நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் தனது உலகளாவிய தயாரிப்பு மற்றும் இன்னோவேஷன் ஸ்டுடியோவான ஐலைன் ஸ்டுடியோஸை ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளதாக இன்று அறிவித்துள்ளது. இந்தியாவில் நெட்ஃபிலிக்ஸ் தனது இருப்பை மேலும் விரிவுபடுத்துவதுடன் இந்தியாவின் அனிமேஷன், விஷூவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் (AVGC) துறையில் நீண்டகால முதலீட்டையும் குறிக்கிறது. உலகளாவிய தயாரிப்பு மற்றும் புதுமை கட்டமைப்பை விரிவுபடுத்தும் நோக்கத்தில் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்தின் இந்தத் தொடக்கம் அமைந்துள்ளது. மேம்பட்ட விஷூவல் எஃபெக்ட்ஸ், விர்ச்சுவல் புரொடக்ஷன் மற்றும் அடுத்த தலைமுறை தயாரிப்பு தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து உலகளவில் இந்தியாவை முக்கிய மையமாக நிலைநிறுத்தும் நோக்கத்துடன் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவில் ஐலைன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் ஷாபிரோ, தெலங்கானா மாநில முதலமைச்சர் அனுமுலா ரேவந்த் ரெட்டி, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலாளர் சஞ்சய் ஜாஜு மற்றும் இந்திய நடிகர்-தயாரிப்பாளர்…
Read MoreDay: March 13, 2026
விஜய் டிவியின் அசத்தலான கலகலப்பான “ஹேப்பி வைஃப் ஹேப்பி லைஃப்” நிகழ்ச்சி
சின்னத்திரை ரசிகர்களுக்கு வார இறுதி நாட்கள் என்றாலே கொண்டாட்டம்தான். அந்த கொண்டாட்டத்தை இன்னும் இரட்டிப்பாக்கும் வகையில், ஸ்டார் விஜய் தொலைக்காட்சி ஒரு புதிய கலகலப்பான ரியாலிட்டி கேம் ஷோவை களம் இறக்கியுள்ளது. விஜய் டிவி ஒரு ஷோவை பண்ணாலே அது வேற லெவல் தான். அந்த வரிசையில் ஒரு புத்தம் புதிய கன்ஷெப்ட் தான் “Happy Wife Happy Life” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி, கடந்த மார்ச் 8, 2026 அன்று பிரம்மாண்டமாக இந்த நிகழ்ச்சி தொடங்கியது. இதில் பெரிய ஹைலைட் என்னவென்றால்.. எப்போதும் எனர்ஜி குறையாமல் பேசும் ரசிகர்களின் ஃபேவரைட் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த ஷோ, தம்பதிகளுக்கு இடையேயான புரிதலை மையமாகக் கொண்டது. ஒவ்வொரு வாரமும் மூன்று பிரபல…
Read More