டி.ராஜேந்தர் ஆர்.எம்.வீரப்பனுக்கு வெளியிட்ட இரங்கல் செய்தி

மறைந்து விட்ட புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுடைய ஒப்பற்ற உதவியாளராக, சரித்திரம் படைத்த சத்யா மூவிஸ் நிறுவனத்தின் சாதனை படைத்த தயாரிப்பாளராக, பல்வேறு காலகட்டங்களில் அரசியல் களத்தில் போராட்ட வீரராக, அண்ணா திமுகவின் முன்னாள் அரும்பெரும் செயலாளராக, முன்னாள் அமைச்சராக ஒய்வின்றி பணியாற்றிய ஆருயீர் அண்ணன் ஆர்.எம்.விரப்பன் அய்யா அவர்களின் மறைவு மனதிற்கு பெரும் வருத்தத்தை அளிக்கிறது. அவருடைய இழப்பு தமிழ் நல்லுலகிற்கே பெரும் இழப்பாகும். அமரராகிவிட்ட அய்யாவிற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றேன். அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவரது கட்சி தொண்டர்களுக்கும் எனது ஆறுதலை கூறி கொள்கிறேன். இப்படிக்கு, டி. ராஜேந்தர் M.A, தலைவர், இலட்சிய திமுக, தயாரிப்பாளர், இயக்குனர், விநியோகஸ்தர் கௌரவ ஆலோசகர், தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கம்.

Read More

திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (MAA) தலைவராக விஷ்ணு மஞ்சு தொடர பொதுக்குழு ஒப்புதல்

  விஷ்ணு மஞ்சு மற்றும் அவரது தலைமையிலான திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (MAA) நிர்வாகத்தை தொடர பொதுக்குழு ஒப்புதல்! தெலுங்குத் திரைப்படக் கலைஞர்கள் சங்கமான ‘மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷன்ஸ்’ (MAA)-ன் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், தலைவர் விஷ்ணு மஞ்சுவின் மதிப்பிற்குரிய வழிகாட்டுதலின் கீழ் MAA கட்டிடத் திட்டம் முடியும் வரை தற்போதைய தலைமை தொடர்ந்து பணியாற்றும் என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுமார் 400-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துக் கொண்ட இந்த பொதுக்குழு கூட்டத்தில், மே மாதம் திட்டமிடப்பட்ட வரவிருக்கும் தேர்தல்கள், ஜூலை மாதம் திட்டமிடப்பட்ட நிதி சேகரிப்பு நிகழ்வு மற்றும் MAA கட்டிடத்தின் தற்போதைய கட்டுமானப் பணி உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து பேசப்பட்டது. ஆலோசனையின் போது, தலைவர் விஷ்ணு மஞ்சு தலைமையிலான குழுவின் பதவிக்காலத்தை (MAA) கட்டிடம் வெற்றிகரமாக முடிக்கும் வரை நீட்டிக்க…

Read More

‘லவ் டுடே’ வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இணையும் ஏஜிஎஸ் – பிரதீப் கூட்டணி

தென் இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் தயாரித்து, பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த ‘லவ் டுடே’ அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைகிறது. கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிக்கும் இந்த புதிய படத்தை ‘ஓ மை கடவுளே’ புகழ் அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்க பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்கிறார். முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ள இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் தொடங்கி தொடர்ந்து நடைபெறுகிறது. இது ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் நிறுவனத்தின் 26வது படைப்பாகும். கலகலப்பு மிக்க உணர்ச்சிப்பூர்வமான இந்த திரைப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆவார். இணை கிரியேட்டிவ் தயாரிப்பாளராக ஐஷ்வர்யா கல்பாத்தி பங்காற்றுகிறார். லியோன்…

Read More

இயக்குநர் பரம் உடன் தனஞ்ஜெயா இணையும் புதிய படத்தின் பெயர் “கோடீ”

  திரையுலக பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! டாலி தனஞ்செயா நடிக்கும் புதிய படத்திற்கு ‘கோடீ’ என பெயரிடப்பட்டு, டைட்டில் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. கன்னட தொலைக்காட்சியில் தனது புதிய சாதனைக்காக அறியப்பட்டவர் இயக்குநர் பரம். கலர்ஸ் கன்னட சேனலில் கன்னட மண்ணின் பாரம்பரிய கதைகளை வழங்குவதில் அவருக்கு இருந்த விரிவான அனுபவத்திலிருந்து கன்னட மண்ணின் சாரம்சம் நிறைந்த ஒரு கதையை இயக்குநர் பரம் எழுதி இருக்கிறார். யுகாதி பண்டிகையான இன்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘கோடீ’ படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் தயாரிப்பாளர்கள் ‘கோடீ’ எனும் படத்தின் தலைப்பை ஆக்கப்பூர்வமாக வடிவமைத்து வெளியிட்டுள்ளனர். டாலி தனஞ்செயாவின் வசீகரிக்கும் கண்களுடன் சுவாரசியமான அம்சங்களையும் இணைத்து, கதையின் தீவிரத்தையும், ஆழத்தையும் வெளிப்படுத்தும் வகையில் மடிக்கப்பட்ட 500 நோட்டுகளால் கடிதங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. ‘கோடீ’ – ஒரு மில்லியன் கனவுகளை கொண்ட…

Read More