ஒளிப்பதிவு மசோதாவை கண்டிக்கும் கலைஞர்களுக்கு எதிராக பாஜக கலைஞர்கள்

2019 ஆம் ஆண்டும் பிப்ரவரி 12 ஆம் தேதி மாநிலங்களவையில் ஒளிப்பதிவு திருத்தமசோதாஅறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது மீண்டும் 2021-இல் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது

 இந்தத் திருத்தச் சட்டப்படி ஒரு முறை தணிக்கைக்கு உள்ளான திரைப்படங்கள் மீண்டும் தணிக்கை செய்ய கோர முடியும்.

இதனையடுத்து ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021-ஐ பொதுமக்கள் கருத்திற்காக மத்திய அரசு கடந்த சூன் 18 அன்று வெளியிட்டு அது சம்பந்தமாக ஜூலை 2 வரை பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது

வழக்கம்போலவே தமிழ்சினிமா தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள் இதை பற்றிய புரிதல் இல்லாமை, இதனால் நமக்கு என்ன நஷ்டம் என்கிற மனநிலையில் இருந்ததாகவே தெரிகிறது
பொதுவாக தமிழ் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் இது போன்ற அறிவுசார்ந்த விஷயங்களில் செயல்பட யாராவது ஒருவர் தூண்டும் சக்தியாக இருக்க வேண்டியுள்ளது சுயமாக கருத்து சொல்லவோ, விமர்சிக்கவோ தகுதியுள்ள நபர்கள் இங்கு மிக மிக குறைவாகவே உள்ளனர் என்கின்றனர் திரைப்பட துறைசார்ந்த ஆய்வாளர்கள்
கமலஹாசன், சூர்யா, இயக்குநர்கள் வெற்றிமாறன் போன்றவர்களே தங்கள் தொழில்சார்ந்த விஷயங்களில் மத்திய மாநில அரசுகள் எடுக்கும் எதிர் நடவடிக்கைகளுக்கு எதிராக கருத்து சொல்லவும், விமர்சிக்கவும் தயாராக உள்ளனர் பல இயக்குநர்களுக்கும் முன்ணணி நடிகர்களுக்கும் இது பற்றிய தீவிரம் தெரியாமல் கமல்ஹாசன், சூர்யா ஆகியோரின் பதிவுகளுக்கு பின் இயக்குநர்கள் அமீர், கார்த்திக் சுப்புராஜ்ஆகியோர் அவசர அவசரமாக தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர்
எந்த பிரச்சினையாக இருந்தாலும் அறிக்கை கொடுப்பதில் அசராத மூத்த இயக்குநரும் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவருமான பாராதிராஜா இந்த விஷயத்தில் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை ஆனால் அச்சங்கத்தின் நிர்வாகிகளான அம்மா கிரியேஷன்ஸ் சிவா, சுரேஷ் காமாட்சி, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் தங்கள் எதிர்ப்பை தங்களது முகநூல், ட்விட்டர் மூலமாக பதிவு செய்திருந்தனர்.
தமிழ் சினிமாவில் மூத்த அமைப்பாக தாய் சங்கமாக கருதப்படும் தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் தூக்கம் கலைந்து சூலை 2 ஆம் தேதி
ஒன்றிய தகவல் ஒளிபரப்புத்துறை இயக்குநருக்கு தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக அதன் தலைவர் முரளி அனுப்பியுள்ள கடிதத்தில், சுமார் 4000 தயாரிப்பாளர்கள் தங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டியிருப்பதால் கருத்துத் தெரிவிக்கும் கால அவகாசத்தை இன்று கடைசி என்பதை மாற்றி இன்னும் 60 நாட்கள் அவகாசம் தரும்படி கேட்டிக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது
இந்நிலையில் ஒளிப்பதிவு வரைவு மசோதாவுக்கு நடிகர் சூர்யா எதிர்ப்பு தெரிவித்துதனது ட்விட்டர் பக்கத்தில்  “சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தைக் காப்பதற்காக, அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல. இன்றுதான் கடைசி நாள். உங்கள் ஆட்சேபணையைத் தெரிவியுங்கள்” என்று பதிவிட்டு, இந்த மசோதா குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கான இணையதளப் பக்கத்தைப் பகிர்ந்திருந்தார்
இதற்கு தனதுடுவிட்டரில் பதில் கூறியுள்ள முன்னாள் நடிகையும், பா.ஜ., பிரமுகருமான காயத்ரி ரகுராம்
சட்டம் என்பது நீங்கள் விரும்பியபடி அணிய உங்கள் சட்டை அல்ல. கருத்து சுதந்திரம் நமக்குத் தேவை. ஆனால் நம் தேசத்துக்கும், நமது கலாச்சாரத்துக்கும், எந்த மதத்துக்கும் எதிராகச் சென்று நமது அமைதியைக் குலைக்க, அதை தவறாகப் பயன்படுத்த முடியாது.

உதாரணமாக, நீங்கள் மோடிஜிக்கு எதிராக செல்வது என்ற பெயரில், நீங்கள் இந்தியாவிற்கும் மக்களுக்கும் எதிராக செல்கிறீர்கள் எல்லாவற்றுக்கும் உங்கள் பொது வாழ்க்கை மற்றும் புகழுக்காக. உங்கள் பேச்சில் நல்ல நடிப்பைத் தவிர வேறு எந்த உண்மையும் இல்லை. பஞ்ச் டயலாக்கிற்கு பதிலாக உண்மைகளுடன் பேசுங்கள். இது திரைப்படத் துறையை எந்த வகையில் பாதிக்கிறது? விசில் மற்றும் கைதட்டல்களுக்கு இளம் மனதை சிதைப்பது முக்கியமல்ல. தேச பாதுகாப்பு முக்கியம். தேசபக்தி முக்கியமானது. உண்மை முக்கியமானதுஎன பதிவிட்டுள்ளார்.இதேபோன்று கார்த்திக் சுப்பராஜூம் இந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அதற்கு, எப்படியும் இந்த நாட்களில் எந்த திரைப்படத்திலும் கருத்து இல்லை. உங்கள் படங்களில் 4 சண்டைக் காட்சிகளும், 4 பாடல்களும், 4, சென்டிமென்ட் காட்சிகளும், 2 மாஸ் ஓப்பனிங் காட்சிகளும், ரவுடிகள் மட்டும் ஹீரோக்கள். வேறு எதுவும் இல்லை.

இதில் உங்களுக்கு இன்னும் என்ன கருத்து சுதந்திரம் வேண்டும்? என பதிவிட்டுள்ளார்
ஒளிப்பதிவு வரைவு மசோதாவுக்கு எதிராக திரைப்படகலைஞர்கள்
கருத்து கூறியுள்ளது பற்றிஇரண்டு முறை தணிக்கை குழு உறுப்பினராக இருந்த நடிகரும், தயாரிப்பாளரும் பாஜக உறுப்பினருமான நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளதாவது
நல்லவன் என்றைக்காவது போலீஸ்காரரைப் பார்த்து பயந்தது உண்டார். நல்லவர்களை நலம் விசாரித்துவிட்டுவிட்டுப் போய் விடுவார்கள திருடன், ரௌடிதான் போலீசாரைப் கண்டு பயப்படுவான் அப்படித்தான் மத்திய அரசு கொண்டுவர இருக்கும் ஒளிப்பதிவுதிருத்த சட்டம் 2021 பார்த்து பலரும் பயப்படுகின்றனர்
இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பவர்கள், சமூக அமைதிக்கு குந்தகம் குந்தகம்விளைவிக்ககூடிய காட்சிகளை அமைத்து படம் எடுப்பவர்கள், சட்டம் ஒழுங்குக்கு கேடு விளைவிப்பவர்கள் இந்திய சட்டதிட்டங்களுக்கு எதிராக படம் எடுப்பவர்களுக்கு இந்த சட்டதிருத்தத்தால் சிக்கல்தான் சினிமாவில் உள்ள பலர் தணிக்கை சட்டங்கள் என்ன என்பதை தெரிந்துகொள்ளாமலேயே படம் எடுத்து சிக்கலில் மாட்டிக்கொள்ளும்போது கதறுவது பலகாலமாக நடந்துவருகிறது
30 கோடி மக்கள்தொகை இருந்தபோது போட்ட அதே சட்டங்களை 130 கோடி பேர் இருக்கும்போது மாற்றக்கூடாது என்று சொல்வது அறியாமை அல்லது அகந்தை தனிமனித ஒழுக்கத்துடன், கட்டுப்பாடுகளுடன் சினிமாவை கலையாக நேசித்து ஒரு நேர்மையான வியாபாரமாக நினைப்பவர்களுக்கு இந்த சட்டம் அந்த பாதிப்பையும் தராது
அடுத்தவன் பணத்தில் நம் தாய்நாட்டுக்கு எதிரான கருத்துக்களை உலகம் முழுவதும் கொண்டு செல்ல மோடி அரசு அனுமதிக்கவில்லை என்ற ஆத்திரத்தின் வெளிப்பாடே கருத்து சுதந்திரம் நசுக்கப்படுகிறது என சிலர் கோஷம் எழுப்புவது
 இனி பொழுதுபோக்கு அம்சம் உள்ள படம் எடுக்கலாம், நாட்டை துண்டாடக்கூடிய எண்ணத்தோடு படம் எடுக்க முடியாது இதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும் இல்லை எதிர்ப்பேன் என்று சொல்லி வீராவேசம் பேசி ஊரைவிட்டு போய் விடுவேன் சினிமா எடுக்க மாட்டேன் என்று சொன்னால் அதை தாராளமாகச் செய்யலாம் அதனால் எதுவும் கெட்டுப் போய் விடாது தியாகராஜ பாகவதர், சிவாஜி, எம்.ஜி.ஆர் போன்ற ஜாம்பவான்கள் இன்று இல்லை ஆனாலும் சினிமா படம் வந்து கொண்டுதான் இருக்கிறது என்று எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்

 

Related posts

Leave a Comment