ஸ்ரீகாந்திற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன் – இயக்குநர் ராஜ்தேவ்.

செலிபிரைட்  புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் கார்த்திகேயன்.S தயாரிப்பில், ஸ்ரீகாந்த் –  பிரியங்கா திம்மேஷ் நடிப்பில், இயக்குநர் ராஜ் தேவ் இயக்கியுள்ள   சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம் ” சத்தம் இன்றி முத்தம் தா “.  மார்ச் 1 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில்..

நாயகி பிரியங்கா திம்மேஷ் பேசுகையில்…,

இந்தப் பட்த்தில் நடிப்பதற்கு எனக்குக் கிடைத்த வாய்ப்பு என்பது எதிர்பாராமல் நடந்த விஷயம். படம் துவங்குவதற்கு முதல் நாள் எனக்குப் போன் வந்தது. படத்தைப் பற்றி விளக்கினார்கள். எனக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. இந்தப் பட்த்திற்கு தேவையான முழு உழைப்பை நான் கொடுப்பேன் என்று இயக்குநரிடம் உறுதியாகக் கூறினேன். அடுத்த நாள் நான் சென்னை வந்து இப்பட்த்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். நான் செய்து கொடுத்த உறுதியைக் காப்பாற்றி இருக்கிறேன் என்று நம்புகிறேன். இந்தப் படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். நடிக்கும் போது எனக்குப் பேருதவியாக இருந்த நடிகர் ஸ்ரீகாந்த் அவர்களுக்கு இந்த தருணத்தில் நான் நன்றி சொல்லிக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன். முதலில் இயக்குநரிடம் இருந்து போன்கால் வந்தது. பின்னர் ஸ்ரீகாந்த் சாரிடம் இருந்தும் போன் வந்தது. இயக்குநர் கூறும் போது படத்தின் அர்த்தம் எனக்குப் புரியவில்லை. ஸ்ரீகாந்த் சார் தான் எனக்கு அர்த்தத்தைக் கூறினார். இந்தப் படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். நான் இப்பொழுது தான் தமிழ் மொழியைக் கற்று வருகிறேன். இனி வரும் நாட்களில் நன்றாகத் தமிழ் பேசி நிறைய தமிழ்ப்படங்களில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள்” என்று பேசினார்.

இசையமைப்பாளர் ஜுபின் பேசியதாவது…

இப்பட்த்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு என் அன்பு கலந்த நன்றி. இந்த மேடையில் நான் இன்று இருப்பதற்கு மிக முக்கிய காரணம் ஆனந்த் சார் அவர்கள் தான். அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி கூறிக் கொள்கிறேன். நான் இதற்கு முன் பணியாற்றிய பிற திரைப்படங்களுக்கும் இப்படத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இப்பட்த்தில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்திருக்கின்றன. திரைப்பாடலாசிரியர் எழுதிய சிறப்பான பாடல் வரிகளுக்கு ஆண்ட்ரியா தன் அற்புதமான குரலில் ;உயிர் கொடுத்திருக்கிறார். அவர்கள் இருவருக்கும் நன்றி. படம் த்ரில்லர் வகையாக இருந்தாலும் எமோஷ்னல் காட்சிகள் கண்டிப்பாக உங்களை கண்கலங்கச் செய்யும் என்று நம்புகிறேன். நாயகன் ஸ்ரீகாந்த் சார் அவர்களால் இன்று இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை. படத்தில் அவர் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். மொத்த படக்குழுவிற்கும் இந்த வந்திருக்கும் பத்திரிக்கை நண்பர்களுக்கும் என் வணக்கங்களும் நன்றிகளும்” என்று பேசினார்.

இயக்குநர் ராஜ்தேவ் பேசுகையில்…,

இப்படத்தின் கதையை எழுதத் துவங்கும் போதே ஆரம்பம் முதல் இறுதி வரை படம் த்ரில்லிங்காக இருக்க வேண்டும் என்று நினைத்தே எழுதினேன். எழுதும் போது மிகவும் சிரமமாக இருந்தது. படத்திற்கான நடிகர் நடிகைகளை தேர்வு செய்யும் போது, இதே போன்ற கதை அம்சமுள்ள படங்களில் ஏற்கனவே நடிக்காதவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அதன் அடிப்படையில் தான் ஸ்ரீகாந்த் சாரை சந்தித்து இந்தப் படத்தின் கதையைக் கூறினேன். அவரும் நடிக்க சம்மதித்தார். இப்பட்த்தில் நடித்திருக்கும் எல்லா நடிகர்களும் அதனடிப்படையில் தேர்வானவர்கள் தான். கதாநாயகியும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். ஹீரோவிற்கு நிகராக நடித்திருக்கிறார். பட்த்தில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. இசையமைப்பாளருடன் நான் நிறைய விவாதித்தேன். படம் கண்டிப்பாக உங்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படத்திற்கு உங்களின் ஆதரவைத் தாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். இப்படம் டிரைலரில் அதிக சத்தம் நிறைந்ததாக இருப்பது தலைப்பை நியாயப்படுத்த மட்டுமல்ல, கதையின் தேவை கருதியும் அப்படி வைத்துள்ளோம். இப்படம் உங்களுக்கு ஒருவித புது அனுபவமாக இருக்கும். இந்த நிகழ்வில் சரியான சூழல் அமையாத்தால் மட்டுமே நாயகன் ஸ்ரீகாந்த் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. அவருக்காக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். என்று பேசினார். பட்த்திற்காக அவர் கொடுத்த உழைப்பு அளப்பெரியது. அவர் இப்பட்த்திற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும்.

திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்களுக்கு இசையமைத்த ஜுபின் இசைக்கு பிரபல பாடலாசிரியர் விவேகா பாடல்களை எழுதியுள்ளார்.

 

ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்துள்ளார்.கதாநாயகியா பிரியங்கா திம்மேஷ் நடித்துள்ளார் , ஹரிஷ் பேராடி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் – ராஜ் தேவ்.

 

இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் உலகத் திரைப்பட விழாவில் பத்து விருதுகளுக்கு மேல் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதோடு ஆனந்த விகடன் மற்றும் சாவி இதழ்களில் சிறுகதைகள் எழுதியுள்ளார். மேலும் அவர் அமெரிக்காவில் நடைபெற்ற திரைக்கதை போட்டியில் அனைத்து நாடுகளும் கலந்து கொண்ட நிலையில் இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு கதைகளான ‘KISS DEATH மற்றும் A STRANGER IS WALKING BY’ஆகியவற்றிற்கு சொந்தக்காரர் ஆவார். அவை இரண்டும் அமெரிக்காவில் அச்சிடப்பட்டு வெளியானதோடு இணையத்தின் KINDLE லும்  பதிவேற்றப்பற்றுள்ளது.

 

மாறுபட்ட திரில்லர் படைப்பாக உருவாகியுள்ள இப்படம் தமிழகமெங்கும் மார்ச் 1 ஆம் தேதி திரைக்குவரவுள்ளது.

ஒளிப்பதிவு – யுவராஜ் .M

படத்தொகுப்பு : மதன்.G

நடன இயக்குனர் தினேஷ் நடன அமைப்பை பொறுப்பேற்க,  ‘மிராக்கிள்’ மைக்கேல் சண்டை பயிற்சி மேற்கொண்டு இருக்கிறார். பின்னணி பாடல்களை ஆண்ட்ரியா, M.M.மானசி, ஜித்தின் ராஜ் மற்றும் ரவி.G பாடியுள்ளனர்.

மக்கள் தொடர்பு – மணவை புவன்

தயாரிப்பு மேற்பார்வை – A.JPஆனந்த்

தயாரிப்பு – கார்த்திகேயன்.S

 

Related posts

Leave a Comment