நடிகர் சனந்த்தின் திரைப்பயணம் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளது. அவரது திறமை முழுமையாக வெளிப்படாமல் போன வலிமிகுந்த காலகட்டமும் இருந்துள்ளது. இந்நிலையில், சமீபத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தில் தனது அபாரமான நடிப்பின் மூலம் உச்சத்தைத் தொட்டு சனந்த் மிளிர்வது, அவருக்கும் ரசிகர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘டோரதி’ படத்தின் டிரெய்லரில் ஆக்ரோஷமான உடல்மொழியுடன் முரட்டுத்தனமான கதாபாத்திரத்தில் சனந்த் தோன்றியதால், அவர் ஒரு கிராமத்து முரட்டு இளைஞராக நடிக்கிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவானது. ஆனால், சுப்பு என்ற கதாபாத்திரத்தில் அவர் வெளிப்படுத்திய அசாத்தியமான நடிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தக்கூடிய ஒரு கதாபாத்திரத்திற்காக பல ஆண்டுகளாகக் காத்திருந்த சனந்த், தற்போது தனது திரைப்பயணத்தின் மிகச்சிறந்த நடிப்பு எனப் பலரும் பாராட்டும் ஒரு கதாபாத்திரத்தைப் பெற்றுள்ளார். விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து தொடர்ந்து பாராட்டுகள் அவருக்கு குவிந்து…
Read MoreMonth: October 2026
ஜூனியர் ஆர்டிஸ்ட் முதல் ஹீரோ வரை: நடிகர் சித்து பேச்சு!
அண்மையில் வெளியான ‘தி டார்க் ஹெவன் ‘ திரைப்படம், களத்தில் நின்ற பல்வேறு போட்டிப் படங்களுக்கு மத்தியில் மூன்றாவது வாரமாக வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.இப்படத்தின் வெற்றி சிறு முதலீட்டுப் படங்களுக்குப் பெரிய நம்பிக்கை வெளிச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று திரையுலகில் பேசப்படுகிறது. இதன் வெற்றியை இயக்குநர் பாலாஜி தனது சொந்த ஊரான திருநெல்வேலியில் விழா எடுத்துக் கொண்டாடினார். நெல்லையைச் சேர்ந்த இயக்குநர் பாலாஜி இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 18ம் தேதி வெளியான படம் ‘தி டார்க் ஹெவன்’. இதில் சித்து, தர்ஷிகா, ரித்விகா, வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், சாரண், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு மணிகண்டன் பிகே ஒளிப்பதிவு செய்ய, சக்தி பாலாஜி இசையமைத்துள்ளார். இப்படத்தை கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் ஸ்விஸ் பிலிம் பேக்டரி…
Read More
