லைகா நிறுவனத்தை விலக சொல்லும் அமேசான் பிரைம்

பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்என்பார்கள் என்பது பழமொழி இது யாருக்குபொருந்துகிறதோ இல்லையோ தமிழ் சினிமாவில் கோடிகளை முதலீடாக்கி படத்தயாரிப்பில் ஈடுபட்டுவரும் லைகா நிறுவனத்திற்கு பொருந்தும்

ஐரோப்பிய நாடுகளில் தொலைதொடர்பு தனியார் நிறுவனங்களில் முதல் இடத்தில் இருப்பது லைகா நிறுவனம் இதன் தலைவர் சுபாஷ்கரண் அல்லிராஜா யாழ்பாண தமிழர் தமிழ் சினிமாவின் மீது தீராத காதல் கொண்ட இவரை இந்திய சினிமாவிற்கு அழைத்து வந்தவர் லண்டன் கருணாமூர்த்தி

இந்தியா தவிர்த்து வெளிநாட்டில் தமிழ் படங்களை வியாபாரம் செய்வது அல்லது நேரடியாக திரையரங்குகளில் திரையிடுவது என்பதை ஐங்கரன் இண்டர்நேஷனல் தலைவர் கருணாமூர்த்தி தயவு இல்லாமல் செய்ய முடியாது மொபைல் ,மென்பொருள், மருத்துவ துறைகளில் கோடிகளை தினந்தோறும் லாபங்களை குவிக்கும் லைகாவை முதலில் தமிழ் படங்களை தயாரிக்க அறிவுறுத்திய கருணாமூர்த்தி அதற்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்தார்

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகன் விஜய் நடித்த கத்தி (2014) படம்தான் இந்த நிறுவனத்துக்கு முதல் படம் அதனை தொடர்ந்து தமிழில் வியாபார முக்கியத்துவமுள்ள தனுஷ், சூர்யா, சிலம்பரசன், நயன்தாரா, ரஜினிகாந்த் ஆகியோர் நடிப்பில் 12 படங்கள் வரை தயாரித்துள்ள லைகா நிறுவனத்திற்கு எந்த படம் மூலமாகவும் லாபம் கிடைக்கவில்லை

இந்த நிறுவனம் தயாரித்த படங்களின் குறைந்தபட்ஜெட் 15 கோடி ரூபாய் அதிக பட்ஜெட் 200 கோடி ரூபாய் ஏதாவது ஒரு படத்தின் மூலம் வெற்றியின் சுவையை ருசித்துவிடலாம் என காத்திருந்த சுபாஷ்கரண் அல்லிராஜாவுக்கு ஏமாற்றமே கிடைத்தது

அவர் நம்பிய நிர்வாகிகள் அவரை ஏமாற்றினார்கள், தவறாக வழிநடத்துகிறார்கள் என்கிற புகார் எழுந்தாலும் தயாரிப்பை தொடர்ந்தவருக்கு 2020 மார்ச் முதல் நெருக்கடிகள் அதிகரித்து வருகிறது கேரள மாநிலத்தில் உள்ள திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் லைகா நிறுவனம் தயாரிக்கும் படங்களை விலைக்கு வாங்கவோ திரையிடவோ கூடாது என தனது உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியதுகாரணம் லைகா நிறுவனம் தயாரித்த, ரஜினிகாந்தின் தர்பார், 2.0 மற்றும் சூர்யாவின் காப்பான் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தராததால் இந்த முடிவுஎடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோன்று லைகா பெரிதும் நம்பிக்கொண்டிருந்த இந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதம், விபத்து அதனால் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது

கொரோனா ஊரடங்கு முடிந்து படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டபோது படத்தின் நாயகன் கமல்ஹாசன் அரசியல், தேர்தலில் போட்டி என களமிறங்கியதால் நின்றுபோன படப்பிடிப்பை தொடங்க முடியவில்லை

இதற்கிடையில் இயக்குனர் ஷங்கர் தெலுங்கு, இந்தி படங்களை இயக்குவதற்கு புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு பணிகளை தொடங்க முயற்சித்தபோது லைகா ஷங்கருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது பிரச்சினையை வெளியில் பேசி முடித்து கொள்ள நீதிமன்றம் அறிவுறுத்தியும் பிரச்சினை முடிவுக்கு வந்து சமரசமாகவில்லை இதனிடையில் தேர்தல் முடிந்து கமல்ஹாசன் இருதரப்பிடமும் பேசி படப்பிடிப்பை முடித்து தர ஏற்பாடு செய்வார் என எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் அவரது சமரச ஏற்பாடு பலன்தரவில்லை நீதிமன்ற முடிவுக்காக ஷங்கர் – லைகா தரப்பு காத்திருக்கிறது

தமிழ் படம் தவிர்த்து இந்தி படங்கள் தயாரிக்கும் முயற் சியில் நேரடியாக ஈடுபடாமல் சர்வதேச வியாபார அணுகுமுறையுடன்அக்‌ஷய் குமார் நடிக்கும்  ராம்சேது படத்தை அமேசான் பிரைம் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது மார்ச் மாதம் ராம்சேது படத்திற்கான பூஜை உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் நடந்தது.

அக்‌ஷய் குமார் மற்றும் படக்குழுவினர் அனைவரும் பூஜையில் கலந்து கொண்டனர்அபிஷேக் சர்மா இயக்கும்.இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கப்பட்டபோது அக்‌ஷய்குமார் கொரோனா பாதிப்புக்கு ஆளானதால் படப்பிடிப்புநிறுத்தப்பட்டது

அமேசான் – லைகா நிறுவனங்களுக்கு இடையிலானஒப்பந்தபடி லைகா நிறுவனம்  கொடுத்தகாசோலைகள்வங்கிகணக்கில்பணமில்லாமல் திரும்பியுள்ளது கண்டஅதிர்ச்சி அடைந்த அமேசான் நிறுவனமும், படக்குழுவும் நாகரிகமாக லைகா நிறுவனத்தை தயாரிப்பில் இருந்து விலகிக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்இதற்காக சட்டரீதியான நடவடிக்கைகள் லைகா நிறுவன சம்மதத்துடன் கூட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன

தமிழில் கோடிக்கணக்கில் நஷ்டத்தையும் சோதனைகளையும் எதிர்கொண்டுவரும் லைகா நிறுவனத்திற்கு இந்தியிலும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது இதற்கு என்ன காரணம் என தமிழ் சினிமா வட்டாரத்தில் விசாரித்தபோது.கோடிகளில் பணம் முதலீடு செய்யும் வசதி, முன்னணி நடிகர்கள் கால்ஷீட் கிடைத்தும் வணிகரீதியாக வெற்றிபெற முடியாமல் போனதற்கு காரணம் மோசமான நிர்வாகம், வழக்கமாக கோடம்பாக்கத்தில் இருக்கும் நம்பிக்கை துரோகம் அதனால்தான் வெளிநாடுவாழ் இந்திய தமிழர்கள் தமிழ் சினிமாவில் முதலீடு செய்ய தயங்குகின்றனர் என்கின்றனர்

Related posts

Leave a Comment