ஆன் லைனை அலப்பறைச் செய்த விஜய்-யின் ‘ பிகில்’ போஸ்டர்கள்!

கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் விஜய்யின் 63ஆவது படமான பிகில் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று (ஜூன் 21) மாலை வெளியானது முதல் இணையத்தை கலக்கி வருகிறது. மேலும் இன்று பிறந்தநாள் காணும் விஜய்க்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்தையும், ட்விட்டர் மூலம் ட்ரெண்டிங்கையும் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், விஜய்யின் பிறந்தநாளை சிறப்பிக்கும் மற்றொரு அம்சமாக முன்னரே அறிவித்தபடி, பிகில் படத்தின் இரண்டாவது லுக்கையும் வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது படக்குழு. தந்தை-மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் வரும் விஜய்யின் நான்கு விதமான தோற்றங்கள் இந்த போஸ்டரில் வெளியாகியுள்ளது.

குப்பத்தில் சக்தி வாய்ந்த நபராக இருக்கும் தந்தையின் பெயர் பிகில் எனவும், கால் பந்தாட்ட வீரராக வரும் மகனின் பெயர் மைக்கேல் எனவும் போஸ்டரை பார்க்கும் போது நம்மால் கணிக்க முடிகிறது. நெற்றியில் குங்குமம், கழுத்தில் சிலுவை, கையில் கத்தியுடன் இருக்கும் தந்தை விஜய்யின் தோற்றம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு மெர்சல் படத்தைத் தொடர்ந்து விஜய்-அட்லீ கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படமான பிகிலுக்கு இசையமைக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான். ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு, ரூபன் படத்தொகுப்பு மற்றும் டி. முத்துராஜ் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்கள்.

Related posts

Leave a Comment