ஹரீஷ் கல்யாண் ஜோடியான ரெபா மோனிகா ஜான்!

நவநாகரீக தோற்றமும், பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றமும் ஒரு சில  நடிகைகளுக்கு மட்டுமே வாய்த்த ஒரு அம்சம். ரெபா மோனிகா ஜான் இந்த இரு அம்சங்களிலும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நேர்த்தியாக நடிக்கிறார். நிவின் பாலியின் ஜாக்கோபிண்டே ஸ்வர்க்கராஜ்ஜியம் படத்திற்கு பிறகு அவரது புகழ் கேரளா தாண்டியும் பரவலாகி இருக்கிறது. தென்னிந்திய மொழிகளில் கணிசமான படங்களில் நடித்து வரும் ரெபா, தற்போது ஹரீஷ் கல்யாணின் தனுசு ராசி நேயர்களே படத்திலும் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தின் இன்னொரு நாயகியாக ரியா சக்ரவர்த்தியை சமீபத்தில் அறிவித்தது படக்குழு என்பது குறிப்பிடத்தக்கது. 

இது குறித்து ரெபா மோனிகா ஜான் கூறும்போது, “இந்த கதாபாத்திரத்தில் நடிக்க என்னை பரிசீலித்த தயாரிப்பாளருக்கும், இயக்குனர் சஞ்சய் பாரதிக்கும் நன்றி. தயாரிப்பாளர் மலையாளத்தில் நான் நடித்த படங்களை பற்றி அறிந்திருக்கிறார். அதனால் இந்த கதாபாத்திரத்திற்கு நான் பொருத்தமாக இருப்பதாக உணர்ந்திருக்கிறார். அதே நேரத்தில், இயக்குனர் சஞ்சய் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க, என்னை தான் மனதில் நினைத்திருந்தார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. உண்மையில், நான் இதுவரை செய்த படங்களுடன் ஒப்பிடும்போது இந்த படம் முற்றிலும் புதியதாக இருக்கும். தனுசு ராசி நேயர்களே குடும்பத்துடன் ரசிக்கும் காதல், நகைச்சுவை கலந்த ஒரு பொழுதுபோக்கு படம். சஞ்சய் எனக்கு கதையை விளக்கி கூறியபோது அது மிகவும் ஜாலியாக இருந்தது. இந்த குழுவில் ஒரு சிறந்த அனுபவத்தை எதிர்பார்க்கிறேன். குறிப்பாக, ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

ஸ்ரீகோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி நடந்து வருகிறது. குறுகிய காலத்தில் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

Related posts

Leave a Comment