குடும்பஸ்தன் – திரை விமர்சனம்

நாயகன் மணிகண்டனும் நாயகி ஷான்வியும் காதலர்கள். இருவரும் வேறு வேறு சாதி என்பதால் இரு வீட்டார் தரப்பிலும் இந்த காதலுக்கு எதிர்ப்பு கிளம்ப, ஒரு கட்டத்தில் காதல் ஜோடிகள் ஓடிப்போய் பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார்கள். சம்பாதிக்கும் மகனை பகைத்துக் கொள்ள விரும்பாத நாயகனின் பெற்றோர் ஒரு வழியாக இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். இருந்தாலும் தங்கள் வீட்டில் இருக்கும் மருமகளை நாசூக்காக அவ்வப்போதுமாமியார் இடித்துரைப்பதும் நடக்கிறது. திருமணம் ஆகி குடும்பஸ்தன் ஆகிவிட்டபோதிலும் பெற்றோரையும் கவனிக்கும் நிலையில் இருக்கிறார் மணிகண்டன். அப்பாவுக்கு பழைய வீட்டை இடித்து புது வீடு கட்ட வேண்டும் என்பது ஆசை. அம்மாவுக்குa ஆன்மீக டூர் போக வேண்டும். இது போக திருமணமாகிவிட்ட அக்காவுக்கும் சில தேவைகள். இதனால் ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டு இருக்கிறார் மணிகண்டன். மகிழ்ச்சியான இல் வாழ்க்கையில் கர்ப்பமாகிறாள் மனைவி. இப்போது…

Read More

ரசிகர்களுக்கு சப்ரைஸ் தர்ந்த ஸ்ருதிஹாசன் – பாங்காக் உள்ளூர் இசைக் குழுவுடன் அசத்திய ஸ்ருதி ஹாசன்!

உள்ளூர் இசைக் குழுவுடன் எதிர்பாராத விதமாக இணைந்து ஸ்ருதிஹாசன் நடத்திய இசை நிகழ்ச்சி ரசிகர்களை உற்சாகமடைய செய்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘கூலி’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக தற்போது தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக் நகரில் படக்குழுவினருடன் ஸ்ருதிஹாசன் முகாமிட்டிருக்கிறார். முன்னணி நட்சத்திர நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன் திட்டமிடப்படாத ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். படப்பிடிப்பில் தன் பங்களிப்பை நிறைவு செய்த பிறகு ஸ்ருதி ஹாசனும், அவருடைய குழுவினரும் நகரத்தை வலம் வந்தனர். அந்தத் தருணத்தில் அங்கு நேரடியாக இசை நிகழ்ச்சி நடத்தும் கலை அரங்கத்தை பார்வையிட்டனர். பரபரப்பான சூழ்நிலையும், நேரடியாக இசைக் குழுவின் இசை நிகழ்ச்சியை முழுமையாக ரசிக்கும் கூட்டமும் அங்கு இருக்க .. மகிழ்ச்சி அடைந்த ஸ்ருதிஹாசன் அவர்களை ஊக்குவிப்பதற்காக மேடை ஏறினார். அவருடைய இந்த…

Read More