ரகு தாத்தா பட விமர்சனம் 3/5.. ஹிந்தி தெரியாது போயா..

 1970- களில் தமிழகத்தில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்ட நடந்த காலத்தில் நடக்கும் கதையாக அமைந்துள்ளது.

கதை…

வள்ளுவன்பேட்டையில் உள்ள வங்கி ஒன்றில் பணிபுரிகிறார் கீர்த்தி சுரேஷ்.. ஆணாதிக்கத்தை எதிர்த்து இவர் எழுத்தாளராகவும் பல கதைகளை எழுதி வருகிறார். இவரது தாத்தா எம் எஸ் பாஸ்கர் வழியில் ஹிந்தியை எதிர்த்து போராடியும் வருகிறார்..

இந்த சூழ்நிலையில் தாத்தாவுக்கு கேன்சர் நோய் தெரிய வருகிறது.. தான் இறப்பதற்குள் பேத்தி கீர்த்திக்கு திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என எண்ணுகிறார் எம் எஸ் பாஸ்கர்.

ஒரு காலகட்டத்தில் வங்கியில் ப்ரமோஷனுக்காக ஹிந்தியை கற்க வேண்டும் என்ற நிலை கீர்த்திக்கு வருகிறது..

அதன் பிறகு என்ன ஆனது? புரட்சிப் பெண் எழுத்தாளர் கீர்த்தியின் நிலை என்ன.? ஹிந்தியை கற்றுக் கொண்டாரா? திருமணம் செய்து கொண்டாரா? என்பதெல்லாம் மீதிக்கதை.

நடிகர்கள்….

கீர்த்தி சுரேஷ், எம்எஸ் பாஸ்கர், தேவதர்ஷினி, ஜெயக்குமார், இஸ்மத் பானு ஆனந்தசாமி, ஆதிரா மற்றும் பலர்..

ஒட்டுமொத்த படத்தையும் தன் தோளில் சுமந்து இந்த ரகு தாத்தாவை நேர்த்தியான படைப்பாக கொடுத்திருக்கிறார் கயல்விழியாக நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ்.. நாயகி என்றால் ரொமான்ஸ் மட்டும் தான் செய்ய வேண்டும் தன்னால் காமெடியும் செய்ய முடியும் என்று படத்தை கலகலப்பு ஆக்கியிருக்கிறார் இவர்..

ஹிந்தியை எதிர்க்கும் போராட்ட குணம், கல்யாண வரனுக்காக காத்திருக்கும் பெண், ஆணாதிக்கத்தை எதிர்க்கும் பெண், தாத்தாவின் பாசத்திற்கு கட்டுப்பட்ட பேத்தி என வெளுத்து கட்டி இருக்கிறார்..

கீர்த்தி சுரேஷ் உடன் போட்டி போட்டுக் கொண்டு அவரது அண்ணி கதாபாத்திரத்தில் வெளுத்து கட்டி இருக்கிறார் இஸ்மத் பானு.. இவரது காமெடி கைதட்டல் பெற வைக்கிறது.. வழக்கமான தோழியாக வந்து தன் பங்கை நிறைவாக செய்திருக்கிறார் தேவதர்ஷினி.

கீர்த்தியின் அப்பாவாக ஜெயக்குமார் அம்மாவாக ஆதிரா மற்றும் தாத்தாவாக எம்எஸ் பாஸ்கர் மூவரும் கொடுத்த பாத்திரத்தில் ஜொலிக்கின்றனர்..

நாயகனாக தெலுங்கு நடிகர் ரவீந்திர விஜய் என்பவன் நடித்திருக்கிறார்.. கொஞ்சம் வில்லத்தனம் கலந்து மொட்டை கடிதாசி நபராக பொறுத்திரு செல்வா என்ற பாத்திரத்தில் அசத்தியிருக்கிறார்..

தொழில்நுட்ப கலைஞர்கள்…

‘கேஜிஎப், காந்தாரா’ படங்களைத் தயாரித்த ஹொம்பலே பிலிம்ஸ் நிறுவனம் இப்படம் மூலம் தமிழுக்கு வந்துள்ளது.. என்னதான் தமிழகத்தின் கதைக்களமாக படம் இருந்தாலும் தெலுங்கு நடிகர்களை மையப்படுத்தி கதையை நகர்த்தி இருப்பதால் சில காட்சிகளில் ஒன்று முடியவில்லை.

சான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.. 1970களில் உள்ள இசையை அவர் கொடுக்க முயற்சித்திருந்தாலும் எந்த ஒரு பாடலுமே கவர வில்லை.. பின்னணி இசை ஓகே.. ஒளிப்பதிவாளர் கலை இயக்குனர் பாராட்டுக்குரியவர்கள்.. 1970 கால கட்டங்களை அப்படியே கண்முன் நிறுத்தி இருக்கின்றனர்.. அப்போது பயன்படுத்தப்பட்ட தபால் பெட்டி.. கடிதம் கண்ணாடி, ஆடை அலங்காரம், சிகை அலங்காரம், ஜன்னல் வீடு, தெருக்கள் வாகனங்கள் என அனைத்தையும் கண் முன் நிறுத்தி நம்மை அந்த காலகட்டத்திற்கு கொண்டு சென்று இருப்பது சிறப்பு.

பிளாக் காமெடி என்ற பெயரில் திரைக்கதை அமைத்து காட்சிகளை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர் சுமன் குமார்.. சில காட்சிகள் சிரிக்க வைத்தாலும் சீரியல் கதை போலவே நகர்கிறது.. ஆனால் கிளைமாக்ஸ் காட்சிகள் ஒட்டுமொத்தமாக தியேட்டரை தன் சிரிப்பலையில் அதிர வைத்திருக்கிறார் இயக்குனர்..

1960களில் பார்த்து ரசித்த நடிகைகளின் சாயலை கீர்த்தி சுரேஷ் கொண்டிருப்பதால் அந்த காலகட்டத்திற்கு செல்ல முடிகிறது.. ஹிந்தி எதிர்ப்பு என்ற பெயரில் மக்களை தூண்டிவிட்டு மக்களை போராட வைத்துவிட்டு மறைமுகமாக இந்தி கற்கும் சில முகங்களை அப்பட்டமாக காட்டியிருக்கிறார் இயக்குனர்..

இனியாவது இந்தப் படத்தை பார்த்து தமிழர்கள் ஹிந்தி கற்றுக் கொண்டால் தவறு இல்லை.. ஆனால் அதற்கு ஒரு விளக்கமாக ஹிந்தியை எதிர்க்கவில்லை ஹிந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம் என காட்சிகளை வைத்திருப்பது ஓவர் தான்…

Related posts

Leave a Comment