பார்க்கிங் சினிமா விமர்சனம் :

இரு குடித்தனங்கள் வசிக்கும் ஒற்றை மாடி அடுக்கக குடியிருப்பில் இருக்கும் சிறிய பார்க்கிங் ஏரியாவில் தங்கள் வாகனங்களை நிறுத்துவது தொடர்பான பிரச்சனையால் இரு நல்ல மனிதர்கள் எப்படி மிக மோசமான மிருகங்களைப் போல் மாறுகிறார்கள் என்பதும், அவர்கள் தங்கள் ஈகோவை விட்டுவிட்டு தவறை உணர்ந்து திருந்தினார்களா..? இல்லை அந்த ஈகோவிற்கு தங்களை பலி கொடுத்தார்களா..? என்பதை விறுவிறுப்புடனும் சுவாரஸ்யத்துடனும் பேசி இருக்கும் திரைப்படம் தான் “பார்க்கிங்”. ஒற்றை மாடி அடுக்கக குடியிருப்பின் கீழ் தளத்தில் 10 ஆண்டுகளாக குடியிருந்து வரும் அரசாங்க ஊழியர் இளம்பரிதி (எம்.எஸ்.பாஸ்கர்). நகராட்சி அலுவலகத்தில் வி.ஏ.ஓ வாக பணிபுரியும் அவர் நேர்மைக்குப் பெயர் போனவர், அதே போல் தனக்கு இருக்கும் ஒற்றை மகளை செல்வ செழிப்புடன் கட்டிக் கொடுக்க வேண்டும் என்கின்ற கனவிற்காக சிறுக சிறுக பணத்தைச் சேர்த்து, பார்த்துப் பார்த்து செலவழித்து,…

Read More

”குய்கோ” சினிமா விமர்சனம்

தனது 30 வருட பத்திரிக்கைத் துறைப் பணி மற்றும் அனுபவத்தை தொடர்ந்து அருள் செழியன் முதன்முறையாக இயக்கி இருக்கும் திரைப்படம் “குய்கோ”. அருள் செழியன் 2016ம் ஆண்டு வெளியான ‘ஆண்டவன் கட்டளை” திரைப்படத்தின் கதாசிரியராக பணியாற்றியவர் என்பது நினைவு கூறத்தக்கது.  ’ஆண்டவன் கட்டளை’ திரைப்படம் எப்படி அனைத்து தரப்பு மக்களையும் கவரும் திரைப்படமாக இருந்ததோ அதே போன்று “குய்கோ” திரைப்படமும் ஒரு வித்தியாசமான காண்பனுவத்தைக் கொடுக்கும் படமாக அமைந்திருந்தது என்பதிலும் கண்டிப்பாக கொண்டாட்டத்திற்கான படமாக “குய்கோ” இருக்கின்றது என்பதிலும் படம் பார்த்த யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இயக்குநருக்கு பழைய தமிழ் படங்கள் என்றால்  மிகவும் பிடிக்கும் போல் தெரிகிறது. தான் கதை எழுதிய திரைப்படத்திற்கு  ஆண்டவன்  கட்டளை என்ற பெயரை அவர்தான்  சிபாரிசி செய்தாரா..? என்பது தெரியவில்லை. அல்லது அப்படம் வணிக ரீதியாகவும் விமர்சன…

Read More