”நான் இங்கு நிற்கக் காரணம் இயக்குநர் மிஷ்கின் தான்” – நடன இயக்குநர் ராதிகா

‘Golden studios’ சார்பில் தயாரிப்பாளர் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. மாறுபட்ட களத்தில் பெண்கள் பாதுகாப்பை மையப்படுத்தி சமூக அக்கறையுடன், கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தில் சாய் தன்ஷிகா முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். ருத்வீர் வதன், மைம் கோபி, ரித்விகா, இந்திரஜா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, திரைப்பிரபலங்களுடன் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இயக்குநர் மிஷ்கின், தயாரிப்பாளர் கே ராஜன், இயக்குநர் ஆர் வி உதயகுமார், யூகி சேது பாடலாசிரியர் சினேகன், ரோபோ சங்கர், நடிகர் சந்தோஷ் பிரதாப் உட்பட பல திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். தயாரிப்பாளர் கோமதி பேசியதாவது… இந்த விழாவிற்கு எங்களை வாழ்த்த…

Read More

ஹாட் ஸ்டாரில் சர்வைவல் த்ரில்லர் ”மஞ்சும்மெல் பாய்ஸ்”

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர்களில் ஒன்றான, இயக்குநர் சிதம்பரத்தின் சர்வைவல் த்ரில்லரான ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ திரைப்படத்தை, வரும் மே 5 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. தமிழ்நாட்டின் கொடைக்கானல் சுற்றுலா பகுதியில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம், மொழிகள் தாண்டி அனைத்து பிராந்தியங்களில் உள்ள பார்வையாளர்களைக் கவர்ந்தது. உலகெங்கிலும் பரவலாக ரசிக்கப்பட்ட இப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ. 200 + கோடிகளை வசூலித்துள்ளது. ஒரு சர்வைவல் படத்திற்கான கச்சிதமான திரைக்கதையுடன், நட்பின் வலிமையைப் பேசிய மஞ்சும்மெல் பாய்ஸ் தமிழ் ரசிகர்களின் இதயங்களை வென்றது, இன்றுவரை தமிழில் வெற்றிபெற்ற மிகப்பெரிய மலையாள படமாக இப்படம் சாதனை புரிந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்திற்கு தங்கள் மனமார்ந்த பாராட்டுகளைத்…

Read More

மே 10ல் வெளியாகும் சாந்தகுமார்-அர்ஜூன் தாஸின் |”ரசவாதி – தி – அல்கெமிஸ்ட்”

‘மௌனகுரு’, ‘மகாமுனி’ புகழ் இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் லவ் ஆக்‌ஷன்- க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ’ரசவாதி- தி அல்கெமிஸ்ட்’ மே 10 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது! திரைப்பட ஆர்வலர்களைக் கவரும் வகையில் தீவிர உணர்ச்சிகளையும், யதார்த்தங்களையும் தன்னுடைய திரைமொழியில் திறமையாகக் கையாள்பவர் இயக்குநர் சாந்தகுமார். அவர் இயக்கத்தில் வெளியான ‘மௌன குரு’ மற்றும் ‘மகாமுனி’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் தமிழ் ரசிகர்களைத் தாண்டி பல மொழிப் பார்வையாளர்களையும் ஈர்த்தது. அவர் இயக்குநராக அறிமுகமான ‘மௌன குரு’ படம் தமிழில் மாபெரும் வெற்றி பெற்றது மற்றும் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் ஆனது. அவரது இரண்டாவது வெளியீடான ‘மகாமுனி’ 30 சர்வதேச விருதுகளுடன் 24 விருதுகளை ‘சிறந்த இயக்குநரு’க்காக வென்றது. இந்த படத்தில் இருந்து பல…

Read More

விஜயகுமாரின் எலெக்‌ஷன் திரைப்பட வெளியீடு அறிவிப்பு

‘உறியடி’, ‘உறியடி 2’, ‘ஃபைட் கிளப்’ என தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை வழங்கிய பிரபலமான நட்சத்திர நடிகர் விஜய்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எலக்சன்’ திரைப்படம், மே 17ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது என படக் குழுவினர் உற்சாகத்துடன் அறிவித்திருக்கிறார்கள்.‌ ‘சேத்துமான்’ படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எலக்சன்’ எனும் திரைப்படத்தில் விஜய்குமார், ‘அயோத்தி’ புகழ் பிரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, ‘வத்திக்குச்சி’ திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம், நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏழுமலை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை சி. எஸ். பிரேம்குமார் கையாண்டிருக்கிறார். வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் அரசியலை…

Read More

மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ்: முதன்மையான 12 போட்டியாளர்கள் பெயர் அறிவிப்பு!

வீட்டில் சமைக்கும் ஒரு நபர் மாஸ்டர்செஃப் சமையலறைக்குள் கால் பதிக்கும்போது, அவரது பெயர் பொறிக்கப்பட்ட வெள்ளை நிற மேலங்கியை பெருமையுடன் அணிவது தான் அவரது / அவளது பெருவிருப்பமாக இருக்கும். மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ் – ன் சமீபத்திய எபிசோடில், அப்போட்டியில் பங்கேற்கும் முதன்மையான 12 போட்டியாளர்கள் யார் என்பது அறிவிக்கப்பட்டிருப்பதால், இந்த சுவையான நிகழ்ச்சி ஒரு முக்கிய தருணத்தை எட்டியிருக்கிறது. இவர்களை தேர்ந்தெடுப்பதற்கான செய்முறையை ஒரு தனிச்சிறப்பானதாகவும், வித்தியாசமானதாகவும் ஆக்கியிருப்பது நடுவர்களால் தரப்படும் ஃபிளிப் தி போர்டு என்ற ஒரு தனித்துவமான சவாலாகும். தங்களது தோற்றத்தையே கண்ணாடி பிரதிபலிப்பில் பார்க்குமாறு இந்த சமையல் கலைஞர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தங்களது வெட்டுப்பலகையை திருப்பும்போது அவர்களது தோற்றத்தையே அவர்கள் பார்க்க நேர்ந்தது. ஆர்வத்தோடும், ஈடுபாட்டோடும் அவர்கள் தொடங்கிய இந்த பயணத்தின் ஒரு நினைவூட்டலாக இது அமைந்தது. அவர்களது சமையல் திறன்களை…

Read More

”இது மாறுதலுக்கான நேரம்” – நாற்கரப்போர் இயக்குநர் ஸ்ரீவெற்றி

ஹெச்.வினோத், ராஜபாண்டி உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் ஸ்ரீ வெற்றி. ‘நாற்கரப்போர்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். பட ரிலீஸுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. குப்பை அள்ளும் சமுதாயத்தில் இருந்து வந்த ஒருவன் எப்படி ‘கிராண்ட் மாஸ்டர்’ ஆகிறான் ? அதற்காக அவன் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்பதை சொல்லும் அழகான ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவாக இந்த ‘நாற்கரப்போர்’ உருவாகி உள்ளது. இந்தநிலையில் தூய்மை பணியாளர்களின் அவல நிலையையும், அவர்களது நலன் குறித்த அரசின் பாராமுகத்தையும் குறித்து தனது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ள இயக்குநர் ஸ்ரீ வெற்றி ஒரு நாள் அதிகாரத்தின் கதவுகள் தகர்க்கப்படும் என்கிற தனது மனக்குமுறலையும் வெளிப்படுத்தியுள்ளார் இதுகுறித்து அவர் கூறும்போது, “அரசியல், உயர்சாதி, பணம், விளையாட்டு என்கிற வெள்ளை காய்களுக்கும் ஏமாளிகளான மக்கள், ஒடுக்கப்படுபவர்கள், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சாதியால் இழிவு…

Read More

நடிகர் உண்ட உணவில் புழு ; கண்டுகொள்ளாத ஹோட்டல் நிர்வாகம்

தமிழ் சினிமாவின் இளம் நடிகர் விஜய் விஷ்வா, ஊட்டிக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருக்கிறார். அங்குள்ள Mciver villa ஹோட்டலில் சாப்பிட சென்றபோது உணவில் வாடை அடிக்கவே சாஸ் பாட்டிலை திறந்து பார்த்திருக்கிறார்கள். அது முழுக்க புழுவாக இருந்துள்ளது. சாப்பிட்டவர்கள் வாந்தியெடுத்துள்ளனர். இதை புகார் அளிக்க ஹோட்டல்காரர்கள் கண்டுகொள்ளவே இல்லையாம். இனிமேல் சுற்றுலா செல்பவர்கள் வெளியில் சாப்பிடும்போது கவனமாக இருங்கள் இது உங்களுக்கும் நடக்கலாம். இது குறித்து ஹீரோ விஜய் விஷ்வா பகிர்ந்த வீடியோ இப்போது வைரலாக பரவி வருகிறது.  

Read More

”ஒரு சொட்டு மது கூட நான் குடலில் இறக்கியதில்லை” – படிக்காத பக்கங்கள் விழாவில் கவிஞர் வைரமுத்து

முத்துக்குமார் தயாரிப்பில் செல்வம் மாதப்பன் இயக்கத்தில், ‘படிக்காத பக்கங்கள்’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய கவிப்பேரரசு வைரமுத்து, “இந்தப் ‘படிக்காத பக்கங்கள்’ இசை வெளியீட்டு விழா மிகவும் முக்கியமான நிகழ்வு. இந்த மேடைக்கு ஆதவ் பாலஜி என்று ஒரு கலைஞர் பேச வந்தார். அறிவிப்பாளர், அவர் பெயரைத் தடம் மாற்றி ஆதங்க பாலாஜி என்று அறிவித்தார். ஆதவ் பாலாஜி என்பது அவரது இயற்பெயர். ஆனால், திரையுலகத்தின் தற்கால நிலைமை என்ன, கதைகளின் போக்கு என்ன, திரையரங்குகளின் நிலைமை என்ன, தயாரிப்பாளர்களின் கலவரம் என்ன என்று ஆதங்கத்தைக் கொட்டி விட்டுப் போனதால் அவருக்கு ஆதங்க பாலாஜி என்று காரணப் பெயராக அமைந்து விட்டது என்று நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. அதுதான் உண்மை. இந்த விழாவிற்கு நான் மகிழ்ச்சியோட…

Read More

ஜூன் 27ல் வெளியாகும் கல்கி 2898 AD

பிரபாஸ் நடிக்கும் ‘கல்கி 2898 AD’ திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது ! இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் அறிவியல் புனைவு கதையான ‘கல்கி 2898 AD’ எனும் திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ் ஆகியோருடன் பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோன் மற்றும் திஷா படானியும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் தருணத்தில், இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படத் தயாரிப்பு நிறுவனமான வைஜயந்தி மூவிஸ் அவர்களுடைய அதிகாரப்பூர்வமான எக்ஸ் ( ட்விட்டர்) தளத்தில் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே இப்படத்தின்…

Read More

ரத்னம் விமர்சனம்

கில்லி, பையா, என பல படங்களில் பார்த்த அதே கதை தான். நாயகியை துரத்தும் ஒரு கும்பல். நாயகியை காப்பாற்றப் போராடும் நாயகன், இந்த இரண்டு செயல்களுக்கும் பின்னால் காரணங்கள் அடங்கிய சில பின்கதைகள். இது தவிர்த்து நாயகன் விஷாலுக்கும் வில்லன் கூட்டத்திற்குமான மற்றொரு பின்கதை அடங்கியது தான் இந்த “ரத்னம்” திரைப்படத்தின் கதை. இக்கதையில் இறுதியில் நாயகன் நாயகியை காப்பாற்றினானா…? என்று கேட்கவும் வேண்டுமா என்ன…? ஆந்திரா, தமிழ்நாடு எல்லை பிரிக்கப்பட்ட பொழுது சில தமிழர்கள் மற்றும் தெலுங்கர்களின் நிலம் அண்டை மாநிலங்களில் மாட்டிக் கொண்டதால் ஏற்படும் பிரச்சனைகளில் துவங்கும் கதை, திருப்பதி மலை மேல் செல்லும் பேருந்தை கவிழ்த்து கொள்ளை கொலை சம்பவங்கள் நிகழ்த்தும் கயவர்களைக் காட்டி, அப்படியே தமிழ்நாட்டிற்கு பயணித்து, அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் சமுத்திரக்கனியை சிறு வயது விஷால் காப்பாற்றி…

Read More