகளில் குறிப்பிட்டிருக்கிறேன். ஆகவே, சக திரைநாயகி திரிஷாவை தவறாக மிகவும் ஈனத்தனமான விமர்சனத்திற்கு உள்ளாக்கிய முன்னாள் அதிமுக நிர்வாகி அரசியலில் இருப்பதற்கே அருகதையற்றவராக நான் கருதுகிறேன். நாங்கள் கருதுகிறோம். இதுபோன்ற இழிசெயலை அதுவும் நம் மாநிலத்திலே ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கிற துறையிலே, அரசியலில் இருந்துதான் திரைக்கு வருகிறார்கள், திரையில் இருந்து அரசியலுக்கு வந்து ஆட்சி செய்கிறார்கள் இவ்வாறு பின்னிப்பிணைந்து இருக்கிற ஒரு மண்ணில் இதுபோன்று யாரையும் காயப்படுத்துவதை நான் மிகவும்…
Read Moreவிஷ்வா லக்ஷ்மி சினிமாஸ் புதிய திரையரங்கு திறந்த தயாரிப்பாளர் தாய் சரவணன் !!
தமிழ் சினிமாவில் தரமான படைப்புகள் மூலம் கவனம் ஈர்த்த முன்னணி தயாரிப்பாளர் தாய் சரவணன் திருவாரூர் மாவட்டம் பேரளத்தில் புதிய திரையரங்கைத் துவங்கியுள்ளார். புதிய தொழில்நுட்பங்களுடன், அதி நவீன வசதிகளுடன் உருவாகியுள்ள விஷ்வா லக்ஷ்மி சினிமாஸ் திரையரங்கின் துவக்க விழா திரைப்பிரபலங்கள் இயக்குநர் சுசீந்திரன், இயக்குநர் பாண்டிராஜ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைத் தயாரிப்பாளர் திரு செண்பகமூர்த்தி ஆகியோர் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது. விஷ்வா லக்ஷ்மி திரையரங்கு, 350 இருக்கைகள் கொண்டது. 7.1 டால்பி அட்மாஸ் தொழில் நுட்பத்தில், அதி நவீன வசதிகள் கொண்டது. திருவாரூர் மாவட்ட சினிமா ரசிகர்களுக்குச் சிறப்பான திரை அனுபவம் தரும் வகையில் இந்த திரையரங்கு உருவாகியுள்ளது. இத்திரையரங்கத்தைத் துவக்கி வைத்த, பிரபலங்கள் இயக்குநர் சுசீந்திரன், இயக்குநர் பாண்டிராஜ், மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைத் தயாரிப்பாளர் திரு செண்பகமூர்த்தி ஆகியோர்…
Read Moreஞானவேல்ராஜாவின் புது ஸ்டுடியோவில் கங்குவா டப்பிங்
தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தனது மகள் ஆத்னா பெயரில் தொடங்கியுள்ள உலகத் தரம் வாய்ந்த போஸ்ட் புரொடக்ஷன் ஸ்டுடியோவான ஆத்னா ஆர்ட்ஸ் ஸ்டுடியோ, 2024 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான ‘கங்குவா’ படத்திற்கு நடிகர் சூர்யா இந்த ஸ்டுடியோவில் டப்பிங் பேசியுள்ளதன் மூலம் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது! நடிகர் சூர்யா வரவிருக்கும் தனது ‘கங்குவா’ படத்துக்கான டப்பிங்கை பிரபல தயாரிப்பாளரான கே.ஈ ஞானவேல்ராஜா அமைத்த உலகத் தரம் வாய்ந்த போஸ்ட் புரொடக்ஷன் ஸ்டுடியோவான ஆத்னா ஆர்ட்ஸ் ஸ்டுடியோவில் தொடங்கினார். இந்த ஸ்டுடியோவை ஞானவேல்ராஜா தனது மகளின் பெயரில் தொடங்கியுள்ளார். திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக ‘கங்குவா’ உள்ளது. இணையற்ற தயாரிப்பு மதிப்பு, திறமையான நடிகர்கள் என படத்தில் ஒவ்வொரு விஷயம் கவனமாகவும் கச்சிதமாகவும் செதுக்கப்பட்டுள்ளது. நிச்சயம் நடிகர் சூர்யாவின் சினிமா பயணத்தில்…
Read Moreரணம் படத்தில் பெண் கதாபாத்திரங்கள் வலிமையோடு படைக்கப்பட்டு இருக்கிறது – நடிகர் வைபவ்
அறிமுக இயக்குநர் ஷெரீஃப் இயக்கத்தில் வைபவ், தான்யா ஹோப், நந்திதா ஸ்வேதா, சரஸ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் “ரணம் அறம் தவறேல்”. அரோல் கரோலி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பாலாஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மது நாகராஜ் தயாரித்திருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பேசும் போது, வெளிநாட்டில் வேலை செய்து செட்டிலாகிவிட்டு, தன் கனவை துரத்தி, தன் ஆசையை நோக்கி வந்து தமிழ்நாட்டில் “ரணம்” அறம் தவறேல் படம் எடுத்திருக்கிறார்கள். அதையும் மூன்று நான்கு வேலைகளில் ஒன்றாகக் கருதாமல், அதற்கென்று பிரத்யேகமான கவனம் கொடுத்து அர்ப்பணிப்புடன் அதை உருவாக்கி இருக்கிறார் மது நாகராஜன். இது சாதாரண விசயம் இல்லை. சமீபத்தில்…
Read More“பிரம்மாண்டமான வரலாற்றுப் படத்தில் நானும் இருப்பது பெருமையாக உள்ளது” – ஜான் விஜய்
சமர்வீர் கிரியேஷன்ஸ் சார்பில் குடூர் நாராயண ரெட்டி வழங்கும், இயக்குநர் யதா சத்யநாராயணா இயக்கத்தில், பாபி சிம்ஹா, வேதிகா நடிப்பில், சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில், ஹைதராபாத் நகரில் உண்மையில் நிகழ்ந்த, மறைக்கப்பட்ட வரலாற்று நிகழ்வை, அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் “ரஸாக்கர்”. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பான் இந்திய வெளியீடாக வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கான டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் பலர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இந்நிகழ்வு கோலாகலமாக அரங்கேறியது. இந்நிகழ்வினில்.. தயாரிப்பாளர் குடூர் நாராயண ரெட்டி வணக்கம். இது மட்டுமே எனக்குத் தமிழில் தெரிந்த வார்த்தை. சமர்வீர் கிரியேஷன்ஸ் சார்பில் என் குழுவினர் அனைவருக்கும் நன்றி. எங்கள் பெருமைமிக்க படைப்பான, ரஸாக்கர் படத்தின் டிரெய்லரை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. நம் வரலாற்றில் மறைக்கப்பட்ட…
Read Moreஇந்த ஆண்டின் மிகச்சிறந்த சம்பவமாக “பைரி” திரைப்படம் இருக்கும்” – யாத்திசை இயக்குநர் தரணி ராசேந்திரன்
டி கே ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக வி துரைராஜ் தயாரிப்பில் ஜான் கிளாடி இயக்கத்தில் சையது மஜீத், மேக்னா எலன் மற்றும் விஜி சேகர் ஆகியோர் நடிப்பில் தமிழ் திரையுலகில் இதுவரை இல்லாத முயற்சியாக அம்மா-மகன் சென்டிமென்டின் பின்னணியில் முழுக்க முழுக்க புறா பந்தயத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் பைரி. பிப்ரவரி 23 திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் இசை வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது டி கே ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக வி துரைராஜ் தயாரிப்பில் ஜான் கிளாடி இயக்கத்தில் சையது மஜீத், மேக்னா எலன் மற்றும் விஜி சேகர் ஆகியோர் நடிப்பில் தமிழ் திரையுலகில் இதுவரை இல்லாத முயற்சியாக அம்மா-மகன் சென்டிமென்டின் பின்னணியில் முழுக்க முழுக்க புறா பந்தயத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் பைரி. வரும் பிப்ரவரி 23…
Read Moreஇயக்குனர் வெற்றிமாறனின் IIFC-சார்பில் வெற்றி துரைசாமிக்கு நினைவஞ்சலி!
இயக்குனர் வெற்றிமாறன் அவர்களின் பன்னாட்டு திரை-பண்பாடு ஆய்வகம்[IIFC] சார்பில் சமீபத்தில் அகால மரணம் அடைந்த வெற்றி துரைசாமிக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர் தாணு,இயக்குனர் வெற்றிமாறன்,அவரது மனைவி ஆர்த்தி வெற்றி மாறன்,பேராசிரியர் ராஜநாயகம், முன்னாள் ராணுவ வீரர் மேஜர் மதன்குமார், மருத்துவர் வந்தனா,ஜெகதீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முதலாவதாக பேசிய பேராசிரியர் ராஜநாயகம்,” கையறு நிலையில் துக்கமான சூழ்நிலையில்,இந்த பன்னாட்டு திரை-பண்பாடு ஆய்வகத்தின் முதுகெலும்பாக, இருபெரும் தூண்களில் ஒரு பெரும் தூணாக இருந்த வெற்றி துரைசாமியின் எதிர்பாராத மறைவு அஞ்சலி செலுத்த ஆற்றல் குன்றிய சூழலானாலும், இந்த ஆய்வகத்திற்கு அவர் செய்த உதவிகளுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். அவரது மறைவை அவரது குடும்பத்தினர்,இந்த சூழலை கடந்து வர தேவையான ஆற்றலை இறைவன் அளிக்க வேண்டும்.வெற்றி துரைசாமியின் நினைவை போற்றும் வகையில் திரை மாணவர்களுக்கு விருதுகள்…
Read More