இயக்குநர் அஹம்மது கபீர் இயக்கத்தில், காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் உருவாகியுள்ள காதல் மற்றும் நகைச்சுவை கலந்த ரொமாண்டிக் காமெடி திரைப்படமான ‘மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்’ (Many Many Happy Returns) வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வ போஸ்டருடன் படக்குழு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ராகுல் வெளியிடுகிறார். காதல், நட்பு, குடும்ப உறவுகள் மற்றும் நம் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகளை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாகியுள்ளது. நகைச்சுவை, காதல், இசை என அன்றாட வாழ்க்கையில் நாம் கடந்து செல்லும் உறவுகளின் அழகையும், நமக்குப் பிடித்தமான மனிதர்கள் நம் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் உணர்வுப்பூர்வமாகச் சொல்லும் படமாக ‘மெனி மெனி ஹேப்பி…
Read More