நடிகர் தனுஷ் வெளியிட்ட வ்யோம் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு எண் 1 – படத்திற்கான தலைப்பு: மனிதன் தெய்வமாகலாம்

தமிழ் திரைப்பட ரசிகர்களுக்காக தயாராகி வரும் வ்யோம் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் புதிய திரைப்படத்தின் தலைப்பை இன்று நடிகர் தனுஷ் அவர்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டார். இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், திருமதி விஜயா சதீஷ் அவர்கள் தயாரிக்கும் இந்தப்படம் *”மனிதன் தெய்வமாகலாம்”* எனப் பெயரிடப்பட்டுள்ளது. தலைப்பு வெளியீடு படக்குழுவிற்கும், நண்பர்களிற்கும் கொண்டாட்ட தருணமாக அமைந்துள்ளது.

இயற்கையும் அமைதியும் சூழ்ந்துள்ள ஒரு கிராமத்தில் நிகழும் பெரும் சோகம் அதன் ஒற்றுமையை சிதைக்கிறது. அதனைத் துடைத்தெறிய மக்கள் மனவலிமையில் போராடும் நாயகன், தனது கிராமத்தைக் காப்பாற்ற எடுக்கும் தீர்மானம், அவனை அங்கு தெய்வமாக உயர்த்துகிறது. இதுவே படத்திற்கான அற்புதமான தலைப்பை உருவாக்கியது.

இந்தப்படத்தில் புகழ்பெற்ற இயக்குநர்-நடிகர் செல்வராகவன் முன்னணியில் நடிக்கிறார். அவருக்கு இணையாக குஷி ரவி, வை.ஜி. மகேந்திரன், மைம் கோபி, கௌசல்யா, சதீஷ், லிர்திகா, என். ஜோதி கண்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தயாரிப்பாளர் குறிப்பு
“எங்கள் படத்திற்கான தலைப்பை ‘மனிதன் தெய்வமாகலாம்’ என அறிமுகப்படுத்திய தனுஷ் சார் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவருடைய அன்பான செயல் எங்கள் பயணத்திற்கு பேருந்தூண்டுகோல் மற்றும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
இப்படம் நம்பிக்கையை, தியாகத்தையும், ஒரு நிலமும் அதன் மக்களும் கொண்ட ஆன்மீக பந்தத்தையும் பேசுகிறது. விரைவில் மேலும் பல விபரங்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்போம். முதல் நாள் முதல் எங்களோடு இருந்த நடிகர், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நண்பர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.”
— விஜயா சதீஷ், தயாரிப்பாளர்

இயக்குநர் குறிப்பு
“இயற்கையும் அமைதியும் சூழ்ந்த ஒரு கிராமத்தின் ஒற்றுமையை சிதைக்கும் பேரிடர், அதில் சிக்கிக் கொள்ளும் நாயகனை தனது மக்களை காப்பாற்ற ஒரு முடிவெடுக்கச் செய்கிறது. அவர் எடுக்கும் அந்த முடிவே, அவனை அக்கிராம மக்களின் தெய்வமாக மாற்றுகிறது. அதனால்தான் இப்படத்திற்கு ‘மனிதன் தெய்வமாகலாம்’ எனப் பெயரிட்டுள்ளோம்.”
— டென்னிஸ் மஞ்சுநாத், இயக்குநர்

Related posts

Leave a Comment