நடிகர் சூர்யாவால் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இயக்குனர் மித்துன் மாணிக்கத்தின் திரைப்படம் ஃபேமிலி பாய் (Family Boy) – டீசர் வெளியீடு

நடிகர் சூர்யாவால் தமிழ் திரையுலகில் கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகரும், இயக்குநருமான மித்துன் மாணிக்கம், கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஃபேமிலி பாய்- Family Boy’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் மித்துன் மாணிக்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஃபேமிலி பாய்- Family Boy’ திரைப்படத்தில் மித்துன் மாணிக்கம், எம். சுகுமார், சரண் சுதாகரன், அனுகிரஹா எஸ். நம்பியார் , நிகிலா சங்கர், அனிதா சம்பத், ‘பசங்க’ சிவகுமார், சிவம், அருள் தாஸ், பி. எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் கே  கதிரவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நிர்மல் JP இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஜிஜேந்திரன். V கவனிக்க, கலை இயக்கத்தை C. K. முஜிபுர் ரஹ்மான் மேற்கொண்டிருக்கிறார். உண்மை சம்பவத்தை தழுவி ஃபேமிலி டிராமா ஆக்சன் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த…

Read More

வைபவ் நடிப்பில் ஆன்மீகமும் ஆக்‌ஷனும் கலந்த பிரம்மாண்டமான திரைப்படம்! கார்த்திகை மாதத்தில் வெளியிடத் திட்டம்!

தந்த்ரா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘மணிகண்டா’. இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இயக்கத்தில், முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபு கிரியேட்டிவ் புரொடியூசராகப் பணியாற்றியுள்ள  இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் ரவிமோகன் வெளியிட்டுள்ளார். ஆன்மீகம், பக்தி மற்றும் ஆக்‌ஷன் அம்சங்கள் நிறைந்த திரைப்படமாக உருவாகியுள்ள ‘மணிகண்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. முன்னதாக “தத் த்வம் அஸி” என்ற பெயரில் படமாக்கப்பட்ட இப்படத்திற்கு,  தற்போது மணிகண்டா எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், நீல நிற ஆடையுடன் கையில் வேல் ஏந்தியபடி கம்பீரமான தோற்றத்தில் வைபவ் இடம்பெற்றுள்ளார். அவருக்குப் பின்னால் பிரம்மாண்டமான ஐயப்பன் சிலை, அதைச் சுற்றிலும் தங்க நிற ஒளியும் நெருப்புச் சுடர்களும் நிறைந்துள்ளன. விண்வெளியை நினைவூட்டும் பின்னணியும், ஆன்மீக உணர்வை வெளிப்படுத்தும் காட்சியமைப்பும் போஸ்டருக்கு…

Read More