கதை…
டிமான்டி காலனி 2015 ஆம் ஆண்டு வந்தது.. அந்தப் படத்தில் நாயகன் அருள்நிதி இறப்பதாக கிளைமாக்ஸ் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.. அப்படி இருக்கையில் இந்த படம் எப்படி தொடங்கும் என ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் இருக்கும்.. அதை அழகாகவே திரைக்கதை அமைத்து ரசிகர்களை சீட்டு நுனியில் உட்கார வைக்கும் அளவுக்கு திகில் விருந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.
ஆறு வருடங்களுக்கு முன்பு மரணம் அடைந்த தன் கணவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக நினைத்து அவரது ஆவியுடன் பேச முற்படுகிறார் பிரியா.. முதலில் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் அப்பா அருண் பாண்டியன் வேறு வழியின்றி மகளுக்காக ஒத்துக் கொள்கிறார்..
அதன்படி ஆவிகளுடன் பேசுவதற்காக ஆவிகள் உலகில் நுழைந்த பிரியா அவர்கள் அருள்நிதி ஆவியை நிஜ உலகிற்கு அழைத்து வருகிறார்.
நிஜ உலகில் அருள்நிதியின் (இரட்டை பிறவி) அண்ணன் சொத்துக்காக தன் தம்பியை கொல்ல நினைக்கிறார்.. நீங்கள் இருவரும் இரட்டையர்கள் உங்கள் தம்பி இறந்தால் நீங்களும் இறந்து விடுவீர்கள் என்கிறார் பிரியா.
அப்படி என்றால்? என்ன நடந்தது? நிஜ உலகிற்கும் ஆவி உலகத்திற்கும் என்ன சம்பந்தம்? என்பதெல்லாம் படத்தின் மீதி கதை.
நடிகர்கள்…
அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன், முத்துக்குமார், பிக் பாஸ் புகழ் அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன், செரிங் டோர்ஜி உட்பட பலர்..
திரில்லர் பேய் படங்களுக்கும் அருள்நிதிக்கும் அப்படி என்னதான் பொருத்தமோ தெரியவில்லை.. அவருக்கு இது பக்காவாக செட்டாகி விடுகிறது.. அசத்தியிருக்கிறார் அருள்நிதி.. அதுவும் இந்த படத்தில் இரட்டை வேடம் என்பதால் இரண்டிலும் ஸ்கோர் செய்து இருக்கிறார்.. அழகான நாயகி ப்ரியா இருந்தும் எந்த ரொமான்ஸ்சும் இல்லாமல் கொடுத்த வேலையை திரில்லராகவே செய்து முடித்திருக்கிறார்..
தன் கணவனை தேடி ஆவி உலகிற்கு சென்றது முதல் கிளைமாக்ஸ் வரை பிரித்து மேய்ந்திருக்கிறார் பிரியா பவானி சங்கர்..
அர்ச்சனா, மீனாட்சி, அருண்பாண்டியன், முத்துக்குமார் உள்ளிட்டோர் கதாபாத்திரங்கள் கதை ஓட்டத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது..
தொழில்நுட்ப கலைஞர்கள்…
ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன்.. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்க சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார்..
15 ஆம் நூற்றாண்டில் நடந்த ஒரு கதையை கிளைமாக்ஸில் காட்டில் டிமான்டி காலனி மூன்றாம் பாகத்திற்கு கோடிட்டு இருக்கிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.. வழக்கமான பேய் படங்கள் இருந்து மாறுபட்டு முதல் பாகத்தையும் மூன்றாம் பாகத்தையும் இணைத்து இந்த இரண்டாம் பாகத்தை வித்தியாசமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர்..
பேய் படங்களுக்கே உரித்தான இசையை மிரட்டலாக கொடுத்திருக்கிற ஷாம் சி எஸ் பல இடங்களில் கைத்தட்டல் பெரும் இசை என்றாலும் சில இடங்களில் இரைச்சலை குறைத்து இருக்கலாம்.. ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணனின் பங்கு படத்திற்கு பேரு உதவி செய்திருக்கிறது.. பேய் பங்களா முதல் ரெஸ்டாரன்ட் என அனைத்திலும் தன் பங்களிப்பை சிறப்பாக கொடுத்து இருக்கிறார்..
கிராபிக்ஸ் காட்சிகளில் கூடுதல் கவனம் கொடுத்திருக்கலாம் இயக்குனர்.. மற்றபடி மிரட்டலான பேய் படங்கள் ரசிகர்களுக்கு திரில்லர் விருந்துதான்.. அதை சிறப்பாகவே இந்த ஆகஸ்ட் 15ல் கொடுத்து சுதந்திர பேயாக உலாவ விட்டிருக்கிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.