விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் – ஆரஞ்சு மிட்டாய் புரொடக்சன்ஸூடன் இணைந்து ‘சென்னை பழனி மார்ஸ்’ என்கிற படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் பிஜூ. இந்தப் படத்தில் முற்றிலும் புதிய களம், புதிய கதை என நம்மை ஆச்சரியப்படுத்துகிறார். இந்த படம் குறித்த தகவல்களை படக் குழுவினருடன் இணைந்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார் இயக்குநர் பிஜூ. நான்கு சண்டைக்காட்சிகள் கொண்ட படம், ஹீரோயிஸமான படங்களும் இங்கு வேண்டும். ‘சென்னை பழனி மார்ஸ்’ மாதிரி புதுமுகங்கள் நடித்த படங்களும் வேண்டும். எல்லாவிதமான படங்களும் வரும்போதுதான் மக்களுக்கு சினிமா பார்க்க வேண்டும் என்ற ஆவல் வரும். நண்பர்கள் இருவர் சேர்ந்து சென்னையிலிருந்து பழனி வழியாக மார்ஸ் போகமுடியுமான்னு முயற்சி பண்றாங்க. அது ஒரு தந்தையின் கனவாக இருந்தது. தந்தையைத் தொடந்து அவரது பையன் அந்தக் கனவை நூல் பிடித்துப் போகிறான். அவனுடன் நண்பனும் சேர்ந்துகொள்ள பயணம் சென்னையிலிருந்து…
Read MoreMonth: June 2019
ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் – தங்க தமிழ் செல்வன்!
அமமுகவிலிருந்து விலகிய தங்க தமிழ்ச்செல்வன் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார். டி.டி.வி. தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் முன்னணி நிர்வாகிகளில் ஒருவராக இருந்தவர் தங்க தமிழ்ச்செல்வன். அ.தி.மு.க.வுக்கு எதிரான நிலைப்பாட்டை எம்எல்ஏக்கள் எடுத்தபோது, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களுள் இவரும் ஒருவர். அ.தி.மு.க.வை விட்டு வெளியேறிய பிறகு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தொலைக்காட்சி விவாதங்களிலும் பங்கேற்று வந்தார். இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரனுடன், தங்க தமிழ்ச்செல்வனுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தொடர்ந்து இருவரும் வார்த்தைகளால் மோதிக்கொண்ட நிலையில், தங்க தமிழ்ச்செல்வனை நீக்குவதாக ஏற்கனவே அறிவித்து விட்டேன், எனவே அவரை பற்றி பேச ஒன்றும் இல்லை என்று டிடிவி தினகரன் அறிவித்தார். தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணையக்கூடும் என்று சமூக…
Read Moreஇயக்குனர் இராஜமோகன் இயக்கும் “நான்கு கில்லாடிகள்” I
“குங்குமபூவும் கொஞ்சும்புறாவும்”, “வானவராயன் வல்லவராயன்”, “ருக்குமணி வண்டி வருது”, படங்களுக்கு பிறகு காக்டெயில் சினிமாஸ் நிறுவனத்திற்காக இயக்குனர் இராஜமோகன் இயக்கும் புதிய படம் “நான்கு கில்லாடிகள்”. இது ஒரு தமிழ் தேசிய குறியீட்டு படமாக உருவாகி வருகிறது. உண்மை சம்பவத்தை அடிப்படியாக கொண்டு உருவாகும் இப்படத்திற்கு கதையை இராஜமோகன் மற்றும் சிவக்குமார் இணைந்து எழுத, இராஜமோகன் திரைகதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தேனி, இடுக்கி, பெரியகுளம், மூனாறு, ஆகிய இடங்களில் நடந்துமுடிந்தது. இப்படத்தின் இரண்டாம்கட்ட படபிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது. இத்திரைபட்தில் இசக்கிபரத், அறிமுக நாயகி தியா, டேனியல், தம்பி ராமையா, கோவை சரளா, A.வெங்கடேஷ், காதல் சரவணன் மற்றும் மெட்ராஸ் நந்தகுமார், இயக்குனர் நாகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்கள். இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதற்காக முன்னணி கதாநாயகன் ஒருவரிடம் பேச்சு…
Read Moreஒட்டகம் மீது நிறைய பஞ்சாயத்து இருக்கு – விக்ராந்த்
எம்10 புரொடக்ஷன் (M10 PRODUCTION) சார்பில் எம்.எஸ்.முருகராஜ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பக்ரீத்’. இதில் விக்ராந்த் நாயகனாகவும் வசுந்தரா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். மேலும் ரோகித் பதாக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் ஒளிப்பதிவும் செய்திருக்கிறார் ஜெகதீசன் சுபு. டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் முருகராஜ், இயக்குனர் ஜெகதீசன் சுபு, நாயகன் விக்ராந்த், நாயகி வசுந்தரா, நடிகர் ரோகிப் பதாக், மோக்லி, பேபி ஸ்ரூத்தீகா, பாடலாசிரியர்கள் ஞானகரவேல், மணிஅமுதவன், கலை இயக்குனர் மதன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். விக்ராந்த் பேசும்போது, ‘நான் சினிமா உலகிற்கு வந்து 11 வருடம் ஆகுது. ஆனால் இந்த மேடை எனக்கு ரொம்ப புதுசு. இப்போது பெரிய நம்பிக்கையோடு நிற்கிறேன். இந்தப்படம் அந்த தைரியத்தைக்…
Read Moreகாதலைக் கெளரவப்படுத்தும் ஒரு தனி வீடியோ ஆல்பம்!
மேலை நாடுகளைப் போல தமிழிலும் இண்டிபெண்டன்ட் ஆல்பம் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன . இதோ ஒரு புது ஆல்பமாக வந்திருப்பதுதான் “மழை சாரல் ” . இசையமைப்பாளர் யாதவ் ராமலிங்கம் இசையில் ஸ்வேதா மோகன், அசோக் ஐயங்கார் குரல்களில் உருவாகியிருக்கும் பாடலுக்கு கருணாகரன் வரிகளை எழுதியுள்ளார். ‘ காதல் மேகம் காற்றிலாடும் நெஞ்சில் வா மழையே’ என்று தொடங்குகிறது இந்தப் பாடல். காதலைக் கெளரவப்படுத்தும் ஒரு தனி வீடியோ ஆல்பமாக இது உருவாகி இருக்கிறது. இதனை ஆருத்ரா கான் வர்ஷா நிறுவனம் தயாரித்துள்ளது. முழுக்க முழுக்க மாண்டேஜ் முறையில் பாடல் ஒலிக்கிறது. படம் பிடிக்கப்பட்டிருக்கும் காட்சிகள் காதலுக்கு வேறொரு தளத்தில் வேறொரு வகையில் பொழிப்புரை எழுதுகின்றன. ஏற்கெனவே ராஜேஷ் ராமலிங்கம் என்ற பெயரில் ஒரு படத்திற்கு பாடல்களை உருவாக்கி எஸ்.ஜானகியைப் பாட வைத்தவர் , இப்போது யாதவ் ராமலிங்கம்…
Read More17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்த காலத்தால் மறக்க முடியாத ஜோடி!
பல ஆண்டுகளாகவே, ஒரு சில தலைப்புகள் சினிமாவில் பதிலளிக்கப்படாமல் இருக்கின்றன, ஆனால் அவை வியப்புக்குரியவை. அவற்றில் ஒன்று வெள்ளித்திரையில் தோன்றும் ஜோடிக்கு இடையே உள்ள கெமிஸ்ட்ரி. அது ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமல்லாமல், திரைப்படம் வெளியாகி பல ஆண்டுகளுக்கு பின்னரும், அவர்களின் திரைப்படங்களை நாம் பார்க்கும் போது நம்மை அறியாமல் வியக்க வைக்கிறது. வெளிப்படையாக, எப்போதும் இளமையான மாதவன் மற்றும் காலம் கடந்தாலும் அதே அழகு மற்றும் இளமையுடன் இருக்கும் சிம்ரன் போன்ற ஒரு கவர்ச்சியான ஜோடி நம்மை ‘பார்த்தாலே பரவசம்’ (2001) மற்றும் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ (2002) ஆகிய படங்களில் அவர்களை ரசிக்க வைத்தார்கள். உண்மையில், இந்த படங்கள் அவர்களை வெறும் ஜாலியான காதல் ஜோடிகளாகக் காட்டவில்லை, மாறாக சிக்கலான சூழ்நிலைகளை எதிர்கொள்பவர்களாக இருந்தனர். நிச்சயமாக, அதுதான் அழகு அல்லவா? சோதனைகள் மற்றும் இன்னல்கள் கடினமான…
Read Moreதர்மபிரபு – டிரைலர்!
ஆன் லைனை அலப்பறைச் செய்த விஜய்-யின் ‘ பிகில்’ போஸ்டர்கள்!
கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் விஜய்யின் 63ஆவது படமான பிகில் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று (ஜூன் 21) மாலை வெளியானது முதல் இணையத்தை கலக்கி வருகிறது. மேலும் இன்று பிறந்தநாள் காணும் விஜய்க்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்தையும், ட்விட்டர் மூலம் ட்ரெண்டிங்கையும் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், விஜய்யின் பிறந்தநாளை சிறப்பிக்கும் மற்றொரு அம்சமாக முன்னரே அறிவித்தபடி, பிகில் படத்தின் இரண்டாவது லுக்கையும் வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது படக்குழு. தந்தை-மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் வரும் விஜய்யின் நான்கு விதமான தோற்றங்கள் இந்த போஸ்டரில் வெளியாகியுள்ளது. குப்பத்தில் சக்தி வாய்ந்த நபராக இருக்கும் தந்தையின் பெயர் பிகில் எனவும், கால் பந்தாட்ட வீரராக வரும் மகனின் பெயர் மைக்கேல் எனவும் போஸ்டரை…
Read Moreவிண்வெளி வீரர்கள் குழுவில் இடம் பிடித்த அல்லி நகர மாணவிக்கு உதவிய விஜய் சேதுபதி!
இந்தியாவின் எதிர்கால விண்வெளி வீராங்கனையின் கனவை நிறைவேற்றிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர் மன்றம்! தேனி மாவட்டம் அல்லிநகரத்தை சேர்ந்த மாணவி உதயகீர்த்திகா. இவர் தேனியில் அரசு பள்ளி யில் தமிழ் வழியில் படித்தவர் .தனது ஏர் கிராப்ட் மெயின்டனன்ஸ் இன்ஜினியரிங் படிப்பை உக்ரைன்-கார்கிவ் இல் உள்ள நேஷனல் ஏர்ஃபோர்ஸ் யுனிவர்சிட்டியில் படித்துள்ளார் (பெற்றுள்ள மதிப்பெண்: 92.5% / ‘A ” கிரேடு) . 2022 ஆம் ஆண்டு இந்தியாவின் ‘இஸ்ரோ” ” சார்பாக விண் வெளிக்கு அனுப்பப்படுகிற விண்வெளி வீரர்கள் குழுவில் இடம் பிடித்து இந்தியாவுக்கான விண்வெளி வீராங்கனை ஆவதே இவர் லட்சியம் . தற்போது, போலந்து நாட்டில் உள்ள விண்வெளி “Analog austronaut training centre” என்ற விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி மையத்தில் ASTRONAUT பயிற்சி பெறுவதற்கு இடம் கிடைத்துள்ளது. பயிற்சிச் கட்டணம்,…
Read Moreபாடகியும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் ஓர் புதிய சிகரத்தை எட்டி உள்ளார்.
யூ எஸ் ஏ என்னும் பிரபல நெட்வொர்க்கால் ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அவர் டிரெட்ஸ்டோன் என்னும் தொலைக்காட்சி தொடரில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இத்தொடர் அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமான CIA வின் ஒரு முக்கிய பகுதியாக கருதப்படும் பிளாக் ஆப்ஸ் புரோக்ராம் ஆன டிரெட்ஸ்டோனை மையப்படுத்தி எடுக்கப் படுகிறது. டிரெட் ஸ்டோன்னில் பணி புரியும் அதிகாரிகளுக்கு அசாத்திய ஆற்றல் பெறுவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் அசாத்திய கொலையாளிகளாக , திறமை பெற்றவர்களாக மாற்றப்படுவர். இந்த தொலைக்காட்சி தொடரில் ஸ்ருதி நீரா படெல் என்கிற கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். இக்கதாப்பாத்திரம் டெல்லியில் ஒரு ஹோட்டல் பணியாளராக வேலை பார்த்து கொண்டே மறைமுகமாக கொலையாளியாகவும் உலவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது . இந்தத் தொடர் ஹெரோஸ்ஸை உருவாக்கிய…
Read More