நிர்மல் சரவணராஜ் மற்றும் எஸ். கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் வி.கே. புரொடக்ஷன்ஸ் வழங்கும் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தை வ. கெளதமன் இயக்கி முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். பாடல்களுக்கு ஜி.வி. பிரகாஷ்குமாரும் பின்னணி இசைக்கு சாம் சி. எஸ்.-சும் பொறுப்பேற்றுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரையுலகினர் மற்றும் படக்குழுவினர் கலந்து கொள்ள சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. வ. கெளதமன், E. குறளமுதன், U.M. உமாதேவன், கே. பாஸ்கர், கே. பரமேஸ்வரி ஆகியோர் வி.கே. புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். சமுத்திரக்கனி, பூஜிதா, பாகுபலி பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், சாய் தீனா, ஆடுகளம் நரேன், மன்சூர் அலிகான், ஏ.எல். அழகப்பன், மதுசூதன ராவ், நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய், தமிழ் கெளதமன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். வைரமுத்து பாடல்களை எழுத, கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, ராஜா முகமது…
Read MoreMonth: May 2025
மனிதர்கள் – சினிமா விமர்சனம்
மதுப் பிரியர்களான ஆறு நண்பர்கள் காரில் பயணிக்கிறார்கள். இரவானதும் ஒரு இடத்தில் டேரா போட்டு கையோடு எடுத்து வந்திருந்த மது பாட்டில்களை காலி செய்கிறார்கள். போதையின் உச்சத்தில் அவர்களுக்கிடையே மோதல் ஏற்படுகிறது. அதில் ஒருவர் ஆயுத தாக்குதலில் பேச்சு மூச்சு இல்லாமல் போக, அவரது உடலை யாருக்கும் தெரியாமல் புதைத்து விட்டு பிரச்சனையில் இருந்து தப்பிக்க மற்றவர்கள் முடிவு செய்கிறார்கள்.அவர்களது அந்த முடிவு அவர்களை எங்கே கொண்டு போய் விடுகிறது என்பது கிளைமாக்ஸ். கதையின் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் எல்லோருமே புதுமுகம். கபில் வேலவன், தக்ஷா, அர்ஜுன் தேவ் சரவணன், குணவந்தன், சாம்பசிவம் ஆகியோர் தங்கள் மிதமிஞ்சிய போதை ஒரு உயிரை காவு வாங்கி விட்டதே என்று துடித்து துவளும் காட்சிகளில் உணர்ச்சியை கொட்டி நடித்திருக்கிறார்கள். நண்பர்களில் ஓரிருவர் இந்த சம்பவம் தங்களை எங்கு கொண்டு போய்…
Read Moreஜின் தி பெட் – திரை விமர்சனம்
700 ஆண்டுகளுக்கு முன்பு யுத்தத்தில் வெற்றி பெறுவதற்காக மன்னர்களால் மந்திரவாதிகள் மூலம் உருவாக்கப்பட்ட தீய சக்தி கொண்ட ஆவி தான் ஜின். இதில், நல்ல ஜின்களும் உண்டு. நல்ல ஜின்கள் மன்னர்களின் பாதுகாவலர்களாக இருப்பதோடு போர்களில் அவர்கள் வெற்றிக்கும் உறுதுணையாக இருந்தன. அதோடு மட்டுமின்றி மக்களுக்கு நல்லதும் செய்து வந்தன. இப்படிப்பட்ட ஜின்கள் தற்போதைய காலக்கட்டத்தில் ஒருவரிடம் இருந்தால் எப்படி இருக்கும்? அதுதான் ஜின் தி பெட். மலேசியாவில் ஒப்பந்த அடிப்படையில் பிரபல ஓட்டலில் இசைக்கச்சேரி நடத்தி வந்த நாயகன் முகேன் ராவ், காண்ட்ராக்ட் முடிந்ததும் தமிழகம் வரவேண்டிய நிர்ப் பந்தம். வெளிநாட்டிலிருந்து ஊருக்குத் திரும்பும் முகேன் ராவ் ஒரு மாயப் பெட்டியில் அடைக்கப்பட்ட ‘ஜின்’ என்று மலேசிய மக்களால் அழைக்கப்படும் பேயுடன் ஊருக்கு திரும்புகிறார். அந்தப் பேயை மலேசியாவில் வாங்கியதுமே ரூ. 5 லட்சம் பணப்பரிசு…
Read Moreகத்தார் அரசு விருதை வென்ற ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் !!
உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் ஒரு பெயர் – அல்லு அர்ஜூன். அவரின் புகழ் காட்டுத்தீப்போல எட்டுதிக்கும் பரவிக்கொண்டிருக்கிறது. புஷ்பா: தி ரைஸ் திரைப்படத்தின் மூலம், இந்திய அளவில் பிரபலமான அவர், தேசிய விருதை வென்ற முதல் தெலுங்கு நடிகராக வரலாற்றில் இடம்பிடித்தார். இப்போது, அல்லு அர்ஜூன், கத்தார் தெலுங்கானா திரைப்பட விருது வென்று மற்றுமொரு சாதனை படைத்துள்ளார். கத்தார் அரசால் வழங்கப்படும் இவ்விருது, தெலுங்கு சினிமாவின் சிறப்பை கொண்டாடுவதற்காக உருவாக்கப்பட்டது. அல்லு அர்ஜூன் புஷ்பா 2: தி ரூல் திரைப்படத்துக்காக சிறந்த நடிகராக இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். புஷ்பா 2 திரைப்படம் இந்திய பாக்ஸ் ஆபிஸில் ரூ.1900 கோடிக்கும் அதிகமாக வசூலித்து, திரையுலக வரலாற்றில் புதிய சாதனை படைத்தது. இது, அல்லு அர்ஜூனின் தனிச்சிறப்பான திரைப்பயணத்தில், இன்னொரு மைல்கல்லாக அமைந்தது. தெலுங்கு பேசும் மாநிலங்களில் மட்டுமல்லாது…
Read Moreஉயரத்தைத் தொட்ட இளைஞன்: வெற்றியின் நிழலில் – ஆசிஷ் எனும் இளைஞரின் எவரெஸ்ட் சாதனை;
நேற்று சர்வதேச எவரெஸ்ட் தினம் (International Everest Day), உலகின் மிக உயர்ந்த சிகரம் எவரெஸ்ட்டை முதன்முறையாக வென்ற சர் எட்மண்ட் ஹிலரி மற்றும் தென்சிங் நார்கே (1953) ஆகியோரின் சாதனைக்கு நினைவுகூரும் நாள். இந்த சிறப்பான நாளில், சென்னைச் சிறுவன் ஆசிஷ் யு, தனது சாதனையுடன் இளைஞர்களுக்கு புதிய முத்திரை பதித்துள்ளார். ஆசிஷ் யு (வயது: 18) – சென்னைச் சிறுவன், தனது தந்தை திரு. யு. வெங்கட சுப்பையாவின் இறுதி ஆசையை நிறைவேற்றும் நோக்கத்தில் எவரெஸ்ட் சிகரத்தை வென்றுள்ளார். பள்ளி கல்வியை முடித்ததும் (2024-இல் பன்னிரண்டாம் வகுப்பு), ஒரு வருட இடைவெளியில் அவருடைய பயிற்சி துவங்கியது (டிசம்பர் 2023). அனுபவப் பயணம், அடிப்படை மற்றும் மேம்பட்ட மலை ஏறுதல் பயிற்சிகளை A தரத்தில் முடித்துள்ளார். இதன் பின்னர், ஹிமாலயன் பகுதியில் பல சவாலான நடைபயணங்களையும்…
Read Moreகண்ணப்பா’ இந்திய சினிமாவில்மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – நடிகர் விஷ்ணு மஞ்சு உறுதி
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஷ்ணு மஞ்சு எழுத்து, தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்டமான படைப்பான ‘கண்ணப்பா’ இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மிக்க படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. பிரபாஸ், மோகன்லால், அக்ஷய் குமார், சரத்குமார் உள்ளிட்ட இந்தியா சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் இப்படத்தை முகேஷ் குமார் சிங் இயக்கியிருக்கிறார். வரும் ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் பிரத்யேக காட்சிகள் பத்திரிகையாளர்களுக்கு திரையிடும் நிகழ்வு இன்று (மே 30) சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், விஷ்ணு மஞ்சு, மதுபாலா, இயக்குநர் முகேஷ் குமார் சிங், படத்தொகுப்பாளர் ஆண்டனி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டார்கள். கண்ணப்பா படத்தின் பிரேத்யக காட்சிகளை பார்த்த பத்திரிகையாளர்கள் நடிகர் விஷ்ணு மஞ்சு உள்ளிட்ட படக்குழுவை…
Read Moreஇந்தியாவின் இரு மெகா சக்திகள், ஹிர்திக் ரோஷன் மற்றும் ஹொம்பாலே பிலிம்ஸ், ஒரு புதிய பான்-இந்தியா திரைப்படத்திற்காகக் கைகோர்த்துள்ளனர்!
ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரம் ஹிர்திக் ரோஷன் நடிக்கும் புதிய பான்-இந்தியா திரைப்படம் !! இந்தியத் திரைத்துறையில் மிகப்பெரிய திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹொம்பாலே பிலிம்ஸ், தனது தொடர்ச்சியான வெற்றிப்படங்களின் மூலம் புதிய அளவுகோலை நிலைநிறுத்தியுள்ளது. இந்த ஸ்டுடியோ தொடர்ச்சியாக மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ஹிட்களை வழங்கி ரசிகர்களை அசத்தி வந்துள்ளது. இப்போது இந்தியளவில் ரசிகர்கள் உற்சாகம் கொள்ளும் வகையில் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக, ஹொம்பாலே பிலிம்ஸ், பாலிவுட் ஸ்டார் ஹிர்திக் ரோஷனுடன் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பே இந்தியா முழுவதும் ஹிர்திக் ரோஷனின் ரசிகர்களுக்கும், திரைப்பட ரசிகர்களுக்கும் மிகப்பெரிய ஆச்சரிய செய்தியாக மாறியுள்ளது. இதைப் பற்றிக் கூறும் ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனர் விஜய் கிரகந்தூர் கூறியதாவது…. “எங்களின் இந்த கூட்டணி மிகுந்த மகிழ்ச்சி தந்துள்ளது. ஹொம்பாலே பிலிம்ஸில்,…
Read More48 மணி நேரத்தில் முழு படமும் முடித்து திரையிடப்பட இருக்கும் உலக சாதனை திரைப்படம் ‘டெவிலன்’!
ஒரு திரைப்படத்தை எடுப்பதே மிக சவாலான விசயம் என்ற நிலையில், அதை வெளியிடுவது என்பது அதை விடவும் சவாலாக இருக்கும் தற்போதைய காலக்கட்டத்தில், 48 மணி நேரத்தில், ஒரு படத்தின் படப்பிடிப்பு முதல் பின்னணி வேலைகள் வரை, அனைத்து பணிகளையும் முடித்து, படத்தையும் திரையிடும் புதிய உலக சாதனை முயற்சியில் தயாரிப்பாளரும், நடிகருமான ராஜ்குமார் மற்றும் இயக்குநர் பிக்கய் அருண் ஈடுபட்டுள்ளனர். ’டெவிலன்’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு நாளை (மே 29) மாலை 3 மணிக்கு தொடங்கி, அடுத்த நாள் (மே 30) மாலை 3 மணி வரை நடைபெறும். 3 மணி முதல் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தொடங்கி, மே 31 ஆம் தேதி மாலை 3 மணிக்குள் அனைத்து பணிகளையும் முடித்து, சரியாக மே 31 ஆம் தேதி, மாலை…
Read Moreஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரம் ஹிர்திக் ரோஷன் நடிக்கும் புதிய பான்-இந்தியா திரைப்படம் !!
இந்தியத் திரைத்துறையில் மிகப்பெரிய திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹொம்பாலே பிலிம்ஸ், தனது தொடர்ச்சியான வெற்றிப்படங்களின் மூலம் புதிய அளவுகோலை நிலைநிறுத்தியுள்ளது. இந்த ஸ்டுடியோ தொடர்ச்சியாக மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ஹிட்களை வழங்கி ரசிகர்களை அசத்தி வந்துள்ளது. இப்போது இந்தியளவில் ரசிகர்கள் உற்சாகம் கொள்ளும் வகையில் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக, ஹொம்பாலே பிலிம்ஸ், பாலிவுட் ஸ்டார் ஹிர்திக் ரோஷனுடன் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பே இந்தியா முழுவதும் ஹிர்திக் ரோஷனின் ரசிகர்களுக்கும், திரைப்பட ரசிகர்களுக்கும் மிகப்பெரிய ஆச்சரிய செய்தியாக மாறியுள்ளது. இதைப் பற்றிக் கூறும் ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனர் விஜய் கிரகந்தூர் கூறியதாவது…. “எங்களின் இந்த கூட்டணி மிகுந்த மகிழ்ச்சி தந்துள்ளது. ஹொம்பாலே பிலிம்ஸில், நாங்கள் மொழி எல்லைகளைக் கடந்து மக்கள் விரும்பும் கதைகளைச் சொல்லும் நோக்குடன் பயணிக்கிறோம். ஹிர்திக் ரோஷனுடன்…
Read Moreமெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில், சத்யராஜ், காளி வெங்கட் நடிப்பில், மிடில் கிளாஸ் வாழக்கையை பிரதிபலிக்கும், அழகான டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் ‘மெட்ராஸ் மேட்னி’
வரும் ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்… பாடலாசிரியர் சினேகன் பேசியதாவது.. இந்தப்படம் எடுத்து முடித்த பிறகு தான் என்னைப் பாடல் எழுதக் கூப்பிட்டார்கள், காளி வெங்கட் நாயகன் என்றார்கள் அவர் எந்தப்படத்திலிருந்தாலும் அதில் ஒரு ஈர்ப்பு இருக்கும். அவர் மிகச்சிறந்த நடிகர். இந்தப்படம் பார்க்கப் போகும் போது வியாபாரத்திற்கு ஏதாவது இருக்க வேண்டுமே என நினைத்தேன் ஆனால் அதையெல்லாம் படம் மறக்கடித்துவிட்டது. அதன் பிறகு தான் இந்தப்பாடல் எழுதினேன். வடிவேலு பாடிய அந்தப்பாடலை நீங்கள் கண்டிப்பாக ரசிப்பீர்கள். இயக்குநர் கார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர் பாலசாரங்கன் இருவருக்கும் நன்றிகள். இந்தப்படத்தில் நானும் இருப்பது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. காளி வெங்கட் பசிக்கும் இன்னும் நிறையத் தீனி…
Read More