சிவசங்கர்பாபா கைது- டோராடூன் முதல் செங்கல்பட்டு வரை

படிக்கும் மாணவிகளிடம் பாலியல் வன்முறை செய்த சிவசங்கர் பாபா சாமியாரை, தமிழக சிபிசிஐடி போலீஸார் டெல்லி சென்று ஜூன் 15ஆம் தேதி கைது செய்தனர். இந்த ஆபரேஷனை நடத்திய சிபிசிஐடி டீம் போலீஸார் நித்தியானந்தா ஸ்டைலில், வெளிநாடு தப்பிச்செல்ல இருந்த சிவசங்கர் பாபாவை அப்படி தப்பிக்க விடாமல் கைது செய்துள்ளனர்.   சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் இருக்கிறது. இங்கு பயிலும் மாணவிகளிடம் சிவசங்கர் பாபா நடத்திய பாலியல் வேட்டை பற்றி, சில வாரங்களாக அப்பள்ளியின் பழைய மாணவிகள் பலர் புகார்களாக காவல்துறையிலும் சமூக தளங்களிலும் பதிவு செய்தனர்.         இந்த நிலையில் அப்பள்ளி மாணவிகளின் புகாரின் பேரில் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.…

Read More

சோனியா, ராகுலை சந்தித்தார் மு.க.ஸ்டாலின்

திமுக தலைவரும் தமிழ்நாட்டின் முதல்வருமான மு.க.ஸ்டாலின் டெல்லியில் இன்று (ஜூன் 18) காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியையும், ராகுல் காந்தியையும் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பு சில நிமிடங்கள் நீடித்தது. தமிழக முதல்வராகப் பொறுப்பேற்று முதல் முறையாக நேற்று டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று மாலை சந்தித்துப் பேசினார். அவரிடம் தமிழ்நாட்டுக்கான 25 கோரிக்கைகள் அடங்கிய விரிவான மனுவை அளித்தார். சுமார் 25நிமிடங்கள் நீடித்த அந்த சந்திப்புக்குப் பின் தமிழ்நாடு இல்லம் திரும்பினார் ஸ்டாலின். நேற்று இரவு டெல்லியில் தங்கிய ஸ்டாலின் இன்று (ஜூன் 18) காலை ஜன்பத் சாலையில் அமைந்திருக்கும் சோனியாகாந்தியின் இல்லத்துக்குச் சென்றார். ஸ்டாலினோடு அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் சென்றிருந்தார்.   சமீபகாலமாக காங்கிரஸ் தலைவர்கள் உட்பட எவரையும் நேரில் சந்திப்பதைத் தவிர்த்துவந்த…

Read More