ரசிகர் மரணம் ; வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய ஜெயம் ரவி

  சென்னை எம் ஜி ஆர் நகர் ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தில் தலைவராக இருந்த, சென்னை கே கே நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ராஜா (வயது 33) அவர்கள் சமீபத்தில் உடல் நலக்குறைவால் காலமானார். ஜெயம் ரவி மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவரான ராஜா, ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல நற்பணிகள் செய்து வந்தார். தனது ரசிகனின் திடீர் மரணத்தை அறிந்த ஜெயம் ரவி, ராஜாவின் வீட்டுக்குச் சென்று, அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் குடும்பத்திற்கு எந்த உதவியானாலும் தான் செய்து தருவதாக உறுதியளித்தார்.

Read More

பெண்களின் பிரச்சனையைப் பேச வரும் “தீட்டு” ஆல்பம் பாடல்

பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் விடுதலைக்காகவும் ஏராளம் பேசியவர் பெரியார். மனிதர்களுக்குள் ஜாதி பார்த்து ஒருவரிடம் மற்றவர் பேதம் காட்டி நடத்துவது மட்டுமே தீண்டாமை அல்ல, வீட்டுக்குள்ளேயே பெண்களை அவர்களது உடலியல் காரணங்களுக்காக ஒதுக்கி வைப்பதும் தீண்டாமை என்று கூறியவர் பெரியார். சமுதாயத்தின் சம பங்கு வகிக்கும் பெண்களைத் தங்கள் வீட்டுக்குள்ளேயே மாதவிடாய்க் காலங்களில் ஒதுக்கித் தனிமைப்படுத்துவது அறிவியலுக்கு எதிரானது அல்லவா? இப்படிப் பெரியாரின் கருத்தை ஆமோதித்தும், அறிவியல் உண்மையை உயர்த்திப் பிடித்தும் பெண்களைப் போற்றும் விதத்தில் ‘தீட்டு’ என்கிற பாடல் ஆல்பம் உருவாகியுள்ளது. ‘தீட்டு’ ஆல்பத்தின் பாடலைப் பற்றி இயக்குநர் நவீன் லஷ்மன் கூறியதாவது, “நமது அறிவார்ந்த முன்னோர்கள் இயற்கையான பெண்களின் உடலியல் மாற்றமான மாதவிலக்கு காலங்களில் அவர்களுக்கு ஏற்படும் சோர்வையும் மன அழுத்தத்தையும் போக்கும் விதத்தில் அவர்களது அவஸ்தையைப் புரிந்து கொண்டு பெண்களின் வசதிக்காக ஓய்வு கொடுக்கும்…

Read More