தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தலைவரும், இயக்குநருமான சேரன், ராமையா ரவிச்சந்திரன் இயக்கியுள்ள ‘யானைமரம்’ படத்தின் டிரைலரை பார்த்து, பாராட்டியது மட்டுமல்லாமல், ‘யானைமரம்’ படத்தின் போஸ்டரையும் வெளியிட்டார்.
உரிமைக்காக போராடும் சிறுவனின் முயற்சி கண்கலங்க வைக்கும். பள்ளி மாணவர்கள் பார்க்க வேண்டிய படம் ‘யானை மரம்’.
படத்தின் இயக்குநர் ராமையா ரவிச்சந்திரன், தயாரிப்பாளர் ஆர்.சசிகலா இருவரையும் பாராட்டினார் சேரன்.
மாஸ்டர் அபினேஷ், ஜோதி கண்ணன், செம்புலி ஜெகன், ஜெயிலர் சீனு, ராணி, மஞ்சு, லீலா ஆகியோர் நடித்துள்ளனர்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி, ராமையா ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இசை அரவிந்த் சித்தார்தா, கலை ஆர்.அபிராம், படத்தொகுப்பு கோபால், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். ஓப்பன் விண்டோ பிக்சர்ஸ் சார்பில் ஆர்.சசிகலா தயாரித்துள்ளார்.
விரைவில் திரைக்கு வருகிறது ‘யானை மரம்’.
