வசந்த மாளிகை ட்ரைலர் விழாவில் கலகலப்பு |

1972ல் வெளிவந்து வெள்ளி விழா கொண்டாடிய படம் வசந்த மாளிகை. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாணிஸ்ரீ ஜோடியாக நடித்த காலத்தால் அழியாத காதல் காவியம் ” வசந்த மாளிகை” திரைப்படம். பாலாஜி, சி. ஐ. டி. சகுந்தலா, ஆகியோரும் இதில் நடித்துள்ளனர்.

அன்றைய கால கட்டத்தில் கலரில் வந்து வெள்ளி விழா கொண்டாடிய படமிது. இதில் கே. வி. மகாதேவன் இசையில்,
கவியரசு கண்ணதாசன் எழுதிய,

“மயக்கம் என்ன”

“கலைமகள் கைபொருளே”

“இரண்டு மனம் வேண்டும்”

“ஏன் ஏன் ஏன் ”

ஆகிய பாடல்களை டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி ஆகியோர் பாடி இன்றளவும் அந்த பாடல்கள் சூப்பர் ஹிட்டாக வலம் வந்து கொண்டே இருக்கிறது.

இந்த படத்தை அன்று டி. ராமாநாயுடு தயாரிக்க பிரகாஷ்ராவ் இயக்கி இருந்தார்.

அப்படியாப்பட்ட படத்தை வி.சி.குகநாதன் மேற்பார்வையில் ராமு டிஜிட்டலில் மாற்றினார். நாகராஜா அதை வாங்கி பிரம்மாண்டமான முறையில் சத்யம் திரையரங்கில் ட்ரெயிலர் வெளியீட்டு விழா நடத்தினார்.

45 வருடங்கள் கழித்து நடைபெற்ற இந்த விழாவில் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் , தம்பி சண்முகத்தின் மகன் கிரி , இயக்குனர்கள் வி.சி.குகநாதன் . எஸ்.பி.முத்துராமன், சித்ரா லட்சுமணன் பின்னணி பாடகி பி சுசீலா, நடிகை ஜெயா குகநாதன் . வினியோகஸ்தர் நாகராஜா. பி.ஆர். ஓ.யூனியன் தலைவர் விஜயமுரளி, டிஜிட்டல் ராமு ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிவாஜியை Uற்றிய தங்களது மலரும் நினைவுகளை அனைவரும் நினைவுபடுத்தி கலகலப்பாக பேசினர்.

விழாவில் தமிழகம் முழுவதிலிருந்தும் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment