மேக்கப் கலையில் சந்தோஷி நடத்திய ஒருநாள் செமினார்!

தமிழில் பாபா, உன்னை சரணடைந்தேன், வீராப்பு, மிலிட்டரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சந்தோஷி.. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்த இவர், அதன்பிறகு சின்னத்திரை தொடர்களிலும் நுழைந்து ஒரு கை பார்த்தார். ருத்ர வீணை, அரசி, இளவரசி, பொண்டாட்டி தேவை, வாழ்க்கை உள்ளிட்ட பல நெடுந்தொடர்களில் நடித்த இவர் ‘இளவரசி’ சீரியலில் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் நடித்தார். அதன்பிறகு ஒரு கட்டத்தில் தனக்கு ஃபேஷன் டிசைனிங் வேலைகளில் அதிக ஆர்வம். இருந்ததால் ஆறு வருஷத்துக்கு முன்பு, தனது கணவருடன் சேர்ந்து `PLUSH Boutique & Beauty Lounge’ கடையை சென்னையில் தொடங்கினார்.. இது மணமகளுக்கான ஆடைகள், மேக்கப், ஆபரணங்கள்னு எல்லாமே கிடைக்கிற பிரத்யேக ஷோரூம். வெட்டிங் போட்டோகிராபியும் இதன் இன்னொரு சிறப்பம்சம்.. தற்போது சென்னையில் இரண்டு, மதுரையில் ஒன்று என மொத்தம்…

Read More