முடிவடையும் கட்டத்தில் விஜய் ஆன்டனி நடிக்கும் “ தமிழரசன் “!

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம்  ” தமிழரசன் “ இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். மற்றும் சுரேஷ்கோபி ராதாரவி சோனு சூட்,யோகிபாபு,சங்கீதா கஸ்தூரி ரோபோ சங்கர், கஸ்தூரி சாயாசிங் மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன்,கதிர், ஸ்ரீலேகா,ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ்,சென்ட்ராயன் கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமி நாதன்,  முனீஸ்காந்,த் ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார்.. ஒளிப்பதிவு –  ஆர்.டி.ராஜசேகர் இசை  –   இளையராஜா பாடல்கள்  –  பழனிபாரதி, ஜெய்ராம் கலை  –   மிலன் ஸ்டண்ட்  –   அனல் அரசு எடிட்டிங்   –   புவன் சந்திரசேகர் நடனம்   –      பிருந்தா சதீஷ் தயாரிப்பு மேற்பார்வை   –     ராஜா ஸ்ரீதர் கதை திரைக்கதை வசனம் இயக்கம்  –   பாபு யோகேஸ்வரன் தயாரிப்பு  –    கெளசல்யா ராணி படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடை பெற்றது…இரண்டு…

Read More

வியு சினிமாஸ் மற்றும் நியு பார்ன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் தேவதாஸ்!

தம்பி ராமையா-ஷாகுல் ஹமீது இணைந்து தயாரிக்கும், அறிமுக இயக்குனர் இரா மகேஷ் இயக்கும், உமாபதி, யோகிபாபு அசத்தும் தேவதாஸ். ‘அதாக்கப்பட்டது மகா ஜனங்களே’, ‘மணியார் குடும்பம்’, ‘திருமணம்’ ஆகிய  படங்களை தொடர்ந்து உமாபதி ராமையா-யோகி பாபுவுடன் இணைந்து நடித்திருக்கும் படம் தேவதாஸ்.  இன்றைய தமிழ் சினிமாவின் நம்பிக்கை நடிகர் யோகி பாபு கலகலப்பூட்டும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இத்திரைப்படம் முழுவதும் வலம் வருகிறார். மனித வாழ்க்கை என்பது இன்பமும், துன்பமும் இரண்டற கலந்தது என்பது அறிந்ததே. ஆனால், ஒரு மனிதனுக்கு மிகப் பெரிய சந்தோஷமும், மிகப் பெரிய துக்கமும், ஒரே நேரத்தில் நடக்குமென்றால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதே இத்திரைப்படத்தின் கதைக்களம். இந்த  உணர்வுப்பூர்வமான கதையை நகைச்சுவை கலந்து, ஜனரஞ்சகமாக விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார் இயக்குனர்.  இப்படம் பார்க்கும் அனைவரும் பல கட்டங்களில் தாங்கள் சந்தித்த, அனுபவித்த,…

Read More

சைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் மும்மொழி திரைப்படம் “நிக்கிரகன்”

சைதன்யா சினி கிரியேஷன்ஸ் சார்பாக, சைதன்யா சங்கரன் தயாரிப்பில், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில், அறிமுக இயக்குனர் நஸ்ரேன் சாம் இயக்கத்தில், பிரஸாந்த் தாவீத், கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் மும்மொழி திரைப்படம் ‘நிக்கிரகன்’. இரு கல்லூரி மாணவர்கள், பகுதி நேர வேலையாக,  ஒரு எஃப் எம் சேனலில் ரேடியோ ஜாக்கியாக வேலை பார்க்கிறார்கள். அவர்கள் வழங்கும் ஒரு புதுமையான, கலகலப்பான நிகழ்ச்சியின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்கின்றனர். பின்னர் அதையே முழுநேர வேலையாகவும் மாற்றிக் கொண்டுவிட, வேடிக்கையாக சென்று கொண்டிருக்கும் வாழ்க்கை, அவர்களே அறியாத வண்ணம் திடீரென தடம் மாறுகிறது. இணையத்தில் மறைந்துள்ள ஆபத்துகள் என்னென்ன, அதில் சிக்கிக்கொண்ட அவர்கள், அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதே இப்படத்தின் கதைக்களம்.  நம் அன்றாட வாழ்வில் கடந்து வருகின்ற, சற்றே முக்கியத்துவமற்ற நிகழ்வுகள் போல தோன்றும்…

Read More

கே.சி.பொகாடியாவின் “ராக்கி”

சந்தோஷ் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. அவர் விபத்தில் அடிபட்ட ஒரு நாய்க்குட்டியை சிகிச்சை கொடுக்க வைத்து காப்பாற்றி, ராக்கி என்று பெயர் வைக்கிறார். அவரது மனைவியும் ராக்கியை குழந்தை போல பார்த்துக்கொள்கிறாள். ராக்கி மிகவும் புத்திசாலியாகவும் இருப்பதால் போலீஸ் துறை துப்பறியும் நாய் கள் பயிற்சி நிலையத்தில் சேர்த்து பயிற்சி பெற வைக்கிறார். கமிஷனர்  செல்வம் கண்ணியமானவர். அவர் சந்தோஷ் மீது மகன் போல பாசம் கொண்டவர்.  எம்.எல்.ஏ. சாயாஜி, சுந்தர் இருவரும் செய்கின்ற சமூக விரோதச் செயல்களுக்காக சந்தோஷ் அவர்களைக் கைது செய்து லாக்கப் பில் அடைக்கிறார். சாயாஜி, சுந்தர் இருவரும் சந்தோஷின் உதவியாளர்கள் ராஜா, சேகர் இருவரையும் கைக்குள் போட்டுக் கொள்கின்றனர். லாக்கப்பில் இருந்து தப்பித்து விடுகின்றனர். சந்தோஷ் கொதிப்படைகிறார். அவர்களைக் கைது செய்ய தேடிப்போகிறார். ராக்கியும் அவருடன் செல்கிறது. எம்.எல்.ஏ.சாயாஜி, சுந்தர்,…

Read More

குப்பத்து ராஜா படத்தின் சிறப்பு என்ன? – இயக்குநர் பாபா பாஸ்கர் பேட்டி

அவரது நடனம் பார்வையாளர்களால் மிகவும் ரசிக்கப்பட்டு, புகழப்படுபவையாக இருந்தாலும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களால் ‘டான்ஸ் மாஸ்டர்  ‘ என்றே அழைக்கப்படுகிறார் பாபா பாஸ்கர். நவநாகரீக நடன அமைப்புகளை கொடுக்க அவர் பெரும் முயற்சிகள் எடுத்தாலும், உள்ளூர் விஷயங்களை கலந்து கொடுக்கவும் தவறியதில்லை. அதனால் தான் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்த நடன இயக்குனராகவும் இருக்கிறார். பல கொண்டாடப்படும் வெற்றி பாடல்களுக்கு நடனம் அமைத்த பாபா பாஸ்கர், குப்பத்து ராஜா படத்தின் மூலம் இயக்குனராகி இருக்கிறார்.சமீபத்தில் வெளியான குப்பத்து ராஜா டிரெய்லர் ‘லோக்கல்’ பின்னணியை கொண்டிருக்கிறது என்று கூறப்படுகிறது, இது குறித்து பாபா பாஸ்கர் கூறும்போது, “உண்மையில் நான் ‘லோக்கல்’ என்ற வார்த்தையை ஏற்றுக் கொள்ளவில்லை, மாறாக அதை ‘நேட்டிவிட்டி’ என்று தான் அழைப்பேன். நம்மை சுற்றியுள்ள மக்கள் கிராமங்கள் மற்றும் அண்டை மாநிலங்களின் நேட்டிவிட்டியை பார்த்து வியக்கிறார்கள். சேரிகள்…

Read More

வசந்த மாளிகை ட்ரைலர் விழாவில் கலகலப்பு |

1972ல் வெளிவந்து வெள்ளி விழா கொண்டாடிய படம் வசந்த மாளிகை. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாணிஸ்ரீ ஜோடியாக நடித்த காலத்தால் அழியாத காதல் காவியம் ” வசந்த மாளிகை” திரைப்படம். பாலாஜி, சி. ஐ. டி. சகுந்தலா, ஆகியோரும் இதில் நடித்துள்ளனர். அன்றைய கால கட்டத்தில் கலரில் வந்து வெள்ளி விழா கொண்டாடிய படமிது. இதில் கே. வி. மகாதேவன் இசையில், கவியரசு கண்ணதாசன் எழுதிய, “மயக்கம் என்ன” “கலைமகள் கைபொருளே” “இரண்டு மனம் வேண்டும்” “ஏன் ஏன் ஏன் ” ஆகிய பாடல்களை டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி ஆகியோர் பாடி இன்றளவும் அந்த பாடல்கள் சூப்பர் ஹிட்டாக வலம் வந்து கொண்டே இருக்கிறது. இந்த படத்தை அன்று டி. ராமாநாயுடு தயாரிக்க பிரகாஷ்ராவ் இயக்கி இருந்தார். அப்படியாப்பட்ட…

Read More

கிரிமினல் வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

நடக்க இருக்கும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மீதுள்ள குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தால் அதனை செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 17வது மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், வேட்பாளர்களின் குற்ற வழக்குகள் குறித்து செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் குற்ற ஆவணங்களை ஊடகங்களில் விளம்பரப்படுத்த வேண்டும் என கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் தேர்தல் ஆணையம் அறிவித்தது.…

Read More

சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை! – சுப்ரீம் கோர்ட்

தமிழகத்தில் எட்டு வருஷங்களுக்கு முன்னால் தலைப்பு செய்தியில் இடம் பிடித்த ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில், சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்து இன்று காலையில் உத்தரவிட்டுள்ளது. ஜூலை 7ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. சென்னை சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபாலிடம் பணியாற்றியவரின் மகள் ஜீவஜோதி. இவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமார். 2001ல் காணாமல் போனார். அவரது சடலம் கொடைக்கானல் மலையில் கண்டுபிடிக்கப்பட்டது.விசாரணையில், ராஜகோபால், ஜீவஜோதி மீது ஆசைப்பட்டுள்ளார். இதற்காக அவர்கள் இருவரையும் பிரிக்க முயன்றுள்ளார். முடியாததால், சாந்தகுமாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். இதனால் ராஜகோபால் தூண்டுதலால் பிரின்ஸ் சாந்தகுமார் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில், சரவணபவன் ராஜகோபால், டேனியல், கார்மேகம், ஜாகீர் உசேன், பட்டுராஜன்,…

Read More

டி டி வி தினகரனின் பரிசுப் பெட்டி சின்னத்தை எப்படியெல்லாம் பிரபலப்படுத்தறாங்க!

சுப்ரீம் கோர்ட்டில் ஏகப்பட்ட செலவு செய்து தொடர் சட்ட போராட்டத்திற்கு பின், டிடிவி தினகரனின் அ.ம.மு.க.,விற்கு, ‘கிப்ட் பாக்ஸ்’ என்ற பொதுவான சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. லேட்டானாலும் லேட்டஸ்டாக ‘பொது சின்னம்; அதுவும் கிப்ட் பாக்ஸ் கிடைத்தது, எங்கள் அரசியல் வாழ்க்கைக்கு லிப்ட் தரும்’ என தினகரன் தரப்பினர் மகிழ்ச்சியில் உள்ளனர். தமிழகத்தில், 39 லோக்சபா தொகுதிகள்; இடைத்தேர்தல் நடக்கும், 18 சட்டசபை தொகுதிகள்; புதுச்சேரியில், ஒரு லோக்சபா தொகுதி; இடைத்தேர்தல் நடக்கும் ஒரு சட்டசபை தொகுதிக்கும், வேட்பாளரை நிறுத்தி உள்ளார்.தன் கட்சிக்கு, ‘குக்கர்’ சின்னம் கோரி, உச்ச நீதிமன்றத்தில், தினகரன் வழக்கு தொடர்ந்தார். ஆனால், கட்சியை பதிவு செய்யாததால், ‘குக்கர்’ சின்னம் வழங்கும்படி, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட, உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. எனினும், பொது சின்னம் ஒதுக்க, பரிந்துரை செய்தது. இதனால்,…

Read More