தங்கலான் பட விமர்சனம் 3.5/5… GOLDEN BOY

 ஆங்கிலேயர்களிடமிருந்து தன் மக்களை மீட்டெடுக்க தன் வாழ்வாதாரத்திற்காக தங்கத்தை தேடி செல்லும் தங்கலான்..

கதை…

1850 இந்தியாவில் தங்க வேட்டைக்காக வாழ்ந்த காலகட்டம் அது..

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் இந்தியர்கள் அடிமைப்பட்டு கிடந்த காலகட்டம் அது.. அப்போது பல சூழ்ச்சிகளால் தங்கள் நிலத்தை இழக்கிறார் தங்கலான் (விக்ரம்)… மேலும் மிராசுதார் பண்ணையார்களிடம் அடிமைப்பட்டு கிடைக்கின்றனர்.

தங்கள் வாழ்வாதாரத்திற்காக விவசாய மற்றும் கூலி வேலைகளை செய்து வருகின்றனர்.. இந்த சூழ்நிலையில் தங்க வேட்டைக்காக பிரிட்டிஷ் ஆட்சியர் விக்ரமை அழைக்கிறார்.

இதனால் தினமும் கூலியும் கிடைக்கிறது.. ஒரு கட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் நன்மதிப்பை பெறுகிறார் விக்ரம்.. எனவே அவரின் நிலத்தை மீட்டெடுக்கவும் அவரின் வாழ்க்கை தரமும் உயர்கிறது.

இந்த சூழ்நிலையில் தன் மக்களையும் அழைத்துக் கொண்டு மீண்டும் தங்க வேட்டைக்காக புறப்படுகிறார் விக்ரம்.. ஆனால் அப்பொழுதுதான் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் சுயரூபம் தெரிய வருகிறது..

அதன் பிறகு விக்ரம் என்ன செய்தார்? சிக்கிக்கொண்ட தன் மக்களை மீட்டெடுத்தாரா? என்பதுதான் மீதிக்கதை..

நடிகர்கள்…

தங்கலான்.. தமிழ் சினிமாவுக்கு கிடைத்த தங்கமான நடிகர் விக்ரம் என்று இந்த படத்தின் மூலம் அடித்து சொல்லலாம்.. படத்தின் ஆரம்பக் காட்சி முதல் கிளைமாக்ஸ் காட்சி வரை தாங்கி நிற்கிறார் தங்கலான்..

இந்த கேரக்டருக்காக நீண்ட தலை முடி.. தாடி வழுக்கை தலையில் கொஞ்சம் முடி, கோவணம் கட்டிய தேகம் அதற்கு ஏற்ற உடல் மொழி என அனைத்தையும் அர்ப்பணித்து ஒரு தங்கலானாகவே வாழ்ந்து நம்மை வியக்க வைத்திருக்கிறார் சீயான் விக்ரம்..

தங்கலானின் மனைவி கங்கம்மாவாக பார்வதி.. ஜாக்கெட் போடாத மார்பகம் வெறும் சேலை மட்டுமே கட்டிக்கொண்டு அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் பூ பார்வதி.. கணவனின் ஆசைக்காக குழந்தை மேல் குழந்தை பெற்றுக் கொண்டு இடுப்பில் ஒரு குழந்தை.. களங்கமில்லாத உள்ளம்.. கரை பட்ட பற்கள் என பட்டைய கிளப்பியிருக்கிறார்.. அடுப்புகரி வைத்து பல் தேய்க்கும் அந்த காட்சியே அசத்தல்..

சூனியக்காரி ஆராத்தியாக மாளவிகா மோகன்… இவருக்கு காட்சிகள் குறைவு என்றாலும் இவர் கத்தும் அந்த காட்டு கத்தல் காட்சியே தியேட்டரை அதிர வைக்கிறது.. இவரது மேக்கப் மட்டுமே இரண்டு மணி நேரம் கூட ஆகியிருக்கலாம்..

நாராயணதாசனாக பசுபதி.. இவரது காட்சி ஜாதி பேசியிருக்கிறது.. அதை ரஞ்சித் வழக்கம் போல குறைத்து இருக்கலாம்.. தன் சாதியை உயர்த்தி பிராமணர்களை மட்டுமே கிண்டல் அடிப்பது ஏனோ??

ஹாலிவுட் நடிகர் டேனியிலும் தன் பங்குக்கு இந்திய நடிகர்களுடன் போட்டி போட்டு தன் திறமையை காட்டி இருக்கிறார் அவரது கொடூர முகமும் கொஞ்ச இரக்க குணமும் நம்மை கவரும்..

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ரஞ்சித் இயக்கிய பல படங்களில் இருந்து தங்கலான் வேறுபட்டு இருந்தாலும் அவரது வழக்கமான சாதி பற்றிய படம் தான் இதுவும்.. 1800 களில் இருந்த அரசியல், பீரியட் டிராமா என பூர்வக்குடி மக்களின் வாழ்க்கை என பல முலாம்கள் பூசி இருந்தாலும் தங்கலானுக்கு கொஞ்சம் ஜாதி இருப்பதை மறுக்க முடியாது..

நடிகர்களுக்கு இணையாக படத்தை தூக்கி நிறுத்தியவர்கள் 4 பேர்.. அதில் இயக்குனர் ரஞ்சித்.. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்.. ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார் மற்றும் கலை இயக்குனர் மூர்த்தி..

அறுவடை & மினுக்கி பாடல்கள் பட்டைய கிளப்பு இருக்கிறது.. பாம்பு சீரும் காட்சிகள்.. காட்டெருமை காட்சிகள் என ஒவ்வொரு காட்சியிலும் பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார் இசையும் பலர் ஜீவி பிரகாஷ்..

ஒவ்வொரு காட்சியிலும் குறைந்தபட்சம் 100 பேர் நிறைந்திருப்பார்கள் ஒவ்வொருவருக்கும் மேக்கப் போட்டு அவர்களை நிறுத்தி வைப்பதே பெரிய வேலையாகும்.. அதை கலை இயக்குனரும் காஸ்ட்யூம் டிசைனரும் அர்ப்பணிப்புடன் செய்திருப்பது ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது..

லைவ் சவுண்ட் என்பதால் படங்களில் நிறைய காட்சிகளில் வசனங்கள் புரியவில்லை.. முக்கியமாக விக்ரமே மற்றொரு கேரக்டர் பேசும் வசனங்கள் எதுவும் புரியவில்லை.. அதுபோல பசுபதி கேரக்டரும் வாயில் எதை வைத்துக் கொண்டு பேசுவது போலவே இருப்பதால் அவரது வசனங்களும் புரியவில்லை..

இந்த பிரம்மாண்ட படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜாவுடன் இணைந்து தயாரித்திருக்கிறார் நீலப் புரொடக்ஷன் சார்பாக இயக்குனர் பா ரஞ்சித்.. தங்கள் படைப்பில் எந்த சமரசம் செய்து கொள்ளாமல் நம் முந்தைய தமிழர்கள் வாழ்வியலை அழகாக கொடுத்திருக்கின்றனர்..

இடைவேளைக்கு முன்பு வரை இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் குறைவு.. முக்கியமாக ஃபிளாஷ்பேக் காட்சிகள் தேவையற்ற ஒன்றாகவே கருதப்படுகிறது

ரஞ்சித்தின் தரமான படைப்பு மற்றும் வெற்றி பட வரிசையில் இந்த படம் முன்னணியில் நிற்கும்..

ஆக தங்கலான்.. கோல்டன் பாய்

Related posts

Leave a Comment