‘கர்நாடக சக்கரவர்த்தி’ டாக்டர் சிவராஜ் குமாரின் பெயரிடப்படாத புதிய படத்தின் கேரக்டர் லுக் வெளியீடு!!

தமிழ் ரசிகர்களிடத்திலும் பிரபலமான கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ‘கர்நாடக சக்கரவர்த்தி’ டாக்டர். சிவராஜ்குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தில் அவர் ஏற்றிருக்கும் கேரக்டர் லுக்கை, அவரது பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளனர். ‘இடி மின்னல் காதல் ‘படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் பாலாஜி மாதவன் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் நடிகர் சிவராஜ்குமார் கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடிக்கும் தமிழ் மற்றும் கன்னட திரையுலகின் நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இன்வெஸ்டிகேட்டட் வித் ஆக்சன் திரில்லராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்ரித்திக் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சூரஜ் சர்மா – கிருஷ்ணகுமார்.…

Read More

தமிழ் திரையுலகில் என்றைக்கும் அழிக்க முடியாத நிரந்தரமான பெயர் நாகேஷ் ” உருட்டு உருட்டு ” இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் கஸ்தூரிராஜா நெகிழ்ச்சி..

ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் “உருட்டு உருட்டு”. நாகேஷின் பேரன் கஜேஷ் நாகேஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ரித்விகா ஸ்ரேயா நடித்துள்ளார். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் நாயகி ரித்விகா ஸ்ரேயா பேசியதாவது… எல்லோருக்கும் முதல் நன்றி, இது என் முதல் படம், இயக்குநர் தயாரிப்பாளர் இருவருக்கும் என்னை நம்பி இந்த வாய்ப்பை தந்ததற்காக நன்றி. என்னுடன் படத்தில் நடித்த உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. எனக்கு ஆக்டிங் சொல்லித்…

Read More

கேடி தி டெவில் ( KD The Devil ) திரைப்பட தமிழ் டீசர் வெளியிட்டு விழா !!

கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே.நாராயணா தயாரிப்பில், இயக்குநர் பிரேம் இயக்கத்தில், ஆக்சன் பிரின்ஸ் துருவ் சர்ஜா, சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி நடிப்பில் பிரம்மாண்ட ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் *கேடி தி டெவில் ( KD The Devil ). பான் இந்திய வெளியீடாகப் பல மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினர் தமிழ்ப்பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையிலும் தமிழ்ப்பதிப்பின் டீசரை அறிமுகப்படுத்தும் வகையிலும், சென்னையில் தமிழ் பத்திரிக்கை, ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில் பத்திரிக்கையாளர்களுக்குப் படத்தின் டீசரைத் திரையிட்டுக்காட்டினர். பின்னர் அவர்களுடன் உரையாடி, அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர். இந்நிகழ்வினில்… இயக்குநர் பிரேம் பகிர்ந்து கொண்டதாவது… எனக்குத் தமிழ்ப் படங்கள் மிகவும் பிடிக்கும். கேடி ஒரு வித்தியாசமான படம், 1970 களில் நடந்த உண்மைச் சம்பவம் தான் இப்படம், டீசர்…

Read More

Mrs & Mr – திரை விமர்சனம்

நடிகை வனிதா விஜயகுமார் இயக்குனராகவும் தன்னை வெளிப்படுத்தியிருக்கும் படம் இது . பாங்காக் பின்னணியில் அலைக்கும் சொல்லப்பட்ட கதைக்களம் எந்த மாதிரியானது என்பதை பார்ப்போம். கதைப்படி ஷகீலாவின் மகளான வனிதா, ராபர்ட்டை திருமணம் செய்து கொள்கிறார். இதில் ராபர்ட் குழந்தையே பெற்றுக் கொள்ள வேண்டாம் என்கிற முடிவில் இருக்கிறார். ஆரம்பத்தில் வனிதாவும் ஏறக்குறைய அந்த முடிவில் தான் இருந்தார். ஒரு கட்டத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள வில்லை என்றால் வாழ்வதே வேஸ்ட் என்று தோழிகள் சிலர் வனிதாவை தூண்டி விட, இதனால் 40 வயதில் தனக்கு குழந்தை வேண்டும் என்று அடம் பிடிக்கிறார் வனிதா. இதனால் இவர்கள் இருவரிடையேயும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியும் நேரத்தில் வயிற்றில் கரு தங்குகிறது. அதை கணவரிடம் சொல்ல முடியாத சூழலில் பாங்காக்கில் இருந்து தன் சொந்த ஊரான சித்தூர் வந்து விடுகிறார்.…

Read More

மாயக்கூத்து – திரை விமர்சனம்

மானிட ஜாதியில் நான் தனி மனிதன் நான் படைப்பதனால் என் பெயர் இறைவன் என்று ஒரு பாடலில் எழுதி இருப்பார் கவிஞர் கண்ணதாசன். பத்திரிகைகளில் தொடர்கதை எழுதிக் கொண்டிருக்கும் வாசன் என்ற முன்னணி எழுத்தாளரும் படைப்பாளி என்பதால் தன்னை இறைவனாக எண்ணிக் கொள்கிறார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர் எழுதும் கதையில் பாதிக்கப்படும் கதாபாத்திரங்கள் அவரை தேடி வந்து இம்சை செய்கின்றன. தங்களது சிக்கல்களுக்கெல்லாம் படைத்தவன் தான் காரணம் என எண்ணி கோபத்தில் அவரை துரத்துகின்றன. அந்த கதாபாத்திரங்களிடம் இருந்து எழுத்தாளர் எப்படித் தப்பிக்கிறார் என்பது தான் கதைக்களம். சமூகத்தை தங்கள் எழுத்தால் மேம்படுத்துவதில் எழுத்தாளர்களுக்கும் பெரும் பங்கு உண்டு. இங்கே நமது படைப்பாளியோ தனது கதாபாத்திரங்களுக்கு சுமுகமான தீர்வளிக்க தவறிவிடுகிறார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த கதாபாத்திரங்கள் கதையின் போக்கை மாற்றி தங்களுக்கு நல்லதோர் தீர்வை…

Read More

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், தனுஷ் நடிக்கும் D54 பிரம்மாண்ட திரைப்படம் – பூஜையுடன் ஷூட்டிங் ஆரம்பம்!

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட், நிறுவனத் தலைவர் டாக்டர் ஐசரி K. கணேஷ் தலைமையில், தனுஷ் நடிக்கும் D54-படம் இன்று வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது. ‘போர் தொழில்’ ப்ளாக்பஸ்டர் ஹிட் திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இந்த புதிய திரைப்படத்தினை இயக்குகிறார். போர் தொழில் திரைப்படத்தின் திரைக்கதையில் பணியாற்றிய ஆல்ஃபிரட் பிரகாஷுடன் இணைந்து விக்னேஷ் ராஜா இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கியுள்ளார். இந்தப் படம், பரபரப்பான கதைக்களத்தில், எமோஷனல் திரில்லராக உருவாகிறது. பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தில் தேசிய விருது நாயகன் தனுஷ் கதாநாயகனாக நடிக்க, அவருடன் முதல் முறையாக மமிதா பைஜு ஜோடியாக இணைந்துள்ளார். மேலும் K.S. ரவிக்குமார், ஜெயராம், கருணாஸ், சுராஜ் வெஞ்சரமூடு, பிரித்வி பாண்டியராஜன், உள்ளிட்ட பல்வேறு திறமையான நட்சத்திரங்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள். D54 திரைப்படத்தில் மிகச்சிறந்த தொழில்நுட்ப குழு பணிபுரிகிறார்கள்.…

Read More

மலைவாழ் மக்களின் வலியைச் சொல்லும் ‘கெவி’ திரைப்படம் ஜூலை 18 இல் வெளியாகிறது

ARTUPTRIANGLES FILM KAMPANY ஆர்ட் அப் ட்ரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி  சார்பில் தயாராகி வரும் படம் ‘கெவி’. இயக்குநர் தமிழ் தயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அறிமுக நாயகன் ஆதவன் கதாநாயகனாக நடிக்க, ‘டூ லெட்’, ‘மண்டேலா’ புகழ் ஷீலா கதாநாயகியாக நடித்துள்ளார். ஜாக்குலின், சார்லஸ் வினோத், சிதம்பரம், தர்மதுரை ஜீவா, விவேக் மோகன் மற்றும் உமர் ஃபரூக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் அமைந்துள்ள கெவி என்கிற கிராமத்தைச் சுற்றி, அந்தப் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி உள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர்கள் ஜி.பாலசுப்பிரமணியன் சா.ராஜாரவிவர்மா இசையமைத்துள்ளனர். படம் ஜூலை 18 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இயக்குநர் தமிழ் தயாளன் படம் குறித்து பேசும்போது, “நாமெல்லாம் மலைப்பகுதியில் உள்ள சுற்றுலாத் தளங்களுக்கு சென்றால் அங்குள்ள…

Read More

தமிழ் சினிமாவில் ஜாதி பார்க்கிறார்கள்.. சினிமாவை நம்பி யாரும் இல்லை.. கலையரசன் ஆதங்கம்!!

Ram film factory சார்பில், தயாரிப்பாளர் மீனாட்சி ஆனந்த் தயாரிப்பில், இயக்குநர் சிவராஜ் இயக்கத்தில், கலையரசன், பிரியாலயா நடிப்பில், இன்றைய சோஷியல் மீடியா உலகின் முகத்தைக் காட்டும், பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள படம் “டிரெண்டிங்”. வரும் ஜூலை 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்…., தயாரிப்பாளர் மீனாட்சி ஆனந்த் பேசியதாவது… டிரெண்டிங் திரைப்படம் எங்களின் சின்ன முயற்சி, நீங்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டுகிறேன். கலையரசன் மிகச்சிறந்த நடிகர் அவருக்கு இணையாக பிரியாலயா நன்றாக நடித்துள்ளார்.  இயக்குநர் சிவராஜ் இந்தக்கதையைச் சொன்ன போதே, எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. சாம் சிஎஸ் சிறப்பான இசையை தந்துள்ளார். ஒளிப்பதிவாளர் பிரவீன் சிறப்பாகச் செய்துள்ளார். அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. ஒளிப்பதிவாளர் பிரவீன்…

Read More

ப்ரீடம் – திரை விமர்சனம்

95 காலகட்டத்தில் வேலூர் சிறையில் இருந்து தப்பித்த இலங்கை அகதிகளின் போராட்டமே கதைக்களம். இலங்கையில் போர் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் அங்கிருந்து அகதிகளாக ராமேஸ்வரம் வந்து அகதி முகாமில் தங்கினால் அங்கும் நிம்மதியற்ற வாழ்க்கை. இப்படி இலங்கையில் இருந்து வந்த ஒரு கும்பலில் கர்ப்பிணி யாக இருக்கும் மனைவி வந்துவிட, அவளை தேடி கணவனும் வருகிறார். இந்த சமயத்தில் முன்னாள் பாரத பிரதமரை மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்த தீவிரவாத இயக்கத்தை கண்டுபிடிக்க இந்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்கிறது. அதில் ஒன்று, கடந்த ஆறு மாதங்களுக்குள் இலங்கையில் இருந்து அகதிகளாக வந்தவர்களிடம் விசாரணை நடத்துவது. இந்த விசாரணை வளையத்தில் மனைவியை தேடி தமிழகம் வந்த சசிகுமாரும் சிக்கிக் கொள்கிறார். போலீசார் சசி உள்ளிட்டவர்களை வேலூர் சிறையில் விசாரணை கைதிகளாக அடைத்து கொடுமைப் படுத்துகிறார்கள். .…

Read More

ஐந்து மொழிகளில் உருவாகும் கார்த்தியின் மார்ஷல் திரைப்படம்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், ஐ.வி.ஒய். என்டர்டெயின்மென்ட் உடன் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை அறிவித்துள்ளது. இந்தப் படம் 1960 காலக்கட்டத்தில் ராமேஸ்வரத்தில் நடக்கும் ஒரு பிரமாண்டமான ஆக்ச‌ன் டிராமா கதைக்களத்தில் உருவாகிறது. இப்படத்துக்கு “மார்ஷல்” எனத் தலைப்பிட்டுள்ளனர். ’தீரன் அதிகாரம் ஒன்று’ மற்றும் ’கைதி’ போன்ற பாராட்டப்பட்ட படங்களைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் தமிழ் ஆகியோரின் (டாணாக்காரன் இயக்குநர்) மற்றொரு லட்சிய முயற்சியாக இந்தப் படம் அமைய இருக்கிறது.இன்று (வடபழனி, பிரசாத் ஸ்டுடியோவில்) நடைபெற்ற மார்ஷல் பட பூஜை நிகழ்ச்சியில், படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினர் மத்தியில் தயாரிப்பாளர்கள் இந்தப் படத்தின் தலைப்பை வெளியிட்டனர். மார்ஷல் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், சத்யராஜ், பிரபு, லால், ஜான் கொக்கன், ஈஸ்வரி ராவ் மற்றும் பல நட்சத்திர நடிகர்கள் நடிக்கவுள்ளனர். தொழில்நுட்பக் குழுவில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்,…

Read More