கொலை சேவல் – விமர்சனம்

 

கதை…

கலையரசன் & தீபா இருவரும் கணவன் மனைவி.. ஒன்பது மாதம் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போது இவர்களின் குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் சாமி கும்பிட செல்கின்றனர்..

அங்கு ஒரு காட்டுப் பகுதிக்கு செல்லும்போது தீபாவுக்கு ஒரு அச்ச உணர்வு ஏற்படுகிறது.. ஏதோ தமக்கு தவறு நடக்கப் போகிறதோ என்ற மனநிலை வருகிறது..

அந்த காட்டுப்பகுதியில் என்ன நடந்தது.? தீபாவின் மனநிலை அப்படி மாறுவது ஏன்.?கலையரசன் என்ன செய்தார்?என்பதெல்லாம் திகிலூட்டும் கிளைமாக்ஸ்..

நடிகர்கள்…

KALAIYARASAN – காளி
DEEPA BALU – அனுசுயா
BALA SARAVANAN – குமார்

கலையரசன் & தீபா பாலு இருவரும் தம்பதிக்கு பொருத்தமான தேர்வு.. நடிப்பில் நல்ல ஒரு மெச்சூரிட்டி…. நண்பராக வரும் பால சரவணன் ஆங்காங்கே கொஞ்சம் காமெடி செய்திருக்கிறார்.. ஆனால் படத்தின் நீளத்தை நீட்டிக்க இவரின் காமெடி தேவைப்பட்டதா ?

GAJARAJ – தாஸ்
VIJAY SATHYA – மூர்த்தி
AADHAV CHANDRA – அன்பு
AKARAN VENKAT – சந்திரன்
VIJAYALAKSHMI – லஷ்மி
JAYALAKSHMI – தேவி
RAJAMANI – சித்தன்
DHANALAKSHMI – தனம்
MANJULA – மோகனா
KAYAL – மீனா
MANIMEKALAI – மணிமேகலை

தொழில்நுட்ப கலைஞர்கள்..

Banner : RP Films
Produced by : R.P.Bala – Kousalya Bala
Directed by : VR. Thudhivaanan
Cinematographer : P.G.Muthiah
Music : Santhan
Editor : Ajay Manoj
Art Director : Saravana Abhiraman

Make-Up : Pandian
Costumer : Balaraman
VFX : Vijay
PRO : Nikil Murukan

சந்தன் இசையமைக்க பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.. இவர்கள் இருவரும் இந்த படத்திற்கு பெரிய பலம்.. இவர்களின் பணியை பாராட்டாமல் இந்த விமர்சனத்தை நிறைவு செய்ய முடியாது..

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான பல படங்களுக்கு தமிழில் வசனம் எழுதியவர் ஆர் பி பாலர். இவர் தயாரித்துள்ள படம் தான் இந்த கொலை சேவல்.. முதலில் டாக்குமென்ட்ரி படத்தை பார்ப்பது போன்ற உணர்வே வருகிறது.. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்தில் படத்தை முடித்திருப்பு சிறப்பு.. ஆனால் இப்படி ஒரு கிளைமாக்ஸ் தேவையா என்ற கேள்வி எழுகிறது..

துதிவானான் என்பவர் இயக்கி இருக்கிறார்.. முதலில் கதை எதை நோக்கி செல்கிறது என்பது இடைவேளை வரை புரியாமல் இருக்கிறது.. இடைவேளைக்கு பின்னே திரைக்கதை வேகம் எடுக்கிறது..

ஆனால் இப்படி ஒரு கிளைமாக்ஸ் வைத்து பெண்களை கலக்க கண்கலங்க வைத்து விட்டார் இயக்குனர்.. சாதி வெறி ரத்த கலவரத்துடன் முடிகிறது..

Related posts

Leave a Comment