லைகா நிறுவனத்தை விலக சொல்லும் அமேசான் பிரைம்

பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்என்பார்கள் என்பது பழமொழி இது யாருக்குபொருந்துகிறதோ இல்லையோ தமிழ் சினிமாவில் கோடிகளை முதலீடாக்கி படத்தயாரிப்பில் ஈடுபட்டுவரும் லைகா நிறுவனத்திற்கு பொருந்தும் ஐரோப்பிய நாடுகளில் தொலைதொடர்பு தனியார் நிறுவனங்களில் முதல் இடத்தில் இருப்பது லைகா நிறுவனம் இதன் தலைவர் சுபாஷ்கரண் அல்லிராஜா யாழ்பாண தமிழர் தமிழ் சினிமாவின் மீது தீராத காதல் கொண்ட இவரை இந்திய சினிமாவிற்கு அழைத்து வந்தவர் லண்டன் கருணாமூர்த்தி இந்தியா தவிர்த்து வெளிநாட்டில் தமிழ் படங்களை வியாபாரம் செய்வது அல்லது நேரடியாக திரையரங்குகளில் திரையிடுவது என்பதை ஐங்கரன் இண்டர்நேஷனல் தலைவர் கருணாமூர்த்தி தயவு இல்லாமல் செய்ய முடியாது மொபைல் ,மென்பொருள், மருத்துவ துறைகளில் கோடிகளை தினந்தோறும் லாபங்களை குவிக்கும் லைகாவை முதலில் தமிழ் படங்களை தயாரிக்க அறிவுறுத்திய கருணாமூர்த்தி அதற்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்தார் தமிழ் சினிமாவின்…

Read More

கைதி – 2 எப்போது வரும் ?

தமிழ் சினிமாவில்150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான பிகில் படம் வெளியான அன்று 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான கைதி படமும் வெளியானது பிகில் படத்தின் மொத்த வெற்றியும், வசூலும் படத்தின் கதாநாயகன் விஜய் என்கிற ஒற்றை நபரை நம்பி இருந்தது மாநகரம் படத்தின் வெற்றி, அடுத்து விஜய் படத்தை இயக்கபோகும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் தேசிய அளவில் கவனம் பெற்ற, விருதுகளை வென்றஜோக்கர், அருவி படங்களை தயாரித்த டிரீம் வாரியர் நிறுவனத்தின் தயாரிப்பு என்கிற எதிர்பார்புடன் சினிமா ரசிகன் எதிர்பார்த்த படம் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி கைதி வெளியாவதற்கு முதல் நாளே வியாபார அடிப்படையில் சுமார் 25 கோடி ரூபாய் லாபத்தை ஈட்டியிருந்தது பிகில் படத்துக்கு போட்டியாக கைதி படம் தாக்கு பிடிக்குமா என்று அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான S.R.பிரபுவிடம்…

Read More

சிரஞ்சீவியின்ஆக்சிஜன் வங்கி விநியோகத்தை தொடங்கியது

கொரோனா இரண்டாவது அலையில் தடுப்பூசிக்கு அடுத்தபடியாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதி இன்றியமையாதஒன்றாகமாறியுள்ளது திரைப்பட துறையினர் அவரவர் வசதிக்கேற்ப அரசிடம் நன்கொடையும், நேரடியாக நோயாளிகளுக்கு சூழலுக்கு ஏற்ப உதவிகள் செய்து வருகின்றனர் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி செய்ய விரும்பும் நிவாரணம், உதவிகளை அவரே நேரடியாக செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார் இரத்த சேமிப்பு வங்கி மூலம் சேவை செய்து வரும் நடிகர் சிரஞ்சீவி கொரோனா முதல் அலையில் தெலுங்கு திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவிட கொரோனா நெருக்கடி எனும் பெயரில் தொண்டுநிறுவனத்தை தொடங்கி உதவி செய்தார் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி அமுலுக்கு வந்தபோது தெலுங்கு திரைப்பட தொழிலாளர்கள், பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை ஏப்ரல் 22ம் தேதி தொடங்கியவர் 45 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள், பத்திரிகையாளர்கள் தங்கள் மனைவியையும் அழைத்து வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தியதுடன் அதற்கான…

Read More

துக்ளக் தர்பார்சன் டிவி நிபந்தனை

கொடுமை கொடுமை என்று கோவிலுக்கு போனால் அங்கே ஒரு கொடுமை குத்தவச்சு உட்கார்ந்திருந்ததாம் – நெருக்கடியில், கஷ்டப்படுகிறவர்கள் மத்தியில் அடிக்கடி கூறப்படும் பழமொழி இது தமிழ் சினிமாவில் எந்த நிர்வாக தயாரிப்பாளரும் இம்புட்டு பொறுமையாக இருந்து பொருளாதாரநெருக்கடி, விநியோகஸ்தர்களின் நம்பிக்கை துரோகம், நாணயம் இன்மை என அனைத்தையும் சமாளித்து”மாஸ்டர்” படத்தை திரையரங்குகளில் ரீலீஸ் செய்து வெற்றியை ருசித்த சூத்திரதாரி தயாரிப்பாளர் லலித்குமார் 10 க்கும் மேற்பட்ட படங்கள் இவரது தயாரிப்பில் உள்ளது சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு இந்த படங்களில் முடங்கியுள்ளது இத்தனை சிறப்புகள் இருந்தும் சன் தொலைக்காட்சியிடமிருந்து தடையில்லா கடிதம் ஒன்றை வாங்க முடியாமல் தவித்து வருகிறார் லலித்குமார விஜய்சேதுபதி, பார்த்திபன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளதுக்ளக் தர்பார்படத்தைலலித்குமார் தயாரித்திருக்கிறார் கொரோனா ஊரடங்கு காரணமாக நேரடியாக இணையதளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டது படத்தை வியாபாரம்…

Read More

ரத்தம் ரணம் ரௌத்திரம் சாதிக்குமா?

இந்திய சினிமாவில் குறிப்பிட்ட ஒரு மொழி திரைப்படங்களில் சராசரியான ஹீரோக்களாக நடித்து கொண்டிருந்த நடிகர்களை வைத்து முதல் படத்தில் அகில இந்திய ரீதியிலும், அதன் இரண்டாம் பாகத்தில் சர்வதேச ரீதியில் மிகப்பெரிய வெற்றியையும் பெற்ற படமான பாகுபலி, பாகுபலி-2 படங்களை இயக்கியவர் எஸ்.எஸ்.ராஜமெளலி சர்வதேச சினிமா படைப்பாளிகளும், வியாபாரிகளும் ராஜமெளலியின் அடுத்த படம் எது என ஆவலுடன் எதிர்பார்பார்த்திருந்தனர்300 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும்  ரத்தம் ரணம் ரெளத்திரம்( RRR) இப்படத்தை DVV எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் இயக்கி முடித்திருக்கிறார் எஸ்.எஸ்.ராஜமெளலி ஆந்திராவின் இரண்டு புகழ் பெற்ற சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீத்தாராம், கோமரம் பீம்மா இருவரின் வாழ்க்கையையும் அடிப்படையாகக் கொண்டு 1920-களின் பின்னணியில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் அல்லூரி சீதாராமாக நடிகர் ராம் சரணும், கோமரம் பீம்மாக நடிகர் ஜுனியர் என்.டி.ஆரும் ‘ஆர்.ஆர்.ஆர்’…

Read More

வைரமுத்துவுக்கு விருது வழங்க நடிகை பார்வதி எதிர்ப்பு

கேரள மாநிலம் இந்தியாவின் பிற மாநிலங்களில்இருந்து வித்தியாசமானது கலை, பண்பாடு, கலாச்சாரம், அரசியல் முடிவு என அனைத்திலும் தனித்தன்மையை இழக்காமல் பாதுகாக்க போராடும் போர்க்குணமிக்கவர்கள் மலையாளத்தை தாய்மொழியாக கொண்ட மலையாளிகள் இந்த விஷயத்தில் போராடக்கூடியவர்களை அந்த மாநிலத்தில் எந்த கட்சி ஆளுங்கட்சியாக இருந்தாலும் எந்த வகையிலும் பழிவாங்கவோ, தொழில்முறையில் இடையூறு செய்வதோ கிடையாது அதனால்தான் கலை, கலாச்சாரம், பண்பாடு, மொழி இது சம்பந்தமான நிகழ்வுகள், முடிவுகளில் நியாயமான கலகக்குரல் எழுப்ப திரைப்பட துறையினர்தமிழகம் போன்று பதுங்குவதும் இல்லைபயப்படுவதும் இல்லை தமிழ் திரைப் பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்துவுக்கு விருது அறிவித்ததற்காக தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்த மலையாள நடிகை பார்வதி எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ளார் ஞானபீட விருது பெற்றவரும்பிரபலமலையாள கவிஞரும், பாடலாசிரியருமான ஓ.என்.வி.குறுப் அவரின் பெயரில் 2017ம் ஆண்டு முதல் ஓ.என்.வி. இலக்கிய விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருது…

Read More

நடிகர் சங்கத்துக்கு உதவுங்கள்- பூச்சி முருகன்

இந்திய சினிமாவில் இந்தி, தெலுங்கு மொழி சினிமா துறைக்கு அடுத்தபடியாக அதிக முதலீடு செய்யக்கூடியது தமிழ் திரைப்படத்துறை வருடந்தோறும் படங்கள் தயாரிப்பு செலவில் 60% சதவீதம் நடிகர்களுக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது. பிற மொழிகளில் அந்தந்த மாநிலங்களில் சங்கங்கள் தொடங்கப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் கட்டிடங்கள், வருமானம் வரக்கூடிய வணிக வளாகங்கள் உள்ளன. இது போன்ற பேரிடர் காலங்களில், வேலைவாய்ப்பு இல்லாத நாட்களில் வெளியார் நன்கொடை, உதவிகளை எதிர்பார்க்காமல் தனது உறுப்பினர்களை பாதுகாக்கின்றனர் பாரம்பர்யம் மிக்கதென்னிந்திய நடிகர்கள் சங்கம் மட்டுமே இது போன்ற பேரிடர் காலங்களில் தங்கள் உறுப்பினர்களுக்கு உதவ கௌரவ பிச்சையாக நன்கொடை, உதவிகளை எதிர்பார்க்கும் நிலையில் உள்ளது பெயரளவில் தென்னிந்திய நடிகர்கள் சங்கமாக இருக்கின்ற இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் நாடக நடிகர்களும், தமிழ் படங்களில் நடிக்கும் நடிகர்கள் மட்டுமே. தெலுங்கு,மலையாள, கன்னட படங்களில் நடிக்கும்…

Read More

சினிமா படப்பிடிப்புகள் ஒத்திவைப்பு?

தமிழ் சினிமாவில் படப்பிடிப்பை நடத்தலாம் என நடிகர்களை அழைத்தால் கொரோனா முழுமையாக முடிவுக்கு வரட்டும் என்று முன்ணனி நடிகர் நடிகைகள் மறுத்து விட்டனர் புதிய படங்களின் படப்பிடிப்பை தொடங்கலாம் என தயாரிப்பாளர்கள் முயற்சி எடுத்தால் பைனான்சியர்கள் கடன் தரதயாராக இல்லை பணம் திரும்ப கிடைப்பதற்கான எந்த வழிவகையோ, உத்திரவாதமோ இங்கு இல்லை இது தான் தமிழ்சினிமா தயாரிப்பு பிரிவின் உண்மைநிலை தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்புகள் மட்டுமே எல்லா தரப்புக்கும் லாபகரமான இருந்து வருகிறதுகொரோனா இரண்டாம் அலை தீவிரமானதால்தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இன்று முதல்(15.05.2021) மேலும் சில கட்டுப்பாடுகளைதீவிரப்படுத்தியுள்ளது.  இதனிடையே படப்பிடிப்புகளுக்கு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தி கொள்ள அதிமுக ஆட்சிகாலத்தில் அனுமதி வழங்கப்பட்டு இருந்ததுஇந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்படிப்புகள் வரும் மே 31ஆம்தேதிவரைரத்துசெய்யப்படுவதாக தென்னிந்தியதிரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பின் தலைவரும், இயக்குநருமான…

Read More

கொரோனா நிவாரண நிதி வழங்கிய சூர்யா, அஜீத்குமார், உதயநிதி

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவிட் தொற்றின் இரண்டாவது அலையால் நமது மாநிலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது, அதற்காக அனைவரும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாரளமாக நன்கொடை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், பேரிடர் காலத்தில் பொதுமக்கள் அளிக்கக்கூடிய நன்கொடைகள் அனைத்தும், ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் சேமிப்பு நிலையங்கள் அமைத்தல், ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளை அமைத்தல், ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள், ஆர்.டி.பி.சி.ஆர். கிட்டுகள், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் போன்ற கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு மட்டுமே முழுமையாகப்பயன்படுத்தப்படும். மேலும், மேற்கூறிய நடவடிக்கைகளுக்காக பெறப்பட்ட நன்கொடை விவரங்கள் மற்றும் இந்த நிதியிலிருந்து…

Read More

இந்தியன் – 2 பஞ்சாயத்து உண்மை நிலவரம் என்ன?

கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் 1996-ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றி”_பெற்ற திரைப்படம் ‘இந்தியன் 21 ஆண்டுகளுக்குப்பிறகு இந்தப் படத்தின் இரண்டாம் பாகம்எடுப்பது என முடிவெடுக்கப்பட்டது. 2017 பிக்பாஸ் இறுதிநாள் நிகழ்ச்சியின்போது மேடையில் வைத்து இதனை அறிவித்தார் கமல்ஹாசன். இந்த அறிவிப்பின்போது இயக்குநர் ஷங்கர் மற்றும் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு உடன் இருந்தார்கள். ஆனால், படத்தின் பட்ஜெட் அதிகமாக இருப்பதாக கூறி தில் ராஜு தயாரிப்பில் இருந்து ஒதுங்கிகொண்டார் சுபாஸ்கரனின் லைகா நிறுவனம் ‘இந்தியன் – 2’ படத்தைத் தயாரிக்க முன்வந்தது பட்ஜெட் அதிகம் என கூறி எந்த தயாரிப்பாளர் இந்தியன்-2 தயாரிப்பில் இருந்து விலகி கொண்டாரோ அதே தில்ராஜு தயாரிக்கும் தெலுங்கு படத்தை இயக்குவதற்கு நான்கு வருடங்கள் கழித்து ஒப்பந்தம் செய்து ஷங்கர் தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது இதனால் இந்தியன்-2 படத்தை முடித்துக் கொடுக்காமல் ஷங்கர்…

Read More