விவசாயத்தையும் விவசாயிகளின் முக்கியத்துவத்தைப் பற்றியும் சொல்ல வரும் ‘ஐ.ஆர்.8’ படம்|!

பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் ஜே.கே. இண்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘ஐ.ஆர்.8’.இந்தப் படத்தில் அனீபா, விஷ்வா இருவரும் கதாநாயகர்களாகவும் பிந்து கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், ஆர்.வி.தம்பி, ஜெயக்குமார்.T, அப்புக்குட்டி, கராத்தே ராஜா, பாபு, ராஜேஷ், கவிதா, சுப்புராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஓளிப்பதிவு – கே.வி.மணி, பாடல்கள், இசை – கோண்ஸ், படத் தொகுப்பு – B.S.வாசு, சண்டை இயக்கம் – ‘நாக் அவுட்’ நந்தா, தயாரிப்பு : ஜெயக்குமார்.T, ஆயிஷா, அக்மல், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – என்.பி. இஸ்மாயில்.

‘சிங்க முகம்’, ‘சொல்ல மாட்டேன்’, ‘வாங்க வாங்க’ போன்ற படங்களை தொடர்ந்து இயக்குநர் என்.பி.இஸ்மாயில் இயக்கியுள்ள நான்காவது படம் இது.

இத்திரைப்படம் விவசாயத்தையும், விவசாயிகளின் நலனையும் முன்னிறுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

எந்த வறுமை வந்தாலும் விவசாயத்தை விட்டுக் கொடுக்காமல் படித்த இளைஞர்களிடத்தில் விவசாயத்தை முன்னிருத்திச் சொல்லும் ஒரு எளிய விவசாயின் கதைதான் இத்திரைப்படம்.

“உழவன் இல்லாத உலகம் உனக்கு ஒரு பிடி சோறு எப்படி கிடைக்கும்…?”

“மண்ணுண்டு நீருண்டு விதையுண்டு.. மனிதா மனம் கொண்டு உழைத்தாலே.. கிடைக்காத பலன்தான்…” என்ற பாடல் வரிகள் இதயங்களில் இடம் பிடிக்கும்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சேலம் அருகே உள்ள தீர்த்தமலை, வேடகட்டுமடுவு ஆகிய கிராமங்களில் நடைபெற்றபோது உள்ளூர் பள்ளி மாணவர்களும் தலைமை ஆசிரியரும் படப்பிடிப்பிற்கே வந்தனர். வந்த மாணவர்களுக்கு விவசாயம் பற்றி வகுப்பும் எடுத்துள்ளார் இயக்குநர் இஸ்மாயில்.

பழனி, சேலம், தர்மபுரி, அரூர் அருகே உள்ள தீர்த்தமலை, வேடகட்டுமடுவு ஆகிய ஊர்களில் தொடர்ந்து 45 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்தது.

படம் விரைவில் வெளியாகவுள்ளது.

Related posts

Leave a Comment