கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக திரையுலகினர் பலரும் முதல்வரின் பொது நிவாரணத்திற்கு நிதி உதவி அளித்து வருகின்றனர். நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான தியாகராஜன், இவரது மகனும், நடிகருமான பிரசாந்த் ஆகிய இருவரும் சென்னையில் இன்றுமுதல்வர் ஸ்டாலினை சந்தித்து ரூ.10 லட்சம் நிதி வழங்கி உள்ளனர். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தியாகராஜன் முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் கொரோனா தொற்றை தடுக்கும் முயற்சியில் தமிழ்நாடு அரசு கடுமையாக போராடி வருகிறது முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளோம் முதல்வரின் வேகம் சிறப்பாக உள்ளதுடன் செயல்பாடுகள் பெருமைக்குரியதாக, சிறப்பாக இருக்கிறது கலைஞர் அவர்களுடன் படத்தில் பணியாற்றியிருக்கிறேன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பணிகள் கலைஞர் கருணாநிதியை எனக்கு நினைவூட்டுகிறது என்றார்
Related posts
கெளரவ டாக்டர் பட்டம் பெற்ற வி.ஐ.டி பல்கலைக்கழக நிறுவனர்
இந்தியக் கல்வி வளர்ச்சியில் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் வேந்தருமான டாக்டர் கோ.விஸ்வநாதன் ஐயா அவர்கள் ஆற்றிய சேவையைப் பாராட்டி அமெரிக்காவின் பிங்ஹாம்டன் ...டி.ராஜேந்தர் ஆர்.எம்.வீரப்பனுக்கு வெளியிட்ட இரங்கல் செய்தி
மறைந்து விட்ட புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுடைய ஒப்பற்ற உதவியாளராக, சரித்திரம் படைத்த சத்யா மூவிஸ் நிறுவனத்தின் சாதனை படைத்த தயாரிப்பாளராக,...மிக்ஜம் புயலால் பாதித்த தங்கள் குடியிருப்புவாசிகளுக்கு நிவாரண உதவி அளித்த சின்னத்திரை நடிகர் பாலா
தன் குடியிருப்பைச் சுற்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 லட்சம் நிதியுதவி அளித்த விஜய் டிவி புகழ் பாலா!! தமிழ் சின்னத்திரை புகழ்...