கார்த்தி பிறந்தநாளில் நலத்திட்ட பணிகளுக்கு களம் காணும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர்கள் வெறும் ரசிகர்கள் மட்டுமில்லாமல் மாவட்டம் தோறும் பொது மக்களுக்கு பல நல்ல காரியங்களை செய்பவர்களாகவும் இருக்கிறார்கள். வருகிற மே 25 ஆம் தேதி நடிகர் கார்த்தி பிறந்தநாள் கொண்டாட இருக்கிறார். இதற்காக இவரது ரசிகர்கள் தமிழகம் முழுக்க 300க்கும் மேற்பட்ட நலத்திட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் 25க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன. முதலாவதாக மே 12 ஆம் தேதி (நேற்று) சென்னையில் உள்ள வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம், திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் நீர் மோர் வழங்குதல், முதியோர் இல்லத்தில் அன்னதானம், குழந்தைகள் காப்பகத்தில் அன்னதானம் ஆகியவை வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து மே-19, மே-26…

Read More

சீன அனிமேஷன் நகைச்சுவை திரைப்படமான BOONIE BEARS: GUARDIAN CODE

இது, அறிவியல் புனைக்கதையின் அடிப்படையில் உருவாகியுள்ள சீன அனிமேஷன் நகைச்சுவைத் திரைப்படமாகும். பூனி பியர்ஸ் தொடரில் வெளியாகும் ஒன்பதாவது படமிது. இப்படத்தை Lin Yongchang-உம், Shao Heqi-உம் இயக்கியுள்ளனர். இளம் வயது ப்ரையரும் ப்ராம்பளும், கிரிஸ்டல் பீக்ஸ் காட்டில் ஏற்படும் காட்டுத்தீயில் தங்கள் தாயை இழக்கின்றனர். பல வருடங்களுக்குப் பிறகு, அவர்கள் இருவரையும் ரோபோட் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அழைத்துச் செல்கிறார் விக். அங்கே, எதிர்பாராத விதமாகத் தங்கள் தாயைப் பற்றிய செய்தி ஒன்றினைக் கேள்விப்படுகின்றனர். எப்படியாவது தங்கள் தாயைக் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் எனத் தீர்மானித்து, சார்லோட்டைச் சந்திக்கிறார்கள். அவளுடைய ஆம்பர் கல் அவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது. ஸ்க்ராப் ரெபல் கும்பலால் சார்லோட் கடத்தப்பட்டபோது, சகோதரர்களான ப்ரையரும் ப்ராம்பளும் விக்குடன் இணைந்து, அவளை மீட்பதற்காக ஆபத்தான பயணத்தை மேற்கொள்கிறார்கள். அந்தச் சவாலான பயணத்தின் நடுவில், கரடி சகோதரர்களின்…

Read More