மாபெரும் வெற்றி பெற்ற நானி தெலுங்கு படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து விரைவில் வெளிவரவுள்ள படம் தான் “சிவகாமி”.மாயஜாலங்கள் நிறைந்த சாமி படங்கள் வழக்கற்று போன நிலையில் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு சாமி படமாக ஆவிகள், பேய்களை அடக்கும் அம்மன் படமாக ஹாரர் கலந்து கலக்க வருகிறது “சிவகாமி” திரைப்படம். இத்திரைப்படத்தை எம்.டி. சினிமாஸ் வெளியிடுகிறது. தமிழில் வெளியாக தயாராகிவரும் இப்படத்தின் இசை விழா (27.02.2020) அன்று தனியார் அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழு பத்திரிக்கை யாளர்கள், பிரபலங்களான நடிகர் தயாரிப்பாளர் ஜே.எம்.பஷீர், நடிகர் ராதாரவி, பவர் ஸ்டார் சீனிவாசன், எம்.டி.சினிமாஸ் ஏ.எம்.சௌத்ரி, உட்பட விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டு பேசியதாவது:- நடிகர், தயாரிப்பாளர் ஜே.எம்.பஷீர் பேசும்போது, என் நண்பன் சௌத்ரி முதன் முதலாக இந்த படத்தை பார்த்து நன்றாக இருப்பதாக சொன்னார். மறைந்த முன்னாள்…
Read MoreMonth: February 2020
படத்தை எடுப்பதை விட வெளியிடுவது தான் ரொம்ப கஷ்டம். – ’நறுவி’ விழாவில் பா. இரஞ்சித்!
“ஒன் டே புரொடக்சன்ஸ்” நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் “நறுவி” திரைப்படத்தின் இசை மற்றும் வெளியீட்டு விழா சென்னையில் நடபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், அதியன் ஆதிரை மற்றும் நடிகர் லிஜீஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள். இசை அமைப்பாளர் கிறிஸ்டி பேசியதாவது, “இந்தப்படம் எனக்கு கிடைக்கக் காரணமே இயக்குநர் ரஞ்சித் தான். சினிமா எப்ப வேணும்னாலும் உன்னை மாத்தும் என்று ரஞ்சித் சொன்னார். அப்படியொரு மாற்றம் ரஞ்சித் மூலமாகத்தான் நடந்தது. இந்தப்படத்தில் என்னை கமிட் செய்த தயாரிப்பாளருக்கு பெரிய நன்றி. அதேபோல் இயக்குநர் ராஜா முரளிதரனுக்கும் பெரிய நன்றி” என்றார். இயக்குநர் பா.ரஞ்சித் பேசுகையில், “பாசிச வெறிகொண்டு இந்தியாவில் சிறுபான்மையினரைக் கொடுமைப் படுத்தும் சூழ்நிலையில் இன்று நறுவி படத்தின் விழாவில் இருக்கிறோம். இந்தப்படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தின் இயக்குநர் போல தான் நானும் அட்டக்கத்தி விழாவில்…
Read More375 திரையரங்குகளுக்கு மேல் திரையிடப்படும் ’திரௌபதி’!
தமிழ் சினிமாவில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை குறைந்தபட்சம் இரண்டு படங்கள் முதல் 7 படங்கள் வரை ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. பிப்ரவரி 28 அன்று வெளிவரவிருக்கின்ற படங்களின் பட்டியலில் அனைத்து தரப்பினராலும் கூர்ந்து கவனித்துவரக்கூடிய திரைப்படமாக திரௌபதி இடம்பெற்றுள்ளது. இயக்குனர் மோகன்.G தயாரித்து இயக்கியிருக்கும் குறைந்த பட்ஜெட் படம் திரெளபதி. இந்தப்படத்தின் முதல் டிரெய்லர் “ஜாதிகள் உள்ளதடி பாப்பா” என்கிற அடைமொழியோடு வெளியானபோது ஒட்டுமொத்த தமிழகமும் அதிர்ச்சிக்குள்ளானது. சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான ரஜினியின் தர்பார் பட டிரெய்லர் பரபரப்பை பின்னுக்குத்தள்ளி அனைத்து சமூக வலைதளங்களிலும், பொது வெளியிலும் விவாத பொருளாக முதலிடத்தை ஒரு வார காலம் ஒன்றரை கோடியில் தயாரான திரெளபதி ஆக்கிரமித்து தக்கவைத்துக்கொண்டது ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது. படம் எந்த மாதிரியான கருத்தை முன்வைத்தது தயாரிக்கப்பட்டுள்ளது என்பது இயக்குநரை தவிர்த்து வேற யாருக்கும் தெரியாது.…
Read Moreகன்னிமாடம்-விமர்சனம் !
ஆணவக்கொலை சம்பந்தப்பட்ட கதை என்றால் பத்தடி தள்ளி நிற்கும் சினிமா ரசிகனை “இதையும் பார் நண்பா” என நட்போடு அழைக்கிறது கன்னிமாடம். இப்படம் பார்ப்பவர்களுக்கு சாதி வெறியர்கள் மேல் கோபம் வரும் என்பது முன் அறிவிப்பு. சென்னையில் தஞ்சம் புகும் காதல் ஜோடிக்கு அடைக்கலம் தருகிறார் ஹீரோ ஸ்ரீராம் கார்த்திக். அவர் கொடுக்கும் அடைக்கலத்தையும் மீறி அந்த ஜோடிகளுக்கு சில விபரீதங்கள் நடக்கின்றன. முடிவு என்ன என்பதே கன்னிமாடம். இயக்குநராக அறிமுகமாகும் முதல் படத்திலே ஆணவக்கொலை என்ற மேட்டரை கையில் எடுத்துள்ள போஸ் வெங்கட்டின் துணிச்சலுக்குப் பாராட்டுக்கள். சமூகக் கருத்துள்ள படத்தைத் தயாரிக்க முன்வந்த ஹசீருக்கும் வாழ்த்துகள். அன்பு கேரக்டரில் வரும் ஹீரோ ஸ்ரீராம் கார்த்திக் நல்ல தேர்வு. விஷ்ணு ராமசாமியின் நடிப்பிலும் நல்ல மெச்சூரிட்டி தெரிகிறது. படத்தின் முக்கிய அம்சமே நாயகியின் கேரக்டர் தான். அதை…
Read Moreமீண்டும் கதாநாயகனாக நவரச நாயகன் கார்த்திக்!
மனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரிக்கும் படம் ‘தீ இவன்’. இதனை ரோஜா மலரே, அடடா என்ன அழகு படங்களை இயக்கியவரும், சிந்துபாத் படத்தை தயாரித்தவருமான டி.எம் ஜெயமுருகன் இயக்குகிறார். அவரே இசையமைத்து இருப்பதோடு கதை, திரைக்கதை,வசனம், பாடல்களையும் எழுதி இருக்கிறார். இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் சுகன்யா, ஐஸ்வர்யா லட்சுமி, அர்த்திகா, சேது அபிதா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு, மஸ்காரா அஸ்மிதா, ஹேமந்த் மேனன், பெரைரோ, இயக்குனர் சரவண சக்தி, ராஜேஸ்வரி, ஸ்ரீதர் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் இயக்குனர் ஜெயமுருகன் மற்றும் அறிமுக நடிகர் சுமன்.ஜெ ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். படத்திற்கு ஒய்.என்.முரளி ஒளிப்பதிவு செய்கிறார். பிண்ணனி இசை அமைப்பாளராக அலிமிர்சாக் பணியாற்றுகிறார். தயாரிப்பு நிர்வாகியாக அப்பு…
Read Moreசங்கத்தலைவன் பட பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா துளிகள்!
மணிமாறன் இயக்கத்தில் வெற்றிமாறன் வழங்கும் படம் சங்கத்தலைவன். இப்படத்தை உதய குமார் தயாரித்துள்ளார். சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர் களாக சுப்ரமணியம் சிவா,GV பிரகாஷ் , பவான் ஆகியோர் கலந்துகொண்டனர் . விழாவில் இசையமைப்பாளர் ராபர்ட் சற்குணம் பேசியதாவது , “நான் முதல் நன்றி ஜீவிக்கு சாருக்கு தான் சொல்லணும். அடுத்து வெற்றி சாருக்கு பெரிய நன்றி. சிறு வயதில் இருந்தே அவரது படங்களைப் பார்த்தே வளர்ந்திருக்கிறேன் . இந்தப்படத்தைப் பற்றி சொல்வதை விட இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் வரியைச் சொன்னால் சரியாக இருக்கும். உரிமையை விட உயிரா பெரிது?” அனைவருக்கும் நன்றி” என்றார் நாயகி ரம்யா பேசியதாவது, “சங்கத்தலைவன் எனக்கு முக்கியமான படம். என் ஆக்டிங்கிற்கு நான் பிள்ளயார் சுழி…
Read Moreகுறைந்த செலவில் எடுக்கப்படும் ‘மரிஜுவானா’ போல தரமான படங்கள் வெற்றியடைய வேண்டும் – இயக்குனர் மிஸ்கின்
3rd Eye கிரியேஷன்ஸ் சார்பில் எம்.டி.விஜய் தயாரிப்பில், எம்.டி.ஆனந்த் இயக்கி ‘அட்டு’ நாயகன் ரிஷி ரித்விக், நாயகி ஆஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘மரிஜுவானா’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர்கள் பேசியதாவது: தயாரிப்பாளர் எம்.டி.விஜய் பேசும்போது, ‘மரிஜுவானா’ என்ற இந்த படத்தின் பெயரைக் கூறியதும் அப்படி என்றால் என்ன என்று கேட்டார்கள். இது கஞ்சா என்பதன் அறிவியல் பெயர் தான் ‘மரிஜுவானா:. கஞ்சா போன்ற போதை பொருட்களைப் பயன்படுத்துவதால் பள்ளி குழந்தைகளும், இளைஞர்களும் எந்தளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை இப்படத்தில் கூறியிருக்கிறோம். இப்படத்தின் கதையை பல முன்னணி நாயகர்களிடம் கூறினோம். ஆனால், ரிஷி மட்டும் தான் ஒப்புக்கொண்டார் என்றார். நாயகன் ரிஷி ரித்விக் பேசும்போது, இப்படத்தின் கதையைக் கேட்டதும் சமுதாயத்திற்கு சிறந்த கருத்தைக்…
Read Moreநம் அம்மா அப்பாவை பார்த்து கொள்ள வேண்டும் என சொல்லிக்கொடுக்கும் படம் ‘பாரம்’;
தானாக உருவான சுயம்பு போல் தேசியவிருதை பல படங்களுடன் போட்டியிட்டு வென்று அனைவர் கவனத்தையும் ஈர்த்து என்ன படம் இது எனக்கேட்க வைத்த தமிழ் திரைப்படம் “பாரம்”. ப்ரியா கிருஷ்ணசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை Reckless Roses நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ் சினிமாவின் ஆளுமைகள் பலராலும் பாராட்டப்பெற்ற இப்படத்தை இயக்குநர் வெற்றிமாறன் தனது Gross Root Films நிறுவனம் பெயரில் SP Cinemas மூலம் வெளியிடுகிறார். படவெளியீட்டை ஒட்டி இப்படத்தின் பத்திரிக்கை சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய SP Cinemas நிறுவனர் கிஷோர் பேசியதாவது… எனக்கு இந்தப்படத்தை வெளியிட அனுமதித்த தயாரிப்பாளருக்கும் இயக்குநர் வெற்றி மாறனுக்கும் நன்றி. இப்படம் அனைவரும் பார்க்க வேண்டிய நல்ல திரைப்படம். இப்படத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி. இப்படத்தை ஊடகங்கள் ஆதரிக்க வேண்டும். நீங்கள் தான் அனைவரிடமும் இப்படத்தை எடுத்து செல்ல…
Read Moreசின்ன பட்ஜெட்டில் உருவான மெகா படமே ‘கன்னி மாடம்!’
நடிகர் போஸ் வெங்கட் தொலைக்காட்சி தொடர்களில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து, தனக்கென ஒரு தனித்த இடத்தை பிடித்திருப்பவர். தற்போது முதல் முறையாக வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமாகிறார். புதுமுகங்கள் நடிப்பில் “கன்னி மாடம்” எனும் படத்தை இயக்கியுள்ளார். சில நாட்கள் முன் வெளியான இப்படத்தின் டிரெய்லர் அனைத்து தரப்பிலும் பாராட்டு பெற்றது. படத்தின் வெளியீட்டு வேலைகள் நடந்து வரும் சூழலில் இன்று இப்படத்தின் இசை வெளியீடு கோலகலமாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட ஒவ்வொரு ஆளுமையையும் அவர்களின் அட்டகாச அறிமுகத்துடன் படத்தில் அவர்களது பங்கு குறித்தும் கூறி, இந்நிகழ்வை வெகு அற்புதமாக தொகுத்து வழங்கினார் இயக்குநர் போஸ் வெங்கட். இந்நிகழ்வில் நடிகர் ரோபோ சங்கர் கூறியதாவது… நான் பல இசை விழாக்களில் பங்கு கொண்டிருக்கிறேன் ஆனால் இந்த மேடை எனக்கு மிக நெருக்கமானது.…
Read More