பெண்கள் கழிவறைக்குள் தெரியாமல் நுழைந்துவிடும் இரண்டாம் ஆண்டு படிக்கும் மனோவைக் கல்லூரியை விட்டு நீக்குகின்றனர். அதனால் இறுதியாண்டு படிக்க வேற கல்லூரிக்குச் செல்ல வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது. இருபாலர் படிக்கும் கல்லூரியாக மாற்றம் பெறும் பெண்கள் கல்லூரியில், ஒரே ஒரு ஆண் மாணவனாகச் சேருகிறான் மனோ. கோவையிலுள்ள அக்கல்லூரியில், கொடி எனும் பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு, அது காதலாக மாறுகிறது. ஆனால், ஓவர் பொசஸிவாக இருக்கும் மனோவின் குணத்தால், அந்தக் காதல் முறிகிறது. கல்லூரி முடிந்து, மனோ சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறான். அந்நிறுவனத்தில் சேரும் நிவி எனும் நிவேதாவுடன் மெல்ல காதல் மலருகிறது. நிவேதாவின் முன்னாள் காதலில், காதலனின் டாக்ஸிக்கான குணத்தால் பாதிக்கப்பட்டிருப்பார். மனோவோ, முந்தைய காதலில் தான் செய்த தவற்றை மீண்டும் செய்யக் கூடாது என மெச்சூர்டாக மாறத் தொடங்கியிருப்பார். எனினும் அவர்களது காதலில்…
Read MoreDay: October 26, 2026
சட்டமும் நீதியும் 2 – விமர்சனம்
இன்ஸ்பெக்டர் கனகவேல் தற்கொலை செய்து கொண்டார் எனக் காவல்துறை ரிப்போர்ட் அளிக்க, அது தற்கொலை அல்ல கொலை என்று வழக்கு தொடுக்கிறார் கனகவேலின் மனைவி சந்திரா. கனகவேலுடன் ஸ்டேஷனில் பணி புரியும் நான்கு காவலர்கள் மேல் புகார் அளிக்கிறார் சந்திரா. குற்றம் சாட்டப்பட்ட நால்வருக்கு ஆதரவாக வக்கீல்கள் யாரும் வாதாடக் கூடாதென பார் கவுன்சிலில் தீர்மானம் எட்டப்படுகிறது. ஏனென்றால் சந்திரா தான் பார் கவுன்சிலரின் தலைவர். குற்றவாளிக்குக் கூட வக்கீல் வைத்துக் கொள்ளும் உரிமையைச் சட்டம் அளித்து இருக்கும் பொழுது, ஒரு நிரபராதிக்காக வாதாட யாரையும் அனுமதிக்காதது எந்த வகையில் நியாயமாகும் என இப்ராஹிமின் மனைவி பானு, வக்கீல் சுந்தரபாண்டியனைக் கேட்கிறார். அக்கேள்வியின் கனம் உலுக்க, சுந்தரபாண்டியன் பார் கவுன்சிலை எதிர்த்து அவ்வழக்கை எடுத்துக் கொள்கிறார். சந்திரா, சி.பி.ஐ. விசாரணை கோர, சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT)…
Read More