டி டி வி தினகரனின் பரிசுப் பெட்டி சின்னத்தை எப்படியெல்லாம் பிரபலப்படுத்தறாங்க!

சுப்ரீம் கோர்ட்டில் ஏகப்பட்ட செலவு செய்து தொடர் சட்ட போராட்டத்திற்கு பின், டிடிவி தினகரனின் அ.ம.மு.க.,விற்கு, ‘கிப்ட் பாக்ஸ்’ என்ற பொதுவான சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. லேட்டானாலும் லேட்டஸ்டாக ‘பொது சின்னம்; அதுவும் கிப்ட் பாக்ஸ் கிடைத்தது, எங்கள் அரசியல் வாழ்க்கைக்கு லிப்ட் தரும்’ என தினகரன் தரப்பினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தமிழகத்தில், 39 லோக்சபா தொகுதிகள்; இடைத்தேர்தல் நடக்கும், 18 சட்டசபை தொகுதிகள்; புதுச்சேரியில், ஒரு லோக்சபா தொகுதி; இடைத்தேர்தல் நடக்கும் ஒரு சட்டசபை தொகுதிக்கும், வேட்பாளரை நிறுத்தி உள்ளார்.தன் கட்சிக்கு, ‘குக்கர்’ சின்னம் கோரி, உச்ச நீதிமன்றத்தில், தினகரன் வழக்கு தொடர்ந்தார். ஆனால், கட்சியை பதிவு செய்யாததால், ‘குக்கர்’ சின்னம் வழங்கும்படி, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட, உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

எனினும், பொது சின்னம் ஒதுக்க, பரிந்துரை செய்தது. இதனால், தினகரன் நிம்மதி அடைந்தார். அ.ம.மு.க., வேட்பாளர்கள் அனைவரும், சுயேச்சைகளாகவே மனு தாக்கல் செய்தனர். தேர்தல் ஆணையம் எந்த சின்னத்தை ஒதுக்கும் என, அ.ம.மு.க.,வினர் மட்டுமின்றி, பிற கட்சியினரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர்.

இந்நிலையில், ஆங்கிலத்தில், ‘கிப்ட் பாக்ஸ்’ என, அழைக்கப்படும், ‘பரிசுப் பெட்டி’ சின்னத்தை, நேற்று முன்தினம் இரவு, தேர்தல் ஆணையம், அ.ம.மு.க.,விற்கு ஒதுக்கியது. அனைவரையும் கவரும் வகையில், தங்களுக்கு இந்த சின்னம் கிடைத்துள்ளதாக, அக்கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அறிவிப்பு வெளியான உடன், தங்கள் சின்னத்தை, விளம்பரப்படுத்தும் பணியை துவக்கினர். சமூக வலைதளங்களில், பரிசுப் பெட்டி சின்னத்தை பிரபலப்படுத்தும் வகையில், பல்வேறு வீடியோக்களை வெளியிட்டுஉள்ளனர்.

ஒரு வீடியோவில், பரிசுப் பெட்டி திறக்க, அதிலிருந்து தினகரன் கும்பிட்டபடி தோன்றுவது போன்ற காட்சி இடம் பெற்றுஉள்ளது. மற்றொரு வீடியோவில், மிகப்பெரிய கட்டடத்தில், போர்த்தப்பட்ட துணியை, ஹெலிகாப்டர் அகற்ற, ‘நமது சின்னம் பரிசுப் பெட்டி’ என்ற வாசகம் மிளிர்கிறது.அதேபோல, ஏற்கனவே வெளியான, ‘டோன்ட் வொரி; பி ஹேப்பி… மாற்றங்கள் ஒன்றேதான் மாறாதடா…’ என்ற பாடலில், பிரபல நடிகர்கள், நடிகையர் பரிசுப் பெட்டியை திறப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த பாடல், அ.ம.மு.க.,வினருக்கு, பிரசார பாடல் போல் அமைந்து விட்டது. அந்த பாடல்களில், நடிகர், நடிகையர் பரிசுப் பெட்டியை திறக்கும் காட்சியை, அ.ம.மு.க.,வினர் தனியே பிரித்தெடுத்து, விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

Related posts

Leave a Comment